கலவர பூமியான மியான்மார்; ராணுவத்தின் அடக்குமுறையை மீறி தீவிரமடையும் போராட்டம்

மாண்டலே நகரில் சனிக்கிழமை நடந்த போராட்டத்தின்போது, ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், ராணுவ வீரர்களுக்கும்,  தள்ளுமுள்ளு ஏற்பட்டதை அடுத்து, ராணுவத்தினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், துப்பாக்கிச் சூடும் நடத்தியதால், மேலும் இருவர் உயிரிழந்தனர்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 21, 2021, 11:38 PM IST
  • மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த பொதுத்தேர்தலில் ஆங் சான் சூகி தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கட்சி வெற்றி பெற்றது.
  • ஜனநாயகத்தை மீட்க போராடும் மக்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதோடு அபராதமும் விதிக்கப்படும் என ராணுவம் எச்சரித்துள்ளது.
  • போராட்டம் நடத்துபவர்களுக்கு 20 ஆண்டு கால சிறை தண்டனை விதிக்கப்படும் என கூறியுள்ளது ராணுவம்.
கலவர பூமியான மியான்மார்; ராணுவத்தின் அடக்குமுறையை மீறி தீவிரமடையும் போராட்டம் title=

இணையதளத்தடை, துப்பாக்கி சூடு, படையினரை குவித்து எடுக்கப்படும் ஒடுக்குதல் நடவடிக்கை, என எதுவும் பலனளிக்காமல், அனைத்து ஒடுக்குதலையும் மீறி மியான்மாரில் ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் மக்கள் போராட்டம், மிகவும் வலுவடைந்து வருகிறது. 

மியான்மாரின் யாங்கூன், நேபிடாவ், மாண்டலே ஆகிய நகரங்களில் உள்ள முக்கிய சாலைகளில் ராணுவம் பெரிய அளவில் நிறுத்தபட்டு கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றன. 

மாண்டலே நகரில் சனிக்கிழமை நடந்த போராட்டத்தின்போது, ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், ராணுவ வீரர்களுக்கும்,  தள்ளுமுள்ளு ஏற்பட்டதை அடுத்து, ராணுவத்தினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், துப்பாக்கிச் சூடும் நடத்தியதால், மேலும் இருவர் உயிரிழந்தனர்.

கடந்த வாரத்தில் தலைநகர் நேப்பிடேவில் போராட்டக்கார்கள் மீது ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், தலையில் குண்டு பாய்ந்து இளம்பெண் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து போராட்டம்  தீவிரமடைந்தது. கொல்லப்பட்டவரது உருவப் படத்தை கையில் ஏந்தியபடி, பொது இடங்களில் மக்கள் அஞ்சலி செலுத்துவதன் மூலம் ராணுவ ஆட்சிக்கு எதிரான அதிருப்தியை பொதுமக்கள் பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், மியான்மரில் போராட்டக்காரர்கள் மீதான ராணுவத்தின் ஒடுக்குமுறைக்கு ஐ.நா. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மக்கள் போராட்டத்தை ஒடுக்குவதற்கு மியான்மரில் முதலில் பேஸ்புக்கை தடை செய்த ராணுவம், இப்போது டிவிட்டர், இன்ஸ்டாகிராம்  ஆகியவற்றையும் முடக்கியது.  இப்போது இணைய சேவையே முடக்கப்பட்டுள்ளது.

ராணுவம் தனது சாம் பேத, தான, தண்ட முறைகளை பயன்படுத்தி அதனை ஒடுக்க நினைக்கிறது.
மேலும் ராணுவத்திற்கு எதிராகவும், ஆங் சான் சூகியை விடுவிக்க கோரியும், ஜனநாயகத்தை மீட்கவும் போராடும் மக்கள் மீது கடுமையான நடவடிக்கை  எடுக்கப்படுவதோடு அபராதமும் விதிக்கப்படும் என ராணுவம் எச்சரித்துள்ளது. போராட்டம் நடத்துபவர்களுக்கு 20 ஆண்டு கால சிறை தண்டனை விதிக்கப்படும் என கூறியுள்ளது ராணுவம். 

ALSO READ | மியான்மார் ராணுவத்தின் ஒடுக்குதலையும் மீறி தீவிரமடைகிறது மக்கள் போராட்டம்

மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த பொதுத்தேர்தலில் அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கட்சி வெற்றி பெற்றது.

ஆனால் அந்த நாட்டு ராணுவம் தேர்தலில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம் சாட்டியதோடு, தேர்தல் முடிவுகளை ஏற்க மறுத்தது. ஆனால் ராணுவத்தின் குற்றச்சாட்டு ஆதாரமற்றவை என கூறி தேர்தல் ஆணையம்  நிராகரித்தது.
எனினும் மியான்மரின் (Myanmar) ராணுவத்திற்கும் அரசுக்கு இடையே மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில், சமீபத்தில் ராணுவம் அதிரடியாக ஆட்சியை கைப்பற்றியது. நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்பட பல முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய அரசு அதிகாரிகளை ராணுவம் கைது செய்தது.

ALSO READ | மியான்மரில் பேஸ்புக்கை தொடர்ந்து ட்விட்டர், இன்ஸ்டாகிராமையும் முடக்கியது ராணுவம்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News