கலகத்தில் இருந்து தப்பித்த ரஷ்யா... கை கொடுத்த பெலாரஸ் அதிபர்... நடந்தது என்ன!

வாக்னர் குழு என்னும் ரஷ்யாவின் தனியார் ராணுவ படை,  இது வரை ரஷ்ய நலன்களுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வந்த நிலையில், திடீரென ரஷ்யா ராணுவத்திற்கு எதிராக திரும்பியது. இதனால் ஆட்சி கவிழ்ப்பு நடக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 25, 2023, 10:39 AM IST
  • புட்டினுடன் தொடர்ச்சியான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்பட்டது.
  • ரஷ்யாவிற்கு செய்யப்பட்ட "துரோகம்" மற்றும் "முதுகில் குத்தும் செயல்" என்று விவரித்த விளாடிமிர் புடின்.
  • மணல் மூட்டைகளுடன் இயந்திர துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டன.
கலகத்தில் இருந்து தப்பித்த ரஷ்யா... கை கொடுத்த பெலாரஸ் அதிபர்... நடந்தது என்ன! title=

 

மாஸ்கோ: ரஷ்யா தற்போது இக்கட்டான ஒரு சூழலை எதிர் கொண்டுள்ளது. ஒரு பக்கம் உக்ரைன் போர் கடந்தாண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய நிலையில், இப்போது ஓராண்டைக் கடந்தும் தொடர்கிறது. இது ஒருபக்கம் இருக்க மறுபுறம், ரஷ்யாவின் தனியார் ராணுவ குழுவான வாக்னர் குழுவும் ரஷ்யாவுக்கு எதிராகத் திரும்பயது. வாக்னர்  குழு இப்போது ரஷ்ய நகரங்களை முற்றுகையிட ஆரம்பித்துள்ளது. வாக்னர் குழு இது வரை ரஷ்ய நலன்களுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வந்துள்ளதால் ரஷ்ய பாதுகாப்புத் துறையே அவர்கள் ஆயுதங்களையும் சப்ளை செய்தது. இப்போது நடந்து வரும் உக்ரைன் போரில் கூட கடந்த ஓராண்டாக இரு தரப்பும் இணைந்தே சண்டையிட்டு வந்துள்ளது. இந்தச் சூழலில் தான் ரஷ்யா ராணுவத்திற்கு எதிராக திரும்பினர். இதனால் ஆட்சி கவிழ்ப்பு நடக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டது. 

இந்நிலையில், பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ வாக்னர் குழுவின் கிளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, தனது நண்பர் விளாடிமிர் புடினுக்கு பெரும் நிம்மதி அளித்துள்ளார். ரஷ்யாவின் ஊடகமான RT வெளியிட்ட செய்தியில், பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ சனிக்கிழமையன்று வாக்னர் குழுவின் தலைவர் எவ்ஜெனி பிரிகோஜினுடன் ரஷ்யா ஒப்பந்தத்தை செய்ததாக அறிவித்தார். இதன் கீழ், வாக்னர் குழுவின் தலைவரான யெவ்ஜெனி பிரிகோஜின், தனது வீரர்களை பின்வாங்குமாறு கேட்டுக் கொண்டார். மாஸ்கோவை நோக்கி அணிவகுத்துச் செல்லும் துருப்புக்களை நிறுத்திவிட்டு தங்கள் முகாமுக்குத் திரும்பும்படி கட்டளையிட்டார்.

வாக்னர் குழு வீரர்களின் பாதுகாப்பிற்கு ஈடாக கிளர்ச்சியை முடிவுக்கு கொண்டுவர பிரிகோஜின் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. பெலாரஸின் அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அதிபர் லுகாஷென்கோவின் முன்மொழிவை யெவ்ஜெனி பிரிகோஜின் ஏற்றுக்கொண்டார், இதன் கீழ் வாக்னர் குழு ரஷ்யாவிற்குள் செல்லாது." ப்ரிகோஜினுக்கும் லுகாஷென்கோவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் நாள் முழுவதும் நடந்தன. இதற்குப் பிறகு ரஷ்யாவில் நிழைவதை நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது எனவும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டது.

மேலும் படிக்க | ரஷ்யாவில் கடும் பதற்றம்! சுற்றி வளைத்த வாக்னர் படைகள்!

வாக்னர் குழுமத்திற்கு பாதுகாப்பு உத்தரவாதம்

பெலாரஸ் அதிபர் லுகாஷென்கோவின் அலுவலகம் சார்பில், இந்த உரையாடலின் போது, ​​புட்டினுடன் தொடர்ச்சியான ஒருங்கிணைப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்பட்டது. ப்ரிகோஜின் தனது துருப்புக்களுக்கு உத்தரவாதம் அளிக்கும் வாய்ப்பை வழங்கியதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிகோஜினுக்கு வேறு என்ன உறுதி மொழிகள் வழங்கப்பட்டது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. வாக்னர் குழுவின் கிளர்ச்சி முடிவுக்கு வந்த செய்தி ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவை நோக்கி நகரும் நேரத்தில் வந்தது. ப்ரிகோஜின் சனிக்கிழமை காலை வாக்னர் குழு தெற்கு ரஷ்ய நகரமான ரோஸ்டோவ்-ஆன்-டானைக் கைப்பற்றியதாகக் கூறினார்.

முதுகில் குத்தப்பட்ட  புடின்

முன்னதாக, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் சனிக்கிழமை வாக்னர் குழுமத்தின் தலைவர் Yevgeny Prigozhin இன் ஆயுதமேந்திய கிளர்ச்சியின் அறிவிப்பை ரஷ்யாவிற்கு செய்யப்பட்ட "துரோகம்" மற்றும் "முதுகில் குத்தும் செயல்" என்று விவரித்தார். கிளர்ச்சிக்கு சதி செய்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று புதின் கூறினார். ஒரு தொலைக்காட்சி உரையில், புடின் ரஷ்யாவின் பாதுகாப்பிற்கு உறுதியளித்தார். ப்ரிகோஜினின் படைகள் தலைநகரை நோக்கி முன்னேறும் போது, ​​மாஸ்கோவின் பல பகுதிகளில் இராணுவ டிரக்குகள் மற்றும் கவச வாகனங்கள் காணப்பட்டன. அதன் தெற்குப் பகுதியில், படையினர் தாக்குதல் நிலைகளை உருவாக்கினர், மணல் மூட்டைகளுடன் இயந்திர துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டன.

மேலும் படிக்க | வூஹான் ஆய்வகத்தில் உருவானதா கொரோனா வைரஸ்? ஆதாரங்கள் இல்லை! கைவிரித்த அமெரிக்கா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News