நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம் அனைத்தும் இலவசம் - ஜியோவின் அசத்தல் அறிவிப்பு

Free OTT Plans In Jio AirFiber: ரிலையன்ஸ் ஜியோவின் Jio AirFiber இணைப்பை பெறுவதன் மூலம் இணையம், வரம்பற்ற காலிங் மட்டுமின்றி பிரபல ஓடிடி தளங்களின் இலவச அணுகலை நீங்கள் பெறலாம். இதுகுறித்து இதில் முழுமையாக காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Nov 17, 2023, 01:33 PM IST
  • இது கடந்த செப். 19ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது.
  • தற்போது 115 நகரங்களில் இந்த சேவை கிடைக்கிறது.
  • வயர்லெஸ் இணைய இணைப்பை Jio AirFiber வழங்கும்.
நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம் அனைத்தும் இலவசம் - ஜியோவின் அசத்தல் அறிவிப்பு title=

Free OTT Plans In Jio AirFiber: நெட்பிளிக்ஸ், டிஸ்னி+ ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம் உள்ளிட்ட முன்னணி ஓடிடி தளங்களை இந்தியர்கள் பலரும் பயன்படுத்துகின்றனர். திரைப்படங்கள், வெப்சீரிஸ், ஆவணப்படங்கள் என ஒட்டுமொத்தமாக வெவ்வேறு ரசிகர்களுக்கான களங்களாக ஓடிடி தளங்கள் மாறிவிட்டன. இருப்பினும், இந்த தளங்களின் சந்தாவும் சற்று பட்ஜெட்டை பதம்பார்க்கும் வகையில் இருப்பதால் தொடர்ந்து இதனை பயன்படுத்த சிரமமப்படுகின்றனர். 

சமீப காலத்தின் இவற்றின் சந்தாவும் உயர்ந்துவிட்டன. எனவே, பல வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்த ஓடிடி தளங்களுக்கு இலவச அணுகலை தரும் ரீசார்ஜ் திட்டங்களை நோக்கி நகர்ந்து வருகிறார்கள். ஜியோ, ஏர்டெல், வோடோஃபோன் - ஐடியோ போன்ற நிறுவனங்கள் இந்த குறிப்பிட்ட வாடிக்கையாளர்களை கைப்பற்ற பல்வேறு வகையிலான ரீசார்ஜ் திட்டங்களை நடைமுறையில் வைத்துள்ளன. பட்ஜெட்டை பதம்பார்க்காமல் மற்ற சேவைகளுடன் ஓடிடி கிடைக்கும் மற்றொரு வசதியை ஜியோ நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. 

ஜியோ நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்திய Jio AirFiber திட்டங்களிலும் ஓடிடி சந்தாக்களை அளிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. Jio AirFiber மூலம் இணைய அணுகலை உங்களுக்கு வழங்குவது மட்டுமின்றி ஓடிடி அணுகலையும் இலவசமாக வழங்குகிறது. 

Jio AirFiber என்பது ரிலையன்ஸ் ஜியோவின் வயர்லெஸ் இணைய சேவையாகும். இது வேகமான இணைய இணைப்பை வழங்க 5ஜி தொழில்நுட்பத்தின் ஆற்றலைப் பயன்படுத்துகிறது. இது பாரம்பரிய ஃபைபர்-ஆப்டிக் இணைப்புகளுக்கு போட்டியாக வேகத்தை வழங்குகிறது. 1 Gbps வரை வேகத்தை அடையும். ஜியோவின் இந்த 5ஜி சேவை தடையற்ற அனுபவத்தை வழங்கும். இத்தோடு நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், டிஸ்னி+ ஹாட்ஸ்டார், சோனி லிவ், Zee5 மற்றும் மற்ற ஓடிடி செயலிகளையும் இலவசமாக பெறலாம். மேலும், இலவச வரம்பற்ற அழைப்பு வசதியும் கிடைக்கும். அந்த வகையில், Jio AirFiber வெவ்வேறு திட்டங்களை இங்கு காணலாம்.

மேலும் படிக்க | பட்ஜெட் விலையில் வருகிறது 5ஜி ஸ்மார்ட்போன்... சிறப்பம்சங்கள் என்னென்ன?

1199 ரூபாய் திட்டம்: 100 Mbps இணைய வேகத்தை வழங்கும் இந்தத் திட்டத்தில் 550+ டிஜிட்டல் சேனல்களுக்கான இலவச அணுகல் மற்றும் நெட்ஃபிளிக்ஸ், பிரைம் வீடியோ, டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ஜியோசினிமா பிரீமியம் மற்றும் பல போன்ற பல்வேறு ஓடிடி பயன்பாடுகளுக்கான சந்தாக்கள் அடங்கும்.

JioAir Fiber Max 1499 ரூபாய் திட்டம்: தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் இந்த சேவை கிடைக்கும், இந்த மேக்ஸ் திட்டம் 30 நாட்களுக்கு 300 Mbps இணைய வேகத்தை வழங்குகிறது. 550+ டிஜிட்டல் சேனல்கள் மற்றும் நெட்பிளிக்ஸ் பேஸிக், அமேசான் பிரைம், டிஸ்னி+ ஹாட்ஸ்டார், சோனி லிவ், Zee5 மற்றும் ஓடிடி தளத்திற்கான அணுகலை இது வழங்கும். 

JioAir Fiber Max 2499 ரூபாய் திட்டம்: 30 நாட்களுக்கு 500 Mbps இணைய வேகம் கொண்ட இந்தத் திட்டத்தில் 550+ டிஜிட்டல் சேனல்கள் மற்றும் ஓடிடி பலன்களை அளிக்கும். அதாவது நெட்பிளிக்ஸ் (Standard), அமேசான் பிரைம், டிஸ்னி+ ஹாட்ஸ்டார், சோனி லிவ், Zee5 மற்றும் பல ஓடிடி தளத்திற்கான அணுகல் அடங்கும்.

JioAir Fiber Max 3999 ரூபாய் திட்டம்: 30 நாட்களுக்கு அதிவேக 1 Gbps இணையத்தை வழங்கும் இந்தத் திட்டத்தில் 550+ டிஜிட்டல் சேனல்கள் மற்றும் நெட்பிளிக்ஸ் (Premium), அமேசான் பிரைம், டிஸ்னி+ ஹாட்ஸ்டார், சோனி லிவ், Zee5 மற்றும் பிற தளங்களின் அணுகல் கிடைக்கும். 

கிடைக்கும் நகரங்கள்

Jio AirFiber கடந்த செப். 19ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது 8 நகரங்களில் மட்டும் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 115 நகரங்களுக்கு விரிவுப்படுத்தியுள்ளது. இந்த 115 நகரங்கள் குஜராத், மகாராஷ்டிரா, தெலங்கானா, மேற்கு வங்கம், கர்நாடகா, தமிழ்நாடு, டெல்லி, ஆந்திரா ஆகிய மாநிலங்களை சேர்ந்ததாகும். 

இதில் தமிழ்நாட்டில் சென்னை, ஆம்பூர், செங்கல்பட்டு, கோயம்புத்தூர், ஈரோடு, ஓசூர், காஞ்சிபுரம், கரூர், கும்பகோணம், மதுரை, நாமக்கல், நெய்வேலி, பட்டுக்கோட்டை, பொள்ளாச்சி, சேலம், ஸ்ரீபெரும்புதூர், ஸ்ரீரங்கம், திருச்சிராப்பள்ளி, திருப்பூர், திருவள்ளூர், திருவண்ணாமலை மற்றும் வேலூர் உள்ளிட்ட நகரங்களில் Jio AirFiber சேவை கொண்டுவரப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | இது டிஸ்பிளேவே இல்லாத ஸ்மார்ட்போன்... ஆடையிலேயே ஓட்டிக்கலாம்! - மிரட்டும் AI Pin சாதனம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News