முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியுமா? பொய் சொல்லி தலைகுனிந்த பாகிஸ்தான்!

Cash Strapped Pakistan In Problem : IMF இடம் சொன்ன பொய்யால் பாகிஸ்தான் அவமானப்பட்டு நிற்கிறது. இதனால் பாகிஸ்தான் மீண்டும் சர்வதேச அளவில் தலைகுனிய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 16, 2024, 12:37 PM IST
  • பாகிஸ்தானுக்கு பெயில் அவுட் தொகை
  • பாகிஸ்தானுக்கு இறுதி தவணை கிடைக்குமா?
  • அதிருப்தியில் சர்வதேச நாணய நிதியம்
முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியுமா? பொய் சொல்லி தலைகுனிந்த பாகிஸ்தான்! title=

Pakistan IMF Loan: அண்மையில் பாகிஸ்தானில் நடைபெற்ற தேர்தல்களுக்குப் பிறகு புதிய ஆட்சி பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தின் தயவில் ஷாபாஸ் ஷெரீப் (Shehbaz Sharif) இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்துள்ளார். சர்வாதிகாரம் கொண்ட அமைப்பாக பாகிஸ்தானில் செயல்படும் அந்நாட்டு இராணுவம், இரும்புக் கரம் கொண்டு அனைவரையும் அடக்கினாலும், ஏழ்மையையும் நிதி நிலையையும் கையாள முடியாமல் திணறுகிறது. 

நிலைமை மோசமாவதை மறைக்க பொய்களை நாட வேண்டிய நிலைமையில் இருக்கிறது. ஆனால் ‘பொய்யைச் சொன்னாலும் பொருத்தமாக சொல்லவேண்டும்’ என்பதை புரியாமல், சர்வதேச நாணய நிதியம் IMF இடம் சொன்ன பொய்யால் பாகிஸ்தான் அவமானப்பட்டு நிற்கிறது. இதனால் பாகிஸ்தான் மீண்டும் சர்வதேச அளவில் தலைகுனிய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது

IMF கடன் பிரச்சனை 
பாகிஸ்தான் கடன் வாங்கியது தொடர்பான தகவ்ல்கள் பாகிஸ்தான் செய்தித்தாள்களிலும் வெளியாகி உள்ளது. பாகிஸ்தானின் பிரபல ஊடக நிறுவனமான GEO NEWS இன் கட்டுரையில் சர்வதேச நாணய நிதியத்தின் குழுவினரிடம் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, IMF பாகிஸ்தான் அரசை கண்டித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

இஸ்லாமாபாத்தில் ஒரு வெளிநாட்டு குழுவினர், அந்நாட்டில் உள்ள அரசை எவ்வளவு அவமதித்ததும், அதற்கு பாகிஸ்தான் அரசால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்பதும் பாகிஸ்தானின் நிலை எவ்வளவு மோசமாகிவிட்டது என்பதற்கான உதாரணமாக உள்ளது. அப்படி என்ன நிலைமை ஏற்பட்டது? தெரிந்துக் கொள்வோம்.  

பிணை எடுப்பு நிதி 
கடந்த ஆண்டு சர்வதேச நாணய நிதியத்தால் ஒப்புக் கொள்ளப்பட்ட $3 பில்லியன் பிணை எடுப்புப் நிதியின் இறுதி தவணையான USD 1.1 பில்லியன் தொகையை வெளியிடுவதற்கு முன் பேச்சுவார்த்தை நடத்த சர்வதேச நாணய நிதியத்தின் குழு இஸ்லாமாபாத் சென்றுள்ளது. 

மேலும் படிக்க | உயிர்பலி வாங்கிய மூட நம்பிக்கை! மாந்திரீகம் செய்யவில்லை என நிரூபிக்க முயன்ற 50 பேர் மரணம்!

IMF அதிருப்தி

ஆனால், பேச்சுவார்த்தைக்கு முன்னதாகவே அனைத்து கட்டமைப்பு அளவுகோல்களையும் மற்றும் குறிகாட்டி இலக்குகளையும் அடைந்துவிட்டதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இதற்கு IMF தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது..

சர்வதேச நாணய நிதியம் கேள்வி
தங்களுடன் பேசாமலேயே எப்படி இந்த அறிக்கையை வெளியிட முடியும் என்று IMF அமைப்பின் நாதன் போர்ட்டரும் அவரது குழுவினரும் பாகிஸ்தானிடம் தங்கள் அதிருப்தியை தெரிவித்தனர். தேசிய பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளின் உத்தியோகபூர்வ தரவுகளை சர்வதேச நாணய நிதியத்தின் குழுவினர் பகுப்பாய்வு செய்த பின்னரே இது தொடர்பாக முடிவு செய்யப்படும், ஆனால், அவசரப்பட்டு எப்படி இந்த அறிக்கை வெளியிடலாம் என்று தற்போது சர்வதேச நாணய நிதியம் கேள்வி எழுப்பியுள்ளது, கடன் வாங்குவதில் சிக்கலை ஏற்படுத்துமோ என்ற பயத்தை பாகிஸ்தானுக்கு ஏற்படுத்தியிருக்கிறது.

IMF உடனான பேச்சுவார்த்தைக்கு ஒரு நாள் முன்னதாக பாகிஸ்தான் முறையான செய்திக்குறிப்பை வெளியிட்ட பாகிஸ்தான், இஸ்லாமாபாத் சர்வதேச நாணய நிதியத்தின் அனைத்து இலக்குகளையும் நிறைவேற்றியதாக பொய் கூறிவிட்டது. சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து புதிய உதவியைப் பெறுவதற்கு முன்பு, அனைத்து கட்டமைப்பு தரநிலைகள் மற்றும் பிற இலக்குகளை முடித்துவிட்டதாக அந்த செய்திக்குறிப்பு கூறுகிறது.  

பாகிஸ்தானை கண்டித்த IMF  
பாகிஸ்தானின் தி நியூஸ் இன்டர்நேஷனல்  (The News International) நாளிதழில் வெளியிடப்பட்ட கட்டுரையில், இலக்கை எட்டுவது தொடர்பாக சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானின் நிதி அமைச்சகத்தை கண்டித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஐஎம்எப் குழு மார்ச் 18ம் தேதி வரை பாகிஸ்தானில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.  தற்போது, அதிருப்தியில் இருக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் குழுவினர், கடன் தொடர்பாக என்ன நிபந்தனைகளை விதித்தாலும், அவற்றை இஸ்லாமாபாத் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுவிட்டது.  

மேலும் படிக்க | ரம்ஜானில் அதிகரித்த விலைவாசி! கிலோ வெங்காயம் ₹300! வாழைப்பழம் ₹200! பரிதாபத்தில் பாகிஸ்தான்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News