ரூ. 55 ஆயிரம் சாம்சங் மொபைல்... இப்போது ரூ. 21 ஆயிரம் தான் - பிளிப்கார்ட் கொடுக்கும் ஹாட் ஆப்பர்!

Samsung Galaxy S23 FE Discount Sale: பிளிப்கார்ட் தளத்தில் Samsung Galaxy S23 FE மொபைல் சுமார் 33 ஆயிரத்து 999 ரூபாய் தள்ளுபடியில் கிடைக்கிறது. 

Written by - Sudharsan G | Last Updated : May 3, 2024, 08:05 PM IST
  • இதன் அசல் விலை 54 ஆயிரத்து 999 ரூபாய் ஆகும்.
  • தள்ளுபடியால் 21 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.
  • பிளிப்கார்டில் இந்த தள்ளுபடி கிடைக்கிறது.
ரூ. 55 ஆயிரம் சாம்சங் மொபைல்... இப்போது ரூ. 21 ஆயிரம் தான் - பிளிப்கார்ட் கொடுக்கும் ஹாட் ஆப்பர்! title=

Samsung Galaxy S23 FE Discount Sale: ஆப்பிள், சாம்சங் ஆகியவை இந்தியாவில் அதிக ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் ஆகும். ஆப்பிள் மொபைல்கள் அனைத்தும் பிரீமியம் வகையிலானவை. அதாவது அவை விலை உயர்ந்த மாடலாகும். கடைசியாக வந்த லேட்டஸ்ட் மொபைலான ஆப்பிள் ஐபோன் 15 சீரிஸின் அனைத்து மாடல்களும் வாடிக்கையாளர்களிடையே கடும் வரவேற்பை பெற்றது. ஆப்பிள் ஐபோன் 15 சீரிஸ் விற்பனைக்கு பின் அதற்கு முந்தைய மாடல்களுக்கு பல ஆப்பர்களும் வந்தன. 

ஆப்பிள் ஐபோன் என்பது பிரீமியம் வகை மொபைல்களை வழங்கும் என்றால் சாம்சங் இந்தியாவில் அனைத்து விலை வகைமையிலும் விற்பனை செய்கிறது எனலாம். பட்ஜெட் மொபைல்கள் தொடங்கி பிரீமியம் மொபைல்கள் வரை என சாம்சங் விற்பனையில் மிரட்டி வருகிறது. சாம்சங் மொபைல்கள் நிச்சயம் இந்தியாவின் ஒவ்வொரு குடும்பத்தில் குறைந்தபட்சம் ஒருவராவது பயன்படுத்தப்பட்டிருக்கும். எனவே, சாம்சங் மொபைல்கள் மீதான நம்பகத்தன்மையும் அதிகம் உள்ளது. 

அந்த வகையில் கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் Samsung Galaxy S23 FE ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்த ஸ்மார்ட்போன் பாஸ்ட் சார்ஜிங் உடனும் 4,500 mAh பேட்டரியுடனும் வருகிறது. மூன்று பின்பக்க கேமரா அமைப்புடனும், AMOLED டிஸ்பிளே உடனும் இந்த மொபைல் வருகிறது. இந்த 8ஜிபி RAM மற்றும் 128ஜிபி இன்டெர்நல் ஸ்டோரேஜ் 128 ஜிபி உடன் வருகிறது. அந்த வகையில், Samsung Galacy S23 FE மொபைல் பிளிப்கார்ட் நிறுவனத்தின் பிக் சேவிங்ஸ் டேஸ் சேல் (Big Savings Sale) எனப்படும் விற்பனையில் தள்ளுபடி விலையில் வந்துள்ளது.

மேலும் படிக்க | Free, Free, Free! ரிலையன்ஸ் ஜியோவின் இந்த திட்டத்தில் Netflix, Amazon இலவசமாக பெறலாம்

Samsung Galaxy S23 Fe மொபைலுக்கு சாம்சங் நிறுவனம் தற்போது 33 ஆயிரத்து 999 ரூபாய் தள்ளுபடியை அறிவித்துள்ளது. அதன் 8ஜிபி + 128ஜிபி வேரியண்டின் அசல் விலை 54 ஆயிரத்து 999 ரூபாய் ஆகும். அதில் தற்போது தள்ளுபடியுடன் மொத்தம் 21 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதில் ஆயிரம் ரூபாய் கேஷ்பேக் ஆப்பரும் கொடுக்கப்படுகிறது. இந்த தள்ளுபடி விற்பனை என்பது நேற்று தொடங்கிய பிளிப்கார்ட் பிக் சேவிங்ஸ் டேஸ் சேல் விற்பனையில் கிடைக்கிறது. 

இந்த பிக் சேவிங்ஸ் டே சேல் விற்பனையில் இந்த Samsung Galaxy S23 Fe மொபைல் மட்டுமின்றி போகோ மற்றும் ரியல்மீ ஆகியவற்றின் மாடல்களிலும் பெரிய தள்ளுபடியை அறிவித்துள்ளன. பிளிப்கார்டை போலவே, அமேசான் கிரேட் சம்மர் சேல் தள்ளுபடி விற்பனை நேற்று தொடங்கியது. 

Samsung Galaxy S23 Fe மொபைல் கிரீம், கிராஃபைட், மிண்ட், பர்பிள், இண்டிகோ, டேங்கரின் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. பிளிப்கார்டில் கிடைக்கும் தள்ளுபடிகளை போலவே அமேசானிலும் பல மொபைல்களுக்கு ஆப்பர் உள்ளது. குறிப்பாக ஸ்மார்ட்போன் மட்டுமின்றி வீட்டு உபயோக பொருள்களில் இருந்து பல தயாரிப்புகளுக்கு 75 சதவீதம் வரை தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. 

Samsung Galaxy M15 5G, Poco M6 Pro 5G, Redmi Note 13 Pro+, Xiaomi 14, OnePlus 12, iPhone 15 Pro உள்ளிட்ட மொபைல்கள் அமேசான் கிரேட் சம்மர் சேல் தள்ளுபடி விற்பனையில் கிடைக்கிறது. 

மேலும் படிக்க | 84 நாள்களுக்கு இலவச நெட்பிளிக்ஸ்... 3ஜிபி + அன்லிமிடெட் 5ஜி டேட்டா - எகிறி அடிக்கும் ஏர்டெல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News