அமெரிக்க அதிபர் போட்டியில் முந்துவாரா டிரம்ப்! ‘அமெரிக்க கேபிடல்’ ஏற்படுத்தும் எதிர்வினை!

Donald Trump In President Election : மார்ச் 19 நாளன்று நடைபெறவிருக்கும் வாக்களிப்பில் இருந்து டிரம்ப் நீக்கப்படுவதாக இல்லினாய்ஸ் நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 29, 2024, 12:06 PM IST
  • டொனால்ட் டிரம்ப் அதிபர் தேர்தலில் போட்டியிடுவாரா?
  • துரத்தும் அமெரிக்க கேபிடல் வன்முறை
  • சட்டப் போராட்டங்களில் டிரம்ப்
அமெரிக்க அதிபர் போட்டியில் முந்துவாரா டிரம்ப்! ‘அமெரிக்க கேபிடல்’ ஏற்படுத்தும் எதிர்வினை! title=

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனல்ட் டிரம்ப்பு எதிர்வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து எந்தவொரு இறுதி முடிவுக்கும் வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மார்ச் 19 நாளன்று நடைபெறவிருக்கும் வாக்களிப்பில் இருந்து டிரம்ப் நீக்கப்படுவதாக (insurrectionist ban) இல்லினாய்ஸ் நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

மேய்ன் மாகாணத்தில் நடைபெறும் வாக்களிப்பில் டிரம்ப் போட்டியிடுவது குறித்து முடிவு எடுப்பதற்கு முன்னதாக டிரம்ப்பின் மேல்முறையீடு தொடர்பாக அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்காகக் காத்திருக்க வேண்டும் என்று மேய்ன் மாகாண நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

அயோவாவில் நடைபெற்ற வாக்களிப்பில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்ப் அபார வெற்றி பெற்றாலும், கொலொராடோ மாகாண வாக்களிப்பில் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஆனால், தனக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மேல்முறையீடு செய்துள்ளார். உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததும் வாக்கெடுப்பில் டிரம்ப் போட்டியிடுவது குறித்து 30 நாள்களுக்குள் மேய்ன் மாகாணம் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது.

மேலும் படிக்க | WTO கூட்டத்தில் சேவைத்துறை தொடர்பான ஒப்பந்தத்தில் இந்தியாவுக்கு வெற்றி! ஒருமித்த கருத்து உண்டானது

மேய்ன் மாகாண நீதிமன்றத்தின் தீர்ப்பை டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வரவேற்றனர். 2020ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் தோல்வி அடைந்தார். ஆனால் அதை ஏற்றுக் கொள்ள முடியாத அவர் பதவியில் நீடிக்க வேண்டும் என்பதற்காக தனது ஆதாரவாளர்களின் வன்முறைச் சம்பவங்களைத் தூண்டியதாக குற்றம் சுமத்தப்பட்டது. அதன் அடிப்படையில் கொலொராடோ மற்றும் மேய்ன் மாகாணங்களில் டொனால்ட் டிரம்ப்  போட்டியிடத் தடை விதிக்கப்பட்டது.

இந்த தடைகளுக்கு எதிராக டிரம்ப் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த நிலையில், மார்ச் 19 நாளன்று நடைபெறவிருக்கும் வாக்களிப்பில் இருந்து டிரம்ப் நீக்கப்படுவதாக இல்லினாய்ஸ் நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

இல்லினாய்ஸ் வாக்குச்சீட்டில் இருந்து டிரம்ப்பின் பெயர் நீக்கப்பட்டதும், இதே போன்ற கொலராடோ மற்றும் மேய்ன் மாகாண முடிவுகளும் டொனால்ட் டிரம்பின் நடவடிக்கைகள் சாதாரணமானவை அல்ல என்பதைக் குறிக்கிறது. இருப்பினும், டிரம்புக்கு எதிரான தீர்ப்புகளின் மீதான மேல்முறையீடுகள் நிலுவையில் உள்ளன.

அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் கொலராடோ மாகாணம் தொடர்பான டிரம்புக்கு எதிரான தடை மேல்முறையீடு விசாரணையில் இருக்கும் நிலையில், இந்த நடவடிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், டொனால்ட் டிரம்பின் சட்டக் குழுவினர், இல்லினாய்ஸ் மாகாண நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, மேல்முறையீடு செய்யலாம். 

மேலும் படிக்க | சட்டவிரோத ஆயுத பரிமாற்றம் உலகிற்கே அச்சுறுத்தல்! ரஷ்யா & வடகொரியா மீது குற்றச்சாட்டு!

அமெரிக்க கேபிடல் கலவரத்துடன் தொடர்புடைய பிரச்சனையில் ட்ரம்ப்பை தகுதி நீக்கம் செய்த கொலராடோ உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியானது என்று குக் கவுண்டி சர்க்யூட் நீதிபதி ட்ரேசி போர்ட்டர் கருதுகிறார். 
 
இந்தத் தீர்ப்பில், "கிளர்ச்சி அல்லது கிளர்ச்சியில்" ஈடுபட்டவர்கள் பொதுப் பதவியில் இருப்பதைத் தடுக்கும் நாட்டின் அரசியலமைப்பு விதியின் அடிப்படையில் கொலராடோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக நீதிபதி போர்ட்டர் தெரிவித்துள்ளார். 

ஆனால், ட்ரம்பின் வழக்கறிஞர் நிக்கோலஸ் நெல்சன், ஜனவரி 6, 2021 அமெரிக்க கேபிடல் நிகழ்வுகள் ஒருங்கிணைந்த கிளர்ச்சி என்பதைவிட "அரசியல் கலவரம்" என்று சொல்லலாம் என வாதிட்டார்.

ஆனால், "இது ஒரு அரசாங்கச் செயலைப் பற்றியது, கலவரக்காரர்களுக்கு எந்த நோக்கமோ அல்லது திட்டமோ இல்லை என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை" என்றும் அவர்கள் உக்ரத்தில் இருந்தார் என்பதையும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | $500 மில்லியனுக்கும் அதிகமான கடன்! திவாலாகிறாரா அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்?  

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News