World: News Tidbits இன்றைய 10 தலைப்புச் செய்திகள்

உலக அளவிலான பல்வேறு செய்திகளின் துளிகள் உங்களுக்காக... இந்த தலைப்புச் செய்திகளைப் படித்தால், முக்கியமான உலக நடப்புகளை தெரிந்துக் கொண்ட உணர்வு ஏற்படும்...

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 21, 2020, 09:18 PM IST
  • புதிதாக உருவாக்கப்பட்ட அமெரிக்க விண்வெளிப் படை தனது முதல் துருப்புக்களை அரேபிய தீபகற்பத்திற்கு அனுப்புகிறது.
  • டிரம்புடனான ஒப்பந்தத்தின் கீழ் TikTok தனது துணை நிறுவனமாக இருக்கும் என்று சீனாவின் ByteDance நிறுவனம் கூறுகிறது.
  • 2,500 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட 27 சவப்பெட்டிகளைக் கண்டுபிடித்துள்ளதாக எகிப்து அறிவித்துள்ளது.
World: News Tidbits இன்றைய 10 தலைப்புச் செய்திகள்  title=

 உலகச் செய்திகளின் முக்கியமான செய்திகளின் சுருக்கம் உங்களுக்காக...

  • ரஷ்யாவில் தான் கோமாவில் இருந்தபோது அணிந்திருந்த ஆடைகளை ஒப்படைக்குமாறு ரஷ்யாவிடம் கிரெம்ளின் விமர்சகர் Alexei Navalny கேட்டுக் கொண்டார்.  தனது வழக்கில் ஒரு முக்கியமான ஆதாரத்தை நிறுத்தி வைத்திருப்பதாக மாஸ்கோ மீது அவர் குற்றம் சாட்டினார்.
  • தைவானின் சுதந்திரத்திற்கான எந்தவொரு ஆதரவும் "தோல்வியுற்றது" என்று கூறும் சீனா, தைவான் தீவுக்கு அமெரிக்க அரசு அதிகாரிகள் வருவதற்கு எதிராக பதிலடி கொடுப்பதாக அச்சுறுத்தியது
  • புதிதாக உருவாக்கப்பட்ட அமெரிக்க விண்வெளிப் படை தனது முதல் துருப்புக்களை அரேபிய தீபகற்பத்திற்கு அனுப்புகிறது.
  • சீனா, பெலாரஸ் மற்றும் பாகிஸ்தானுடன் ரஷ்யா தனது பெரிய அளவிலான காகசஸ் 2020 (Kavkaz 2020) என்று பெயரிடப்பட்டுள்ள ராணுவப் பயிற்சிகளை திங்கள்கிழமையன்று தொடங்கியது.
  • நேபாளத்தில் உள்ள சில வங்கிகளும் நிறுவனங்களும், வெளிநாடுகளில் இருந்து சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் பெறப்பட்ட பணத்தை மாற்றுவதில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. நேபாளத்தின் புலனாய்வு பத்திரிகை மையம் (CIJ), மற்றும் சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர்களின் கூட்டமைப்பு (ICIJ) மற்றும் BuzzFeed ஆகியவை நடத்திய விசாரணையில் இந்த பரபரப்புத் தகவல்கள் தெரிய வந்துள்ளன.
  • சீனாவின் விமானப்படை அணுசக்தி திறன் கொண்ட எச் -6 குண்டுவீச்சுக்களைக் கொண்டு தாக்குதல் நட்த்தப்படுவதாக உருவகப்படுத்திக் காட்டும் வீடியோவை வெளியிட்டுள்ளது. தாக்குதல் நடைபெறும் இடம், அமெரிக்க பசிபிக் தீவான Guamஇல் உள்ள ஆண்டர்சன் விமானப்படை தளமாகத் தோன்றுகிறது.  
  • பொருளாதாரத் தடைகள் குறித்த பூசல்களுக்கு மத்தியில்,  பெலாரஸ் (Belarus) நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்வெட்லானா டிகானோவ்ஸ்காயா (Svetlana Tikhanovskaya) ஐரோப்பிய ஒன்றியம் துணிச்சலுடன் தனது இயக்கத்திற்கு ஆதரவை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.  
  • பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல் வழங்கும் வரை இரான் மீது பொருளாதாரத் தடைகளை மீண்டும் விதிக்கக்கூடாது என்று ஐக்கிய நாடுகள் அவையின்  பொதுச் செயலாளர் Guterres தெரிவித்துள்ளார்.
  • டிரம்புடனான ஒப்பந்தத்தின் கீழ் TikTok தனது துணை நிறுவனமாக இருக்கும் என்று சீனாவின் ByteDance நிறுவனம் கூறுகிறது. 
  • 2,500 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட 27 சவப்பெட்டிகளைக் கண்டுபிடித்துள்ளதாக எகிப்து அறிவித்துள்ளது.

Read Also | Thailand: முடியாட்சியில் சீர்திருத்தங்களை கோரும் ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதமரை நீக்கவும் கோரிக்கை...  

Trending News