மீனத்தில் ராகு பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அடிச்சுது ஜாக்பாட்.. திகட்ட திகட்ட மகிழ்ச்சி!!

Rahu Gochar 2023: ராகு பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், சில குறிப்பிட்ட ராசிகளின் வாழ்க்கையில் இதன் காரணமாக அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 8, 2023, 02:40 PM IST
  • துலாம் ராசிக்காரர்களுக்கு ராகுவின் பெயர்ச்சி மிகவும் சாதகமாக இருக்கும்.
  • திமன்ற விவகாரங்களில் வெற்றி பெறுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளன.
  • இந்த நேரத்தில் நீங்கள் எதிரிகளை மிக எளிதாக வெற்றி பெறலாம்.
மீனத்தில் ராகு பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அடிச்சுது ஜாக்பாட்.. திகட்ட திகட்ட மகிழ்ச்சி!! title=

ராகு பெயர்ச்சி 2023, ராசிகளில் அதன் தாக்கம்: ஜோதிட சாஸ்திரத்தின் படி, ராகு மற்றும் கேது ஆகிய கிரகங்கள் நிழல் கிரகங்களாக கருதப்படுகின்றன. இந்த இரண்டு கிரகங்களும் மற்ற கிரகங்களுடன் சேர்ந்து சுப மற்றும் அசுப பலன்களைத் தருகின்றன. ராகுவும் கேதுவும் ஒருவரது ஜாதகத்தில் எந்த ஸ்தானத்தில் இருக்கிறார்களோ, அது தொடர்பான விஷயங்களில் பாதிப்புகள் ஏற்படத் தொடங்கும் என்பது ஐதீகம். பொதுவாக மக்கள் ராகு கேதுவைக் கண்டு அஞ்சுவதை பார்த்துள்ளோம். ஆனால், அது தேவையில்லை. ராகு கேது பல நன்மைகளையும் செய்கின்றன. 

இந்த கிரகங்கள் மாய கிரகங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. எந்த கிரங்களுடன் இவற்றின் கூட்டணி அமைகின்றதோ, அந்த கிரகத்தை பொருத்து இவற்றின் செயல்பாடு மாறுவதாக கூறப்படுகின்றது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், பல சமயங்களில் ராகு சுப பலன்களையும் அள்ளித் தருகிறார். அக்டோபர் 30 ஆம் தேதி ராகு மீன ராசியில் நுழைகிறார். இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், சில குறிப்பிட்ட ராசிகளின் வாழ்க்கையில் இதன் காரணமாக அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும். இவர்களின் தொழில் மற்றும் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

மேஷம்

ஜோதிட சாஸ்திரப்படி, ராகுவின் ராசி மாற்றம் மேஷ ராசிக்காரர்களின் வாழ்வில் சுப பலன்களைத் தரும். ராகு கிரகம் உங்கள் ராசிக்கு மூன்றாவது வீட்டில் சஞ்சரிக்கப் போகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அப்படிப்பட்ட நிலையில் ராகு சுப பலன்களைத் தருவார். உங்கள் வாழ்வில் இருந்த சச்சரவுகள் குறையும், திடீரென்று சில வேலைகளில் வெற்றியும் உண்டாகும். இந்த நேரத்தில் உங்கள் தைரியமும் ஆற்றலும் அதிகரிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. அதுமட்டுமில்லாமல் உங்களை வாட்டி வதைத்து வந்த அனைத்து பிரச்சனைகளில் இருந்தும் நீங்கள் வெற்றிகரமாக வெளிவருவீர்கள். மீன ராசியில் ராகு பெயர்ச்சி ஆவதால் திடீர் பண ஆதாயம் ஏற்படும் வாய்ப்புகள் உருவாகும்.

மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சியால் திரிகோண ராஜயோகம், பண மழையில் நனைய போகும் 5 ராசிக்காரர்கள்

கடக ராசி

மீனத்தில் ராகுவின் பெயர்ச்சி கடக ராசிக்காரர்களின் வாழ்விலும் சாதகமான பலன்களைத் தரும். உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் இந்தப் பெயர்ச்சி நடக்கப் போகிறது. இது அதிர்ஷ்டம் மற்றும் வெளிநாட்டு பணிகளுக்கான ஸ்தானமாக கருதப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், ராகு பெயர்ச்சி காலத்தில் உங்கள் அதிர்ஷ்டம் பன்மடங்கு அதிகரிக்கலாம். இதனுடன், நீண்டகாலமாக நிலுவையில் உள்ள உங்களது பல பணிகளை இப்போது செய்து முடிப்பீர்கள். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால், இவற்றை வெற்றிகரமாகவே செய்து முடிப்பீர்கள். இந்த நேரத்தில் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உள்ளது. இந்த பயணங்கள் உங்களுக்கு அனுகூலமான பலன்களை அள்ளிக்கொடுக்கும். இந்த காலகட்டத்தில் உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். நிதி சார்ந்த பல வெற்றிகளை பெருவீர்கள். பண ஆதாயங்களை பெறுவதற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன. மேலும் தற்போது வாகனம் மற்றும் சொத்து வாங்கும் யோகமும் உள்ளது. 

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு ராகுவின் பெயர்ச்சி மிகவும் சாதகமாக இருக்கும். உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் இந்தப் பெயர்ச்சி நடக்கப் போகிறது. இத்தகைய சூழ்நிலையில், நீதிமன்ற விவகாரங்களில் வெற்றி பெறுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளன. இந்த நேரத்தில் நீங்கள் எதிரிகளை மிக எளிதாக வெற்றி பெறலாம். இதனுடன் திடீர் பண ஆதாயமும் உண்டாகும். மறுபுறம், அலுவலக வேலையில் இருப்பவர்கள் இந்த நேரத்தில் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வை பெறக்கூடும். இடமாற்றம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இந்த இடமாற்றங்களால் சாதகமான சூழல் உண்டாகும். இது மட்டுமின்றி இந்த நேரத்தில் அரசியலில் இருக்கும் துலா ராசிக்காரர்களுக்கு பல வெற்றிகள் கைகூடும். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | குரு பெயர்ச்சியால் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்: 12 ராசிக்கான முழு ராசிபலன் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News