ஆகஸ்ட் மாதம் அதிகம் விற்பனையான கார்களின் பட்டியல் இதோ

August Car Sales: கடந்த மாதம், அதிகம் விற்பனையான 10 கார்களில் 8 கார்கள் மாருதி சுஸுகி நிறுவனத்தை சேர்ந்தவை.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 8, 2023, 07:54 AM IST
  • மாருதி ஃபிராங்க்ஸ் ஆகஸ்ட் 2023 இல் 12,164 யூனிட்டுகளை விற்று ஒன்பதாவது இடத்தைப் பிடித்தது.
  • இந்த மாடல் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டது.
  • மாருதியின் ஈகோ 11,859 யூனிட்களை விற்பனை செய்து பத்தாவது இடத்தில் உள்ளது.
ஆகஸ்ட் மாதம் அதிகம் விற்பனையான கார்களின் பட்டியல் இதோ title=

கார் விற்பனை அறிக்கை ஆகஸ்ட் 2023: ஆகஸ்ட் 2023 இந்திய ஆட்டோமொபைல் துறைக்கு ஒரு சிறந்த மாதமாக இருந்தது. எப்போதும் போலவே இந்த முறையும் மாருதி சுஸுகி முதல் இடத்தில் உள்ளது. கடந்த மாதம், அதிகம் விற்பனையான 10 கார்களில் 8 கார்கள் மாருதி சுஸுகி நிறுவனத்தை சேர்ந்தவை. மற்ற இரண்டு கார்களில் ஒரு ஹூண்டாய் மற்றும் ஒரு டாடா கார் உள்ளன. 

மாருதி ஸ்விஃப்ட் முன்னணியில் உள்ளது

ஆகஸ்ட் 2023 இல், மாருதி ஸ்விஃப்ட் 18,653 கார்கள் விற்பனையாகி, சிறந்த விற்பனையான கார்களில் முதலிடத்தில் உள்ளது. இது ஆகஸ்ட் 2022ஐ விட 65.44% அதிகமாகும். டாப் 10 கார்களின் பட்டியலில் இதற்கு 12.99% பங்கு உள்ளது. இதற்குப் பிறகு, மாருதி சுசுகி பலேனோ இரண்டாவது இடத்தில் உள்ளது. இது ஆகஸ்ட் 2023 இல் 18,516 யூனிட்களை விற்றது, இது ஆகஸ்ட் 2022 இல் விற்பனையான 18,418 யூனிட்களை விட 0.53% அதிகம் ஆகும்.

வேகன் ஆர் விற்பனை குறைந்தது

ஒருபுறம், மாருதி சுஸுகி தனது ஆதிக்கத்தைத் தக்க வைத்துக் கொண்டாலும், மறுபுறம், அதன் சில மாடல்களின் விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளது. ஆகஸ்ட் 2023 இல் 15,578 வேகன் ஆர் விற்பனையானது. இது ஆகஸ்ட் 2022 இல் விற்கப்பட்ட 18,398 யூனிட்களை விட 15.33% குறைவாகும். இதேபோல், மாருதி பிரெஸ்ஸாவும் 14,572 யூனிட்களை விற்று விற்பனையில் சரிவைக் கண்டது. இது கடந்த ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது 4.09% குறைவாகும்.

மேலும் படிக்க | அற்புதமான வடிவமைப்பைக் கொடுத்த மஹிந்திரா ஸ்கார்பியோ-என் பிக்கப் டிரக்

பஞ்ச் நெக்ஸனை பின்னுக்குத்  தள்ளியது

டாடாவின் அதிகம் விற்பனையாகும் கார் நெக்ஸன் ஆகஸ்ட் 2023 இன் முதல் 10 கார்களின் பட்டியலில் கூட இடம் பெறவில்லை. ஏனெனில் புதிய நெக்ஸன் செப்டம்பர் 14 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. பஞ்ச் 14,523 யூனிட்களை விற்று, நெக்ஸனை பின்னுக்குத் தள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்தைப் பிடித்தது. ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் மாருதி டிசையர் ஆகியவை முறையே ஆறாவது மற்றும் ஏழாவது இடத்தில் உள்ளன. ஹூண்டாய் க்ரெட்டா ஆகஸ்ட் 2023 இல் 13,832 யூனிட்களை விற்றது, இது கடந்த ஆண்டின் இதே மாதத்தை விட 9.98% அதிகமாகும். அதே நேரத்தில் மாருதி டிசையர் 12.01% அதிகரித்து 13,293 யூனிட்களை விற்றது. மாருதி எர்டிகாவும் ஆண்டுக்கு ஆண்டு 32.22% வளர்ச்சியைப் பதிவுசெய்தது. இது ஆகஸ்ட் 2022 இல் விற்கப்பட்ட 9,314 யூனிட்களுடன் ஒப்பிடும்போது ஆகஸ்ட் 2023 இல் 12,315 யூனிட்களை விற்றுள்ளது. இது பட்டியலில் எட்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதன் பன்முக வடிவமைப்பு மற்றும் விசாலமான உட்புறம் இது பட்டியலில் இடம் பிடிக்க முக்கிய காரணமாகும். 

ஃபிராங்க்ஸ் ஒன்பதாவது இடத்தைப் பிடித்தது

மாருதி ஃபிராங்க்ஸ் ஆகஸ்ட் 2023 இல் 12,164 யூனிட்டுகளை விற்று ஒன்பதாவது இடத்தைப் பிடித்தது. இந்த மாடல் இந்த ஆண்டு  ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டது. மாருதியின் ஈகோ 11,859 யூனிட்களை விற்பனை செய்து பத்தாவது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் இதன் விற்பனை 1.17% குறைந்துள்ளது. மொத்த விற்பனையைப் பற்றி பேசினால், ஆகஸ்ட் 2023 இல் இந்தியாவில் முதல் 10 கார்களின் மொத்த எண்ணிக்கை 143,549 யூனிட்டுகளாக இருந்தது, இது ஆகஸ்ட் 2022 ஐ விட 9.63% அதிகம் ஆகும். பட்டியலில் அடிக்கடி மாருதி சுசுகி இருப்பது இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பிராண்டின் வலுவான பிடியை பிரதிபலிக்கிறது. வரும் மாதங்களில் இந்த கார்களின் விற்பனை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | கார் விலை 211 கோடி ஆனா ரெண்டே ரெண்டு சீட் தான்! ஆனா காரை வாங்க போட்டியும் பலமாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News