பொது இடங்களில் மரண தண்டனை, கசையடி... தாலிபானை கண்டித்துள்ள ஐநா!

ஆப்கானிஸ்தானில் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சியைப் பிடித்த சிறிது நேரத்திலேயே தலிபான்கள் கசையடி கொடுத்து கொல்லுதல், கல் எறிந்து கொல்லுதல், பொது இடங்களில் தூக்கில் இடுதல் போன்ற கொடூரமான தண்டனையை வழங்கத் தொடங்கினர்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 8, 2023, 11:17 PM IST
  • இஸ்லாமிய சட்டமான ஷரியா சட்டத்தை அமுல்படுத்தி கடுமையான கட்டுப்பாடுகளையும், தண்டனைகளையும் தாலிபான்கள் நிறைவேற்றி வருகின்றனர்.
  • தாலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு பெண்கள் உரிமை அனைத்தும் பறிக்கப்பட்டு விட்டது.
  • 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்க படைகள் முழுமையாக ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறியது.
பொது இடங்களில் மரண தண்டனை, கசையடி... தாலிபானை கண்டித்துள்ள ஐநா! title=

காபூல்: 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்க படைகள் முழுமையாக ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறியது. இதையடுத்து, அங்கிருந்த ஜனநாயக ஆட்சி கவிழ்க்கப்பட்டு, தாலிபான் ஆட்சியை பிடித்தது. இந்த ஆட்சி மாற்றத்திற்குப் பின் ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து மனித உரிமை மீறல் தொடர்பான புகார்கள் எழுந்து வருகின்றன. ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தை கைப்பற்றியதில் இருந்து பொதுவில் மரணதண்டனை, கசையடிகள் மற்றும் கல்லெறிதல் போன்ற செயல்களை தலிபான்கள் மேற்கொள்வதற்காக, ஐநா தான் வெளியிட்ட அறிக்கையில் கடுமையாக விமர்சித்தது. மேலும், அத்தகைய கொடூரமான நடவடிக்கைகளை நிறுத்துமாறு நாட்டின் ஆட்சியாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் உள்ள ஐக்கிய நாடுகளின் உதவிக் குழுவின் (UNAMA) அறிக்கையின்படி, கடந்த ஆறு மாதங்களில் மட்டும் ஆப்கானிஸ்தானில் 274 ஆண்கள், 58 பெண்கள் மற்றும் இரண்டு சிறுவர்கள் பொது மக்கள் முன் பகிரங்கமாக கசையடி கொடுத்து கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர். ஏஜென்சியின் மனித உரிமைத் தலைவர் பியோனா ஃப்ரேசர் இது குறித்து கூறுகையில், "உடல் ரீதியான தண்டனை சித்திரவதைக்கு எதிரான உடன்படிக்கையை மீறுகிறது. இது நிறுத்தப்பட வேண்டும்" என்றார். மரண தண்டனையை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். 

மனித உரிமைத் தலைவர் கருத்துக்கு பதிலளித்த தலிபான் வெளியுறவு அமைச்சகம், ஆப்கானிஸ்தானின் சட்டங்கள் இஸ்லாமிய விதிகள் மற்றும் வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப இருப்பதாகவும், ஏராளமான ஆப்கானிஸ்தான் குடிமக்கள் இந்த விதிகளை பின்பற்றுவதாகவும் கூறியது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “சர்வதேச மனித உரிமைகள் சட்டத்திற்கும் இஸ்லாமிய சட்டத்திற்கும் இடையே மோதல் ஏற்படும் பட்சத்தில், இஸ்லாமிய சட்டத்தை பின்பற்றுவதில் அரசு உறுதியாக உள்ளது” என்று தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | ஒவ்வொரு ஆறு மணி நேரத்திற்கும் ஒருவருக்கு தூக்கு! ஈரானில் நடக்கும் கொடூரம்!

திங்களன்று வெளியிடப்பட்ட ஐநா அறிக்கை, ஆகஸ்ட் 2021 இல் ஆட்சிக்கு வருவதற்கு முன்னும் பின்னும் தலிபான் நடவடிக்கைகளை விவரிக்கிறது. அறிக்கையின்படி, தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, வடக்கு கபிசா மாகாணத்தில் அக்டோபர் 2021ம் ஆண்டு முதல் பொதுக் கசையடிகள் நடத்தப்பட்டன. இதன்படி, இந்த வழக்கில், விபச்சாரத்தில் ஈடுபட்ட ஒரு பெண் மற்றும் ஒரு ஆணுக்கு மதகுருமார்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் முன்னிலையில் 100-100  கசையடிகள் கொடுக்கப்பட்டன.

2022 டிசம்பர் மாதத்தில் முதல் மரண தண்டனை  வழங்கப்பட்டது

தலிபான் அதிகாரிகள் கொலைக் குற்றவாளி ஒருவருக்கு, 2022 டிசம்பர் மாதம் நிறைவேற்றி, அவனை தூக்கிலிடப்பட்டனர்.  தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு பொது மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட முதல் வழக்கு இதுவாகும். பாதிக்கப்பட்டவரின் தந்தையின் துப்பாக்கி கொண்டு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.

மேற்கு ஃபரா மாகாணத்தில் மதகுருமார்கள் மற்றும் தலிபான் அதிகாரிகள் முன்னிலையில் நிறைவேற்றப்பட்டது. அரசாங்கத்தின் உயர்மட்ட செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித், இந்த தண்டனை நன்கு யோசித்து எடுக்கப்பட்ட முடிவு என்றும், நாட்டின் மூன்று உயர் நீதிமன்றங்கள் மற்றும் தலிபானின் உச்ச தலைவரான முல்லா ஹிபத்துல்லா அகுந்த்சாதாவால் அங்கீகரிக்கப்பட்டது என்றும் கூறினார்.ஆப்கானிஸ்தானில், குற்றங்களுக்கு மிக கொடூரமான தண்டனைகளை தாலிபான் அரசு வழங்குவதற்கும் மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவிக்கின்றன.

தாலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு பெண்கள் உரிமை அனைத்தும் பறிக்கப்பட்டு விட்டது. பல்கலைக் கழகங்களில் பெண்கள் படிக்கவும் பணியாற்ற கட்டுப்பாடுகளை தலிபான்கள் விதித்துவிட்டனர். இஸ்லாமிய சட்டமான ஷரியா சட்டத்தை அமுல்படுத்தி கடுமையான கட்டுப்பாடுகளையும், தண்டனைகளையும் தாலிபான்கள் நிறைவேற்றி வருகின்றனர்.

மேலும் படிக்க | விவாகரத்தை கொண்டாடியது ஒரு குற்றமா! விவாகரத்து கொண்டாட்டம் வினையான சோகம்!

மேலும் படிக்க | அமெரிக்காவின் வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு... 8 பேர் பலி... பலர் காயம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News