35 ஆயிரம் தள்ளுபடியில் ஆப்பிள் ஐபோன்14 இப்போது விற்பனை - பிளிப்கார்ட் ஆஃபர்

Flipkart iPhone Offer: பிளிப்கார்ட் ஆண்டு இறுதி விற்பனை கொண்டாட்டம் களைகட்டியிருக்கும் நிலையில் ஆப்பிள் ஐபோன் 14 பிளஸ் ரூ.35,250 தள்ளுபடிக்குப் பிறகு ரூ.31,749-க்குக் விற்பனையாகிறது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 11, 2023, 06:42 PM IST
  • ஆப்பிள் ஐபோன் 14 விற்பனை
  • 35 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி
  • சூப்பர் ஆஃபரை மிஸ் செய்துவிடாதீர்கள்
35 ஆயிரம் தள்ளுபடியில் ஆப்பிள் ஐபோன்14 இப்போது விற்பனை - பிளிப்கார்ட் ஆஃபர் title=

ஆப்பிள் ஐபோன் 14 பிளஸ் ஃபிளிப்கார்ட் ஆண்டு இறுதி விற்பனையில் மிகப்பெரிய தள்ளுபடியில் கிடைக்கிறது. ஃபிளிப்கார்ட் ஆண்டு விற்பனையில், ஆப்பிள் ஐபோன் 14 பிளஸ் உட்பட பல்வேறு பிரிவுகளில் உள்ள எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு ஃபிளிப்கார்ட் சிறந்த சலுகைகளை வழங்குகிறது. ஆப்பிள் ஐபோன் 14 பிளஸ் கடந்த ஆண்டு வாடிக்கையாளர்களிடமிருந்து அதிக கவனத்தை ஈர்க்கவில்லை. ஆனால் ஆப்பிள் ஐபோன் 15 தொடர் வெளியான பிறகு ஃபிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் இந்த ஆண்டு அற்புதமான வரவேற்பைப் பெற்றது. 

மேலும் படிக்க | தெறிக்கும் புது லுக்கில் Apache RTR 160... சென்னையில் என்ன விலை தெரியுமா?

ஆப்பிள் ஐபோன் 14 பிளஸ் பேஸிக் மாடலுக்கு ரூ.89,900 என்ற தொடக்க விலையில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் ஆப்பிள் ஐபோன் 15 பிளஸ் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, நிறுவனம் ஃபோனின் விலையை ரூ.10,000 குறைத்தது. தற்போது ஃபிளிப்கார்ட் கொடுக்கும் அனைத்து சலுகைகளும் கிடைக்கப்பெறுபவர்கள் ரூ.35,250 தள்ளுபடிக்குப் பிறகு நீங்கள் ஐபோன் 14 பிளஸை வெறும் ரூ.31,749க்குப் பெறலாம். அடிப்படை விலையில் இருந்து பிளிப்கார்ட் இப்போது ரூ.12,901 தள்ளுபடியை கொடுக்கிறது. 

இதன்பிறகு ஆப்பிள் ஐபோன் 14 பிளஸ் தற்போது ரூ.66,999க்கு விற்பனையாகிறது. இதற்கு மேலாக, வாங்குபவர்கள் 9 மாதங்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட காலத்திற்கு HDFC வங்கி கிரெடிட் கார்டு EMI-ல் ரூ.750 தள்ளுபடி பெறலாம். இது ஆப்பிள் ஐபோன் 14 பிளஸின் விலையை ரூ.66,249 ஆகக் குறைக்கிறது. இதைத் தவிர, பழைய ஸ்மார்ட்போனுக்கு மாற்றாக வாங்குபவர்கள் ரூ.34,500 வரை தள்ளுபடி பெறலாம். அனைத்து சலுகைகள் மற்றும் வங்கி தள்ளுபடிகளுடன், ஃபிளிப்கார்ட் சலையில் வாங்குபவர்கள் ஆப்பிள் ஐபோன் 14 பிளஸை வெறும் ரூ.31,749க்குப் பெறலாம். ஆப்பிள் ஐபோன் 14 பிளஸ் நீலம், ஊதா, மிட்நைட், ஸ்டார்லைட் மற்றும் சிவப்பு என ஐந்து வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. 

இதில் 6.7-இன்ச் சூப்பர் ரெட்டினா XDR டிஸ்ப்ளே உள்ளது. ஸ்மார்ட்போன் ஆப்பிள் ஐபோன் 13 புரோ மாடல்களில் காணப்படும் மேம்படுத்தப்பட்ட A15 பயோனிக் சிப் மூலம் இயக்கப்படுகிறது. கேமராக்களைப் பொறுத்தவரை, ஆப்பிள் ஐபோன் 14 பிளஸ் 12MP முதன்மை சென்சார் மற்றும் அல்ட்ரா-வைட் சென்சார் கொண்ட டூயல் பேக் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. ஆப்பிள் ஐபோன் 14 பிளஸ் 5 ஜி திறன் கொண்டது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 26 மணி நேரம் வரை நீடிக்கும் என்று ஆப்பிள் கூறுகிறது.

மேலும் படிக்க | வழக்கமான மொபைல் வச்சுக்க சலிப்பா இருக்கா... இந்த ஸ்டைலிஷ் மொபைல்களை வாங்கலாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News