200 துண்டுகளாக மனைவியை வெட்டிக்கொன்ற ராட்சசன்... நாயை வாஷிங் மெஷினில் போட்டும் கொலை!

World Bizarre News: மனைவியை 200 துண்டுகளுக்கும் மேலாக வெட்டி கொன்று, வளர்ப்பு எலியை மிக்ஸியில் போட்டு கொன்ற கொடூர சம்பவம் இங்கிலாந்தில் நடந்துள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Apr 7, 2024, 04:26 PM IST
  • கடந்தாண்டு இந்த கொலையை அவர் செய்துள்ளார்.
  • ஓராண்டாக குற்றத்தை ஒப்புக்கொள்ளாமல் இருந்துள்ளார்.
  • வளர்ப்பு எலி, நாய் குட்டி ஆகியவற்றை சித்ரவதை செய்து கொன்றுள்ளார்.
200 துண்டுகளாக மனைவியை வெட்டிக்கொன்ற ராட்சசன்... நாயை வாஷிங் மெஷினில் போட்டும் கொலை! title=

World Bizarre News: இங்கிலாந்தில் கொடூரமான ஒரு சம்பவம் நடந்தேறியுள்ளது. குறிப்பாக, 18 வயதுக்கும் குறைவானோர், இளகிய மனம் படைத்தோர், இதய நோய் உள்ளவர், ரத்த அழுத்தம் அதிகம் உள்ளவர்கள் இந்த சம்பவம் குறித்து படிக்க வேண்டாம் என்றே கூறுவேன். இந்த குற்றச்சம்பவம் கடந்தாண்டு நடந்துள்ளது என்றாலும் அதன் முழு பின்னணியும் தற்போதுதான் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் குறித்து இதில் முழுமையாக காணலாம். 

இங்கிலாந்தில் கடந்தாண்டு மார்ச் மாதம் நிக்கோலஸ் மெட்சன் (28) என்பவர் ஹோலி பிராம்லி (26) என்ற தனது மனைவியை கொலை செய்துள்ளார். இருப்பினும், இந்த குற்றத்தை கடந்த வெள்ளிக்கிழமை (ஏப். 5) அன்றுதான் ஒப்புக்கொண்டுள்ளார். அதாவது, குறிப்பாக கடந்த ஓராண்டு காலமாக அவர் செய்த குற்றத்தை ஒப்புக்கொள்ளவே இல்லை. 

கொலை செய்து ஜோக் அடித்த குற்றவாளி 

அதுமட்டுமின்றி, நிக்கோலஸ் "அவள் கட்டிலுக்கு அடியில்தான் எங்காவது ஒளிந்துகொண்டிருப்பாள்" என விசாரணையின்போது கூட போலீசாரிடம் ஜாக் அடித்துள்ளார். தற்போது மனைவியை கொன்றது அவர்தான் என குற்றம் நிரூபணமாகிய நிலையில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | சூரிய கிரகணம்.. தப்பி தவறிக்கூட இவற்றை செய்யாதீங்க... எச்சரிக்கும் நாஸா..!!

நிக்கோலஸ் அவரது பெட்ரூமில் மனைவியை பலமுறை கத்தியால் குத்தியுள்ளார். உடலை பாத்ரூமிற்கு எடுத்துச்சென்று அங்கு துண்டு துண்டாக வெட்டியுள்ளார். அந்த துண்டுகளை பிளாஸ்டிக் கவர்களில் போட்டி, சமையலைறையில் உணவுப் பொருள்களை சேமித்து வைக்கும் இடத்தில் மறைத்து வைத்துள்ளார். அதன்பின் அதனை அப்புறப்படுத்தி உள்ளார். போலீசாருக்கு இதுகுறித்து தெரியவருவதற்கு முன், அதாவது கொலை செய்து ஒரு வாரத்திற்கு பின் நிக்கோலஸ் தனது நண்பனுக்கு 50 ஈரோ டாலரை கொடுத்து உடலை அப்புறப்படுத்த உதவியுள்ளார். 

200 துண்டலாக வெட்டிய ராட்சசன்

அடுத்த நாள் அன்று, ஒரு பிளாஸ்டிக் கவர் அங்கிருந்த ஆற்றில் மிதந்து வருவதை பொதுமக்களில் ஒருவர் பார்த்துள்ளார். ஒரு கவரில் மனித கையும், மற்றொன்றில் பெண்ணின் வெட்டப்பட்ட தலையும் இருந்துள்ளது. அதன்பின், அங்கு ஆற்றில் ஆழ்நீச்சல் தெரிந்துவர்கள் உதவியுடன் 224 உடற்பாகங்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். 

இருப்பினும் இன்னும் சில பாகங்கள் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. அதாவது, எப்படி அந்த பெண் இறந்தாள் என்பதை கண்டுபிடிக்கவே கூடாது என்பதற்காக இந்த முறையில் 200க்கும் மேற்பட்ட துண்டுகளாக அவர் வெட்டியிருப்பது நீதிமன்ற விசாரணையில் தெரியவந்துள்ளது. 

மனைவி அளித் புகார் 

மனைவி பிராம்லி போலீசாருக்கு ஒருமுறை புகாரும் அளித்துள்ளார். அதாவது அவர் வீட்டில் வளர்க்கும் ஹாம்ஸ்டர் எலியை மிக்ஸி மற்றும் மைக்ரோவேவில் போட்டு அவர் கொலை செய்திருப்பதாக போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். தனது புதிய நாய்க்குட்டியை வாஷிங் மெஷினில் போட்டு கொலை செய்ததாகவும் கூறியுள்ளார். 

கடந்த ஆண்டு மார்ச் 24 ஆம் தேதி, லிங்கன்ஷைர் போலீசார் சில புகார்களின் அடிப்படையில் நிக்கோலஸின் வீட்டிற்கு போலீசார் வருகை தந்துள்ளனர். மெட்சன் கதவைத் திறந்தபோது, அவர் தனது மனைவியால் குடும்ப வன்முறைக்கு ஆளானதாகக் கூறியுள்ளார். மேலும், தனது கையில் மனைவி கடித்த தடயத்தையும் காட்டியுள்ளார். இருப்பினும் அந்த காயம் என்பது அவரது மனைவி நிக்கோலஸிடம் தப்பிக்க முயற்சி செய்தபோது தற்காப்புக்காக கடித்துள்ளார். அதன்பின் சில நாள்களில் அவர் கொலை செய்துள்ளார். 

மேலும் படிக்க | அதிர்ஷடம்னா இதுதான்... பட்டனை தப்பா அழுத்தியும் அடிச்சது லாட்டரி - கோடியில் புரளும் பெண்

ஏன் கொலை செய்தார்...?

போலீசார் வீட்டை சோதனையிட்டத்தில், குளியல்டப்பிற்கு அடியில் ரத்தக் கறையுடன் படுக்கைவிரிப்புகள் இருந்துள்ளன. மேலும் வீட்டு தளத்திலும் சில கருப்பு படிந்திருக்கிறது. அமோனியா, பிளீச்சிங் ஆகியவற்றின் நாற்றமும் அடித்துள்ளது. மனைவி குறித்து கேட்டதற்கு சில மகளிர் அமைப்பின் உதவியுடன் பிராம்லி வீட்டை விட்டுச் சென்றுவிட்டதாகவும் கூறியுள்ளார். 

வரும் திங்கட்கிழமை (நாளை) தான் அவருக்கான தண்டனை இறுதியாகிறது. இதுவரை எப்படி, ஏன் அவரது மனைவியை கொலை செய்தார் என்ற விவரம் வெளிவரவில்லை. இருப்பினும், குற்றவாளியின் வழக்கறிஞர் கூறுகையில், அவர் ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளார் எனவும் அதுவும் கொலைக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் கூறினார். 

கொலைக்கு பின் கூகுள் தேடல்

குறிப்பாக நீதிமன்ற விசாரணையின்போது பிராம்லியின் தாயார் நிக்கோலஸ் குறித்து வாக்குமூலம் அளித்துள்ளார். தனது பொண்ணுக்கும் இவனுக்கும் திருமணமாகி 16 மாதங்களே ஆனது என்றும் இந்த கொடூர அரக்கன் ஓராண்டாக தங்களின் குடும்பத்தையே சந்திக்கவிடவில்லை என்றும் கூறியுள்ளார். கொலை செய்த பின்னர் நிக்கோலஸ் கூகுளில் பின்வரும் தகவல்களை தேடியுள்ளார்: 'எனது மனைவி இறந்துவிட்டாள் எனக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?', 'இறந்த பிறகு யாராவது என்னை வந்து அச்சுறுத்துவார்களா?' என்ற தேடியுள்ளார். 

மேலும் படிக்க | காதலனுடன் ஆசிரியர் செய்த காரியத்தை பாருங்க... குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை - வாழ்நாள் தடை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News