அபுதாபி இந்து கோவிலில் பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதி.. ஆனால் சில விதிமுறைகள் உண்டு

ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) அபுதாபியில் கட்டப்பட்ட அரபு நாட்டின் முதல் இந்து கோவில் வெள்ளிக்கிழமை பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது. இதனை பிரதமர் நரேந்திர மோடி, தனது அபுதாபி பயணத்தின் போது, பிப்ரவரி 14 அன்று திறந்து வைத்தார். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 2, 2024, 06:44 PM IST
அபுதாபி இந்து கோவிலில் பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதி.. ஆனால் சில விதிமுறைகள் உண்டு title=

ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) அபுதாபியில் கட்டப்பட்ட அரபு நாட்டின் முதல் இந்து கோவில் வெள்ளிக்கிழமை பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது. இதனை பிரதமர் நரேந்திர மோடி, தனது அபுதாபி பயணத்தின் போது, பிப்ரவரி 14 அன்று திறந்து வைத்தார். இந்தியாவிற்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கும் இடையிலான வலுவான நட்பை பிரதிபலிக்கிறது  என்பதோடு மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் மற்றும் சமூக ஒத்துழைப்பின் உணர்வைக் குறிக்கிறது.. சமூக ஊடகங்களில் தகவலைப் பகிர்ந்து கொண்டுள்ள, ​​​​BAPS என்னும் போச்சசன்வாசி அக்ஷர் புருஷோத்தம் சுவாமிநாராயண் சன்ஸ்தா  அதற்கான விதிமுறைகள் மற்றும் பிற தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளது.

அபுதாபி இந்து கோயில் (Abhu Dhabi Hindu Temple) ஒவ்வொரு நாளும் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை மக்களுக்காக திறந்திருக்கும் என்று போச்சசன்வாசி அக்ஷர் புருஷோத்தம் சுவாமிநாராயண் சன்ஸ்தா அமைப்பு கூறியுள்ளது. மேலும் கோயிலுக்கு வரும் பார்வையாளர்கள் , தடை மற்றும் புகைப்பட விதிகள் குறித்து தொடர்ச்சியான வழிகாட்டுதல்களை வழங்கியது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் கழுத்து, முழங்கை மற்றும் கணுக்கால் வரை உடலை மூடும்படியான உடைகளை அணிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொப்பிகள், டி - ஷர்ட்கள் மற்றும் பிறர் மனதை புண்படுத்தும் வடிவமைப்பு கொண்ட பிற ஆடைகள் அனுமதிக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒளிஊடுருவக்கூடிய அல்லது இறுக்கமான உடைகளுக்கும் அனுமதி இல்லை. கவனத்தை சிதறடிக்கும் சத்தம் அல்லது பிரதிபலிப்பை ஏற்படுத்தும் ஆடை மற்றும் ஆபரணங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் கோவிலின் வழிகாட்டுதல்களில் கூறப்பட்டுள்ளன.

மேலும் செல்லப்பிராணிகளை கோவில் வளாகத்திற்குள் நுழைவது தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் நிர்வாகம் தெரிவித்துள்ளது. வெளிப்புற உணவு மற்றும் பானங்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படாது என்றும் கோவில் வளாகத்திற்குள் ட்ரோன்களைப் பயன்படுத்துவது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது என்றும் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. கோவிலில் அமைதியான சூழலை பராமரிக்கவு, கோவில் வளாகத்தினை திறன்பட நிர்வகிக்கவும் இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டியது அவசியம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

மேலும் படிக்க | அபுதாபியில் பிரம்மாண்ட இந்து கோயிலை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

பழங்கால கட்டுமான முறைப்படி கட்டப்பட்டுள்ள இந்த ஆலயத்தின் கட்டுமானத்திற்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு நிலத்தை வழங்கிய நிலையில், ஏறக்குறைய 700 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த கோயில் 27 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஏழு நாடுகளை குறிக்கும் வகையில், கோவில் ஏழு கோபுரங்களைக் கொண்டுள்ளது. சுமார் 800 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த கோவிலில், உள்ள சிற்ப வேறுபாடுகள் கன்களையும், மனதையும் கொள்ளை கொள்ளும் வகையில் உள்ளன. ராஜஸ்தானில் இருந்து கொண்டுவரப்பட்ட மணல் கற்களால் ஆன வேலைப்பாடுகள், பளிங்கு கற்களால் ஆன வேலைப்பாடுகள் என கோவில் மிகப்பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது. இந்த கோவிலில், ஸ்ரீராமர், விநாயகப் பெருமான், ஐயப்பன் உள்ளிட்ட இந்து தெய்வங்களின் சிற்பங்கள் உள்ளன.

நாகரா கட்டிடக்கலை பாணியில் மணற்கல் மற்றும் பளிங்குக் கற்களைப் பயன்படுத்தி கோயில் கட்டப்பட்டுள்ளது. அபுதாபியில் உள்ள BAPS இந்து கோவில் வளைகுடா பிராந்தியத்தில் மிகப் பெரியது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் குறைந்தது 3.5 மில்லியன் இந்தியர்கள் உள்ளனர், அவர்கள் வளைகுடா நாட்டில் இந்திய பணியாளர்களின் ஒரு பகுதியாக உள்ளனர், துபாயில் மூன்று இந்து கோவில்கள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | பயணிகளின் கனிவான கவனத்திற்கு! ரயிலில் பயணிப்பவர்கள் எப்போது தூங்கக்கூடாது? தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News