டிரம்ப் - கிம் ஜோங்-கின் சந்திப்பு மே மாதம் உறுதி-வெள்ளை மாளிகை!!

அமெரிக்க அதிபர் டிரம்ப் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இடையே மே மாதம் நடைபெறும் சந்திப்புக்கு வெள்ளை மாளிகை உறுதி அளித்துள்ளது.

Last Updated : Apr 10, 2018, 07:53 AM IST
டிரம்ப் - கிம் ஜோங்-கின் சந்திப்பு மே மாதம் உறுதி-வெள்ளை மாளிகை!!   title=

அமெரிக்க அதிபர் டிரம்ப் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இடையே மே மாதம் நடைபெறும் சந்திப்புக்கு வெள்ளை மாளிகை உறுதி அளித்துள்ளது.

வடகொரியா தலைவர் கிம்ஜோங் உன் மற்றும் அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப்பும் மே மாதம் சந்தித்து சந்தித்து பேச உள்ளனர். வரலாற்று சிறப்புமிக்க இந்த சந்திப்பின் மூலம் பல்வேறு முக்கிய நிகழ்வுகள் நடைபெறும் என வெள்ளை மாளிகை உறுதி அளித்துள்ளது.

ஏவுகணை சோதனை மற்றும் அணு சோதனை நடத்திவந்த வடகொரியா தலைவர் கிம் ஜோங் உன், இதனை குறைத்துக் கொள்ளப்போவதாக அறிவித்தார். இந்நிலையில், தென்கொரியா அமைதி குழுவினர் கடந்த வாரம் வடகொரியா தலைவர் கிம்ஜோங் உன்னை சந்தித்தனர். இதனை அமெரிக்க அதிபர் டெனால்டுடிரம்ப் வெகுவாக பாராட்டியுள்ளார்.

இது தொடர்பாக ஆலோசிக்க தென்கொரியா தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சூங்-இல் யோங்க், அமெரிக்கா சென்று அதிபர் டெனால்டு டிரம்ப்பை சந்தித்தார். பின்னர் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி,வட கொரியா தலைவரை தென்கொரியா குழுவினர் சந்தித்தது குறித்து டெனால்டு டிரம்ப் பாராட்டினார்.

இதன் மூலம் அணு சோதனை குறைப்பு நடவடிக்கையில் கிம்ஜோங் உன் இறங்கியுள்ளதை தெரிவித்தேன். பின்னர் வட கொரிய தலைவர் கிம்ஜோங் உன் டிரம்ப்பை சந்திக்க விருப்பம் தெரிவித்திருப்பதாக கூறினேன். டிரம்ப்பும் சந்திக்க தயார் என்றார். 

இதுதொடர்பாக, ஐ.நா.சபை பொது செயலாளரின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக் கூறுகையில், மே மாதம் நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் சந்திப்பு வரவேற்கத்தக்கது. இந்த சந்திப்பின் மூலம் கொரிய தீபகற்பத்தில் ஏற்பட்டுள்ள பதற்றம் தணிந்து அமைதி நிலை திரும்பும் என குறிப்பிட்டுள்ளார்.

Trending News