உயிரைப்பறித்த உடலுறவு! விபரீதத்தில் முடிந்த செக்ஸ் விளையாட்டு.. நடந்தது என்ன?

Latest News UK Woman Death : பலருக்கு உடலுறவின் போது, சில விளையாட்டுகளை செய்யப்பிடிக்கும். அப்படி ஒரு விளையாட்டு ஒரு இளம் பெண்ணின் உயிரையே பறித்திருக்கிறது.   

Written by - Yuvashree | Last Updated : May 27, 2024, 03:35 PM IST
  • உடலுறவின் போது உயிரிழந்த இளம் பெண்
  • விபரீதத்தில் முடிந்த விளையாட்டு
  • நடந்தது என்ன?
உயிரைப்பறித்த உடலுறவு! விபரீதத்தில் முடிந்த செக்ஸ் விளையாட்டு.. நடந்தது என்ன? title=

Latest News UK Woman Death : உடலுறவு என்பது சம்பந்தப்பட்ட இருவருக்கும் சுகத்தை கொடுக்க வேண்டும் என்பது அனைவருக்கும் இருக்கும் கருத்து. இதில் ஈடுபடும் இரு நபர்களில் யாரேனும் ஒருவருக்கு அசெளகரியம் ஏற்பட்டாலும் தாங்கள் செய்து கொண்டிருப்பதை நிறுத்தி விட்டு, அந்த பிரச்சனையை சரி செய்யும் வழியை பார்க்க வேண்டும். உடலுறவுக்கு முன்னரும், உடலுறவின் போதும் சூட்டை அதிகரிக்கும் வகையிலான விளையாட்டுகள் முக்கியம் என்றாலும் அவை அளவை மீறினால் உயிரையும் பறிக்கும் என்பதை எடுத்துக்காட்டுகிறது, இந்த சம்பவம். இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம். 

இங்கிலாந்தை சேர்ந்த பெண்:

இங்கிலாந்தில் (UK) வசித்து வந்த 26 வயது பெண், ஜார்ஜியா ப்ரூக் (Georgia Brooke). நடன கலைஞரான இவருக்கு 31 வயது நிரம்பிய லூக் கானோன் (Luke Cannon) என்ற காதலர் இருந்தார். இவர்கள், கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி உடலுறவு கொண்டுள்ளனர்.  ஆண்கள் சிலர், உடலுறவு கொள்ளும் சமயத்தில் தனக்கு எதிரில் இருக்கும் நபருக்கு மூச்சுத்திணறும் வகையில் அவர்களின் கழுத்தை பிடிப்பர் (Choking). இதை சில பெண்களும் விரும்புவர். இது போல, தனது காதலியை Choke செய்திருக்கிறார், லூக். இவர்கள் உடலுறவு கொள்வதற்கு முன்பு போதை பொருளை பயன்படுத்தி இருக்கின்றனர். 

உயிரிழந்த பெண்:

லூக், உடலுறவின் போது ஜார்ஜியாவின் கழுத்தை பிடித்ததில் அவர் மயங்கியிருக்கிறார். இதனால் பயந்து போன லூக், உடனே அவசர உதவி எண்ணை அழைத்து விவரத்தை கூறியிருக்கிறார். மயங்கிய அந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்கிறார்.

தற்கொலை செய்து கொண்ட காதலன்..!

பெண் உயிரிழந்த சம்பவம் கொலை குற்றமாக மாற, அவரது காதலனான லூக்கை போலீஸார் தேடியிருக்கின்றனர். ஆனால், தனது காதலி இறந்த செய்தி கேட்டவுடன் எங்கோ தப்பி ஓடிய காதலன், சில மணி நேரங்களிலேயே அந்த மருத்துவமனைக்கு அருகில் இருக்கும் ஒரு காட்டில், தூக்கிட்ட நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். 

எக்ஸ்பரிமண்ட்!

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைப்பெற்று வருகிறது. இதில், உயிரிழந்த பெண்ணும் சம்பந்தப்பட்ட காதலரும் உடலுறவின் போது என்னென்ன செய்ய வேண்டும் என்று பேசியதும், அதில் choking குறித்து பேசியிருப்பதும் தெரிய வந்திருக்கிறது. இவர், அந்த பெண்ணை கொல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் அவரது கழுத்தை நெறிக்கவில்லை என்றாலும், கொலை நடந்து விட்டதாகவும் அந்த பெண் உயிரிழந்திருப்பது இதனால்தான் என்றும் இந்த வழக்கில் விவாதிக்கப்பட்டிருக்கிறது. உடலுறவில் எக்ஸ்பரிமெண்ட் செய்ய எண்ணி, ஒரு உயிரே போயிருக்கும் சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. 

மேலும் படிக்க | மாமியாரை காதலித்த மருமகன்-மாமனாரே திருமணத்தை நடத்தி வைத்த வினோதம்! என்னடா நடக்குது இங்க?

கட்டுப்படுத்தும் குணாதிசயம்:

உயிரிழந்த பெண், ஜார்ஜியா ப்ரூக்கின் தாய் இந்த வழக்கில் தொடர்ந்து போராடி வருகிறார். குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் லூக், தனது மகளை என்ன ஆடை உடுத்த வேண்டும், எங்கு அமர வேண்டும் என அனைத்தையும் கட்டுப்படுத்தும் குணாதிசயம் கொண்டவராக இருந்ததாகவும், இவர்கள் 2021ஆம் ஆண்டு உறவில் இருந்த போது தனது மகளின் குணம் மாறியதாகவும் தெரிவித்திருக்கிறார். 

இந்த சம்பவம் குறித்து பேசி வரும் சமூக ஆர்வலர்கள், இது போன்ற பொறுப்பற்ற செயல்களால் உயிரே பாேகும் நிலை ஏற்படுவது கவலையை ஏற்படுத்துவதாக தெரிவித்து வருகின்றனர். 

மேலும் படிக்க | லவ் பண்லாமா வேணாமா...? கணவரின் ரகசிய காதலியை அறிந்த மனைவி - அப்புறம்தான் ட்விஸ்ட்டே!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News