மாரடைப்பால் உயிரிழந்த 6 வயது குழந்தை! கொடூர தந்தை கைது..நடந்தது என்ன?

6 Year Old Boy Died Of Heart Attack : அமெரிக்காவில், தனது 6 வயது குழந்தையை மாங்கு மாங்கென ஓட வைத்த தந்தையை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் என்ன நடந்தது என்பதை இங்கு பார்ப்போம்.   

Written by - Yuvashree | Last Updated : May 3, 2024, 02:56 PM IST
  • மாரடைப்பால் உயிரிழந்த 6 வயது குழந்தை
  • ட்ரெட்மில்லில் ஓடவைத்ததால் பரிதாபம்
  • தந்தை கைது! முழு விவரம்..
மாரடைப்பால் உயிரிழந்த 6 வயது குழந்தை! கொடூர தந்தை கைது..நடந்தது என்ன?  title=

6 Year Old Boy Died Of Heart Attack : “Every child deserves a parent, but not every parent deserves a child” என ஆங்கிலத்தில் ஒரு பழமொழி இருக்கிறது. இதற்கு அர்த்தம், அனைத்து குழந்தைகளுக்கும் பெற்றோருடன் இருப்பதற்கு தகுதி இருக்கிறது, ஆனால் அனைத்து பெற்றோருக்கும் குழந்தைகளை பெறுவதற்கான தகுதி இல்லை” என்பதுதான். இந்த வாசகத்தை நிரூபிக்கும் வகையில், குழந்தைகளுக்கு எதிராக சொந்த பெற்றோர்களே செய்யும் வன்கொடுமைகளை நாம் தினம் தோறும் செய்திகளாக பார்த்து வருகிறோம். அந்த வகையில், மனிதனின் மனதை நொருக்குவது போன்ற ஒரு சம்பவம்தான், தற்போது அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் நிகழ்ந்திருக்கிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம். 

மகனை ஓட வைத்த தந்தை:

அமெரிக்காவின் நியூஜெர்ஸி மாகானத்தை செர்ந்தவர், கிரிஸ்டோபர் க்ரெகர். 31வயது ஆகும் இவருக்கு 6 வயதில் கோரி மிக்கோலோ (Corey Micciolo) ஒரு மகன் இருந்தான். இந்த குழந்தை, கடந்த 2021ஆம் ஆண்டு உயிரிழந்தான். இந்த குழந்தையை, அவரது தந்தையே கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டு, தற்போது நீதிமன்றத்தில் வழக்கு நடைப்பெற்று வருகிறது. இந்த நிலையில், தனது குழந்தையை அவர் துன்புறுத்தும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

குற்றம் சாட்டப்பட்டிருக்கும் கிரிஸ்டோபர் க்ரெகர், தனது மகன் குண்டாக இருப்பதாக கூறி, அவரை ஜிம்மில் இருக்கும் ட்ரெட் மில்லில் (treadmill) ஓட வைத்திருக்கிறார். தற்போது வைரலாகும் அந்த வீடியோவில், தொடர்ந்து ஓடும் அந்த சிறுவன் ஒரு கட்டத்தில் ஓட முடியாமல் கீழே விழுகிறான். அவனை தூக்கி வலுக்கட்டாயமாக மீண்டும் அவனது தந்தை ஓட வைக்க முயற்சிக்கிறார். தொடர்ந்து சிறுவன் கீழே விழ, அவனை தூக்கி, அவன் தலையை கடித்து அந்த தந்தை மீண்டும் ஓட வைக்கிறார். சிறுவன் விழுவதும், அவனை மீண்டும் அவனது தந்தை ஓட வைக்க முயற்சிப்பதும் அந்த வீடியோவில் பதிவாகியிருக்கிறது.

மேலும் படிக்க | மாலத்தீவு செல்ல பிளானா... சுற்றுலா பயணிகள் மீது நடக்கும் தாக்குதல்கள்... எச்சரிக்கையா இருங்க!

மாரடைப்பால் உயிரிழந்த சிறுவன்:

இந்த வீடியோவில் இருக்கும் காட்சிகள் நடந்ததற்கு சில மணி நேரங்களுக்கு பிறகு, அந்த சிறுவன் பேச முடியாமலும் நடக்க முடியாமலும் தடுமாறியுள்ளான். இதையடுத்து அந்த சிறுவனுக்கு மூச்சு விடுவதில் சிரமமும், வாந்தி-மயக்கமும் ஏற்பட்டிருக்கிறது. குழந்தையை மருத்துமனைக்கு அழைத்து சென்று சிடி ஸ்கேன் எடுத்திருக்கின்றனர். அப்போது, குழந்தை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. 

குழந்தை இறப்பதற்கு சில நாட்கள் முன்னர், அவனது உடலில் ஆங்காங்கே சில காயங்கள் மற்றும் அடிப்பட்டதற்கான தடயங்கள் இருப்பதை குழந்தையின் தாயார் பார்த்திருக்கிறார். இது குறித்து குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவு அதிகாரிகளிடம் இது குறித்து புகாரும் கொடுத்திருக்கிறார். குழந்தை இறந்த பின்பு முழு உடல் பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள், கல்லீரல் சிதையும் அளவிற்கும் மாரடைப்பு ஏற்படும் அளவிற்கும் குழந்தைக்கு அடிப்பட்டுள்ளது என கூறியிருக்கின்றனர். இந்த அடிகள், குழந்தையை அவனது தந்தை ஓடுவதற்காக நிர்பந்தித்த போது ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த வீடியோ மற்றும் சம்பவம் குறித்து கேளவிப்பட்ட நெட்டிசன்கள், இதை கேட்கவே மனம் வலிப்பதாக கூறி வருகின்றனர். இந்த வழக்கில், குழந்தை இறந்ததற்கு காரணம் மாரடைப்பு ஏற்படும் அளவிற்கு அடிப்பட்டதுதான் என்பது குற்றச்சாட்டாக இருந்தாலும், குழந்தையின் தந்தை தரப்பில், இந்த உயிரிழப்பிற்கு காரணம் குழந்தைக்கு sepsis நோய் ஏற்பட்டதுதான் என்றும், குற்றம் சாட்டப்பட்டிருப்பவர் மீது எந்த தவறும் இல்லை என்றும் வாதிடப்பட்டிருக்கிறது.  

மேலும் படிக்க | வளர்ப்பு மகனுடன் அரசியல்வாதி உடலுறவு...? கட்டிலில் கையும் களவுமாக பிடித்த கணவன்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News