பிஎஸ்என்எல் வழங்கும் பம்பர் பிளான்... டேட்டா பிரச்னையே வராது!

BSNL Best Data Packs: பிஎஸ்என்எல் வழங்கும் இரண்டு டேட்டா திட்டங்கள் மற்ற நிறுவனங்களை விட சிறந்த பலன்களை வழங்குகிறது. அவை குறித்து இதில் காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Sep 24, 2023, 09:47 PM IST
  • பிஎஸ்என்எல் பல்வேறு சிறந்த திட்டங்களை வழங்குகிகது.
  • இந்த இரண்டு டேட்டா திட்டங்களில் ஓடிடி வசதிகள் இல்லை.
  • இந்த திட்டங்களுக்கு அடிப்படை பிளான் தேவை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
பிஎஸ்என்எல் வழங்கும் பம்பர் பிளான்... டேட்டா பிரச்னையே வராது! title=

BSNL Best Data Packs: பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல், தற்போது சந்தையில் அதன் இருப்பை நிலைநிறுத்தவும் அதன் பயனர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்கவும் புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த வரிசையில், பிஎஸ்என்எல் நிறுவனம் இப்போது இரண்டு புதிய திட்டங்களை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. அதுகுறித்து இத்தொகுப்பில் காணலாம்.  

இந்த ரீசார்ஜ் திட்டங்களின் விலை ரூ.411 மற்றும் ரூ.788 ஆகும். இந்த இரண்டு திட்டங்களும் 180 நாட்கள் வரை செல்லுபடியாகும். இந்த புதிய திட்டங்களில் அதிவேக டேட்டா வழங்கப்படுகிறது. இந்த ரீசார்ஜ் திட்டங்கள் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் போன்ற போட்டி நிறுவனங்களுக்கு கடும் தலைவலியை கொடுக்கும் என கூறப்படுகிறது. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த புதிய திட்டத்தில் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

BSNL ரூ. 411 திட்டம்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த திட்டத்தின் கால வரம்பு 90 நாட்கள் ஆகும். இந்த திட்டத்தில் தினசரி 2GB டேட்டா (மொத்தம் 180GB டேட்டா) வழங்கப்படுகிறது. முன்கூட்டியே டேட்டா தீர்ந்துவிட்டால், டேட்டா வேகம் 40kbps ஆக குறைக்கப்படும். இருப்பினும், வரம்பற்ற அழைப்பு அல்லது ஓடிடி போன்ற பலன்கள் இந்த பேக்கில் வழங்கப்படவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 

மேலும் படிக்க | '100 ஜிபி டேட்டாவுடன் OTT இலவசம்' ஜியோ மற்றும் Vi-ன் சூப்பர் பிளான்கள்

BSNL ரூ. 788 திட்டம்

இந்த பேக்கின் செல்லுபடியாகும் காலம் 180 நாட்கள். இதில் தினமும் 2GB டேட்டா கிடைக்கும். அதாவது, பிஎஸ்என்ல் நிறுவனம் இந்த பேக்கில் மொத்தம் 360GB டேட்டாவை வழங்குகிறது. மேலே உள்ள திட்டத்தைப் போலவே, இதிலும் டேட்டா வரம்பு நிறைவடைந்த பிறகு வேகம் 40kbps ஆகிவிடும்.

பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்திய இந்த இரண்டு புதிய பேக்குகளும் டேட்டா வவுச்சர்கள் ஆகும். இந்த வவுச்சர்களை ஏற்கனவே உள்ள ப்ரீபெய்ட் திட்டங்களுடன் பயன்படுத்தலாம். இந்த இரண்டு வவுச்சர்களும் நாட்டின் அனைத்து வட்டங்களிலும் கிடைக்கும்.

ஜூன் மாதத்தில் அறிமுகமான வேறு திட்டங்கள்

அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் இந்த ஆண்டு ஜூன் மாதம் இரண்டு புதிய ப்ரீபெய்ட் பேக்குகளை அறிமுகப்படுத்தியது. அதன் விலை ரூ.599 மற்றும் ரூ.769. ஆகும். ரூ.599 திட்டத்தை பார்த்தால், இது சூப்பர்ஃபாஸ்ட் டேட்டா மற்றும் 100 SMS மற்றும் வரம்பற்ற அழைப்புகளை வழங்குகிறது. இதில், Zing Caller Tune, Astrotell மற்றும் GameOn சந்தா போன்ற பலன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் கால வரம்பு 84 நாட்கள்.

இப்போது ரூ.769 ப்ரீபெய்ட் திட்டத்தை பார்த்தால், இந்த திட்டத்தில் தினமும் 2GB டேட்டா மற்றும் 100எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இந்த பேக்கில் வரம்பற்ற அழைப்பு வசதி உள்ளது. இது தவிர, BSNL ட்யூன்களுடன், Hardy Mobile Game, Lokdhun+Zing மற்றும் GAMEUM பிரீமியம் கேமிங் ஆப் ஆகியவற்றின் சந்தா முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த ரீசார்ஜ் திட்டத்தின் வேலிடிட்டியும் 84 நாட்கள் ஆகும்.

மேலும் படிக்க | ரூ. 99 அன்லிமிடெட் டேட்டா... பலன்கள் அதிகரிப்பு - ஏர்டெல் நிறுவனத்தின் ஜாக்பாட் பிளான்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News