டிசம்பர் 2023 வங்கி விடுமுறை நாட்கள்! முழு பட்டியல் இதோ!

Bank Holidays December 2023: வங்கிகளின் மாதந்திர விடுமுறை பட்டியலை முந்தைய மாத இறுதி நாட்களில் ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது டிசம்பர் மாதத்திற்கான விடுமுறை பட்டியலை வெளியிட்டுள்ளது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 23, 2023, 03:00 PM IST
  • நாடு தழுவிய 6 நாள் வேலைநிறுத்தம் காரணமாக டிசம்பரில் வங்கிகளுக்கு விடுமுறை
டிசம்பர் 2023 வங்கி விடுமுறை நாட்கள்! முழு பட்டியல் இதோ!  title=

Bank Holidays December 2023: 2023 டிசம்பரில் நாடு முழுவதிலும் உள்ள  வங்கிகள் பல நாட்கள் மூடப்பட்டிருக்கும். வங்கிகளின் மாதந்திர விடுமுறை பட்டியலை முந்தைய மாத இறுதி நாட்களில் ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது டிசம்பர் மாதத்திற்கான விடுமுறை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி அடுத்த மாதத்தில் வார இறுதி நாட்கள் உட்பட பண்டிகை காலங்களுடன் சேர்ந்து பல நாட்கள் மூடப்பட்டிருக்கும். இந்த பண்டிகைகளில் சில குறிப்பிட்ட மாநிலங்களுக்கு பிரத்யேகமானவை. சில  நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகின்றன. 

என்னதான் நாம் மொபைல் மூலமாக இணைய வங்கிச் சேவை வசதிகளை பயன்படுத்தி வந்தாலும் பலரது வாழ்க்கையில் வங்கிகள் தான் முக்கியப் பங்கு வகிக்கின்றது.  எடுத்துக்காட்டாக, பணம் திரும்பப் பெறுதல் மற்றும் டிமாண்ட் டிராஃப்ட் போன்ற வேலைகளுக்கு மக்கள் வங்கிகளுக்கு தான் செல்ல வேண்டியிருக்கும்.  அப்படி இருக்கையில் நீங்கள் வங்கிக்கு செல்லும் அன்றைய தினம் வங்கி மூடப்பட்டு இருந்தால், உங்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படும்.  அதனால் நீங்கள் ஒவ்வொரு மாதத்திலும் வங்கிகள் (Bank) எந்தெந்த நாட்களில் மூடப்பட்டு இருக்கும் என்பதை முன்கூட்டியே தெரிந்து வைத்திருப்பது உங்களுக்கு நல்லது.  இந்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின்படி, டிசம்பர் மாதத்தில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் விடுமுறை நாட்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 2023 வங்கி விடுமுறை நாட்களின் முழுமையான பட்டியல் இதோ:

டிசம்பர் 1, 2023: அருணாச்சல பிரதேசம் மற்றும் நாகாலாந்து

டிசம்பர் 3, 2023: இந்தியா முழுவதும்

டிசம்பர் 4, 2023: கோவா

டிசம்பர் 9, 2023- இந்தியா முழுவதும் (2வது சனிக்கிழமை)

டிசம்பர் 10, 2023- இந்தியா முழுவதும் (ஞாயிறு)

டிசம்பர் 12, 2023- மேகாலயா

டிசம்பர் 13, 2023- சிக்கிம்

டிசம்பர் 14, 2023: சிக்கிம்

டிசம்பர் 17, 2023: இந்தியா முழுவதும் (ஞாயிறு)

மேலும் படிக்க | கோடீஸ்வரனாகும் எளிய வழி... ‘இந்த’ 5 விதிகளை கடைபிடிக்கவும்...!

டிசம்பர் 18, 2023- மேகாலயா

டிசம்பர் 19, 2023- கோவா

டிசம்பர் 23, 2023- இந்தியா முழுவதும் (4வது சனிக்கிழமை)

டிசம்பர் 24, 2023- இந்தியா முழுவதும் (ஞாயிற்றுக்கிழமை)

டிசம்பர் 25, 2023- இந்தியா முழுவதும் (கிறிஸ்துமஸ்)

டிசம்பர் 26, 2023- மிசோரம், நாகாலாந்து மற்றும் மேகாலயா

டிசம்பர் 27, 2023- நாகாலாந்து

டிசம்பர் 30, 2023- மேகாலயா

டிசம்பர் 31, 2023- இந்தியா முழுவதும் (ஞாயிற்றுக்கிழமை)

நாடு தழுவிய 6 நாள் வேலைநிறுத்தம் காரணமாக டிசம்பரில் வங்கிகளுக்கு விடுமுறை:

டிசம்பரில், அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் (AIBEA) நாடு தழுவிய 6 நாள் வேலைநிறுத்தத்திற்கு திட்டமிட்டுள்ளது, இது வெவ்வேறு தேதிகளில் பல்வேறு வங்கிகளை பாதிக்கும். டிசம்பர் 4 ஆம் தேதி, பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB), பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி, மற்றும் பாரத ஸ்டேட் வங்கி (SBI) போன்ற வங்கிகளின் சேவைகள் பாதிக்கப்படும். 

பின்னர் டிசம்பர் 5 ஆம் தேதி பேங்க் ஆஃப் பரோடா மற்றும் பேங்க் ஆஃப் இந்தியாவிலும், அதைத் தொடர்ந்து டிசம்பர் 6 ஆம் தேதி கனரா வங்கி மற்றும் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவிலும் வேலைநிறுத்தம் நடைபெறும்.

டிசம்பர் 7-ம் தேதி வேலைநிறுத்தத்தால் இந்தியன் வங்கி மற்றும் யூகோ வங்கியும், டிசம்பர் 8-ம் தேதி யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் பாங்க் ஆஃப் மஹாராஷ்டிராவும் பாதிக்கப்படும். இறுதியாக, டிசம்பர் 11 அன்று, வேலைநிறுத்தம் அனைத்து தனியார் வங்கிகளையும் உள்ளடக்கும்.

வங்கி விடுமுறை நாட்களிலும் இணையம் மற்றும் மொபைல் பேங்கிங், பணப் பரிமாற்றங்களுக்கான யூபிஐ, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளின் பயன்பாடு போன்ற இதர வசதிகளும் உங்களுக்கு கிடைக்கும் என்பதால் நீங்கள் இதனை பற்றி கவலைப்பட தேவையில்லை.

மேலும் படிக்க | வாங்கின தேதியில் இருந்து வாரண்டி கிடையாதாம்...பதறாதீங்க... முதல்ல இதை படிங்க..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News