"பாராமுகம்" காட்டும் மெட்டா! குற்றம் சாட்டும் மெட்டாவின் முன்னாள் உளவியல் ஆலோசகர்!

Allegations On META : இன்ஸ்டாகிராமில் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்கள் தொடர்பாக "பாராமுகம்" காட்டுவதாக நிறுவனம் மீது குற்றம் சாட்டிவிட்டு வேலையில் இருந்து விலகிய உளவியலாளர்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 17, 2024, 02:19 PM IST
  • இன்ஸ்டாகிராமில் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்கள்
  • "பாராமுகம்" காட்டும் மெட்டா
  • வேலையில் இருந்து விலகிய உளவியலாளர்
"பாராமுகம்" காட்டும் மெட்டா! குற்றம் சாட்டும் மெட்டாவின் முன்னாள் உளவியல் ஆலோசகர்! title=

மெட்டா நிறுவனத்திற்கு, தற்கொலைத் தடுப்பு மற்றும் சுய-தீங்கு செய்வது தொடர்பான ஆலோசனை வழங்கும் பிரபல உளவியலாளர், இன்ஸ்டாகிராமில் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்கள் தொடர்பாக "பாராமுகம்" காட்டுவதாக நிறுவனம் மீது குற்றம் சாட்டிவிட்டு வேலையில் இருந்து விலகிவிட்டார். இந்த விவகாரம் சர்வதேச அளவில் பேசப்படுகிறது.  

மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக மெட்டாவின் உலகளாவிய நிபுணர் குழுவில் இருந்த லொட்டே ரூபேக் என்ற உளவியலாளர், தொழில்நுட்ப நிறுவனமான மெட்டா மீது சொல்லும் குற்றச்சாட்டு என்ன தெரியுமா? சுய-தீங்கு விளைவிக்கும் காட்சிகளை தனது சமூக ஊடக தளங்களில் இருந்து அகற்றுவதில் தோல்வியுற்றது. இது, பாதிக்கப்படக்கூடிய இளம் பெண்கள் மற்றும் சிறுமிகள், தங்களுக்கு சுயமாகவே தீங்கு செய்வதை தூண்டுகிறது என்றும், அதிகரித்து வரும் தற்கொலை எண்ணிக்கைக்கு பங்களிக்கிறது.

மெட்டா நிறுவனம் மீதான தனது ஏமாற்றத்தை வெளிப்படையாக பேசிய லோட்டே ரூபேக், நிறுவனம் தனது கொள்களகளை மாற்ற விருப்பமில்லாமல் இருப்பது வெளிப்படையாகத் தெரிவதாக கூறி, உளவியலாளர் குழுவில் இருந்து ராஜினாமா செய்தார், மெட்டா அதன் பயனர்களின் நல்வாழ்வு மற்றும் பாதுகாப்பைப் பற்றி கவலைப்படவில்லை என்று பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் உளவியலாளர், நிறுவனம் லாபம் பெறும் ஆர்வத்தில் இருப்பதாகவும், இளம் சமுதாயத்தினர் பாதிக்கப்படுவதை கண்டு கொள்வதில்லை என்று தெரிவித்தார். 

தனது ராஜினாமா கடிதத்தில் லொட்டே ரூபேக் இப்படி எழுதியுள்ளார்: "மெட்டாவின் SSI நிபுணர் குழுவின் ஒரு பகுதியாக இனி என்னால் இருக்க முடியாது, ஏனெனில் உங்கள் தளத்தில் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் பாதுகாப்பு தொடரபாக நாங்கள் எழுப்பும் குரல் உண்மையாகவே நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை எனக்கு போய்விட்டது..."

வெளியில் இருந்து பார்க்கும்போது மெட்டா அக்கறை காட்டுவது போல் தெரிகிறது, அவர்களிடம் பல நிபுணர் குழுக்கள் உள்ளன, ஆனால் திரைக்குப் பின்னால் அதிக முன்னுரிமை அளிக்க வேண்டாம் என்ற எண்ணத்தில் நிறுவனம் செயல்படுகிறது என்று அப்சர்வர் நாளிதழுக்கு லொட்டே ரூபேக் அளித்த பேட்டியில், ரூபேக் கூறினார்.

மேலும் படிக்க | SCSS Vs மூத்த குடிமக்களுக்கான FD... இரண்டில் எது பெஸ்ட்... ஒரு ஒப்பீடு!

தங்கள் பயனர்களை தொடர்ந்து தளத்தில் எப்படி தக்க வைத்திருப்பது மற்றும் திரையில் அவர்களை நீண்ட நேரம் வைத்திருப்பதன் மூலம் அவர்களிடமிருந்து எவ்வாறு பணம் சம்பாதிப்பது,  தரவைச் சேகரிப்பது அல்லது தரவை விற்பது உள்ளிட்ட பல லாபங்களை நிறுவனம் உள்ளுக்குள் கணக்குப் போடுகிறது என்று அப்சர்வர் நாளிதழுக்கு லொட்டே ரூபேக் அளித்த பேட்டியில், ரூபேக் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

ரூபேக் முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக பதிலளித்த மெட்டா செய்தித் தொடர்பாளர், “தற்கொலை மற்றும் சுய தீங்கு போன்றவை சிக்கலான பிரச்சினைகள் தான், நாங்கள் அவற்றை மிகவும்  தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம். எங்களுடைய நிறுவனத்தின் தற்கொலை மற்றும் சுய-தீங்கு ஆலோசனைக் குழுவில் உள்ளவர்கள் உட்பட பாதுகாப்பு நிபுணர்களுடன் நாங்கள் பல ஆண்டுகளாக கலந்தாலோசித்து செயல்பட்டு வருகிறோம். அவர்களின் கருத்து இந்த விசயங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கொண்டுவர எங்களுக்கு உதவியது” என்று தெரிவித்தார்.

"எங்கள் ஆலோசகர்களுடன் ஆழ்ந்த விவாதத்திற்குப் பிறகு நாங்கள் செய்த பல புதுப்பிப்புகள் முக்கியமானவை. அவற்றில், அவர்கள் பின்தொடரும் ஒருவர் தற்கொலை மற்றும் சுய-தீங்கு பற்றி விவாதிக்கும் உள்ளடக்கத்தை  பகிர்ந்து கொண்டாலும், பதின்ம வயதினரிடமிருந்து அந்த உள்ளடக்கங்களை நாங்கள் மறைப்போம், இதை சமீபத்தில் நாங்கள் அறிவித்தோம்" என்று அவர் நிறுவனத்தின் தரப்பை எடுத்துச் சொல்கிறார்.

கடந்த வாரம் வெளியான Ofcom இன் புதிய ஆராய்ச்சி, ஐக்கிய ராஜ்ஜியத்திஇல் உள்ள குழந்தைகள் வன்முறை நிறைந்த ஆன்லைன் உள்ளடக்கங்களை தவிர்க்க முடியாது என்பதைக் கண்டறிந்துள்ளது. இதை அடுத்து,  லொட்டே ரூபேக் விடுத்துள்ள எச்சரிக்கை கவனம் பெறுகிறது. இந்த அய்வில் நேர்காணல் செய்தவர்கள் குறிப்பிட்டுள்ள முக்கிய செயலிகளில் இன்ஸ்டாகிராம் (Instagram) உள்ளது.

மேலும் படிக்க | Lok Sabha Election 2024: மக்களவை தேர்தல் தேதிகள் அறிவிப்பு... தமிழ்நாட்டில் எப்போது தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News