2024 பிப்ரவரி மாத வங்கி விடுமுறை நாட்கள்! முழு பட்டியல் இதோ!

Bank Holidays February 2024: வங்கிகளின் மாதந்திர விடுமுறை பட்டியலை முந்தைய மாத இறுதி நாட்களில் ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது. அதன்படி அடுத்த மாதத்தில் வார இறுதி நாட்கள் உட்பட சில நாட்கள் மூடப்பட்டிருக்கும். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 29, 2024, 06:19 PM IST
  • பிப்ரவரி 2024க்கான விடுமுறை நாட்களின் முழுமையான பட்டியல்.
  • நாட்டின் பட்ஜெட் பிப்ரவரி 1, 2024 அன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.
  • சில விடுமுறைகள் சில குறிப்பிட்ட மாநிலங்களுக்கு பிரத்யேகமானவை.
2024 பிப்ரவரி மாத வங்கி விடுமுறை நாட்கள்! முழு பட்டியல் இதோ! title=

2024 பிப்ரவரி மாத வங்கி விடுமுறைகள் ( Bank Holidays February 2024): 2024 பிப்ரவரி மாதத்தில் நாடு முழுவதிலும் உள்ள வங்கிகள் சில நாட்கள் மூடப்பட்டிருக்கும். வங்கிகளின் மாதந்திர விடுமுறை பட்டியலை முந்தைய மாத இறுதி நாட்களில் ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது பிப்ரவரி மாதத்திற்கான விடுமுறை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி அடுத்த மாதத்தில் வார இறுதி நாட்கள் உட்பட சில நாட்கள் மூடப்பட்டிருக்கும். சில விடுமுறைகள் சில குறிப்பிட்ட மாநிலங்களுக்கு பிரத்யேகமானவை. சில நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகின்றன.

நாட்டின் பட்ஜெட் பிப்ரவரி 1, 2024 அன்று தாக்கல் செய்யப்பட உள்ளது, அதில் அரசாங்கம் சாமானிய மக்களுக்கான அறிவிப்புகளை வெளியிடும். பிப்ரவரி மாதம் எப்போதுமே சிறப்பு வாய்ந்தது. இந்நிலையில் பிப்ரவரியில் மொத்தம் 11 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும். பிப்ரவரி 11 நாட்கள் விடுமுறை நாட்களில் அனைத்து ஞாயிறு, இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ஒரே நேரத்தில் 11 நாட்களுக்கு வங்கிகள் மூடப்படாது. விடுமுறை உள்ள மாநிலங்களில் மட்டும் வங்கிகள் மூடப்படும்.

பிப்ரவரி 2024க்கான விடுமுறை நாட்களின் முழுமையான பட்டியல்

பிப்ரவரி 4: ஞாயிறு

பிப்ரவரி 10: இரண்டாவது சனிக்கிழமை/லோசர் (லோசர் காரணமாக காங்டாக்கில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்)

பிப்ரவரி 11 : ஞாயிறு

பிப்ரவரி 14 : புதன்கிழமை, பசந்த பஞ்சமி/சரஸ்வதி பூஜை (அகர்தலா, புவனேஸ்வர், கொல்கத்தா ஆகிய இடங்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்)

பிப்ரவரி 15: வியாழன், லுய்-நகை-நி (இம்பாலில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்)

பிப்ரவரி 18 : ஞாயிறு

பிப்ரவரி 19: திங்கட்கிழமை, சத்ரபதி சிவாஜி மகாராஜ் ஜெயந்தி (பேலாபூர், மும்பை மற்றும் நாக்பூரில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்).

பிப்ரவரி 20: செவ்வாய், மாநில தினம் (ஐஸ்வால் மற்றும் இட்டாநகரில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்)

பிப்ரவரி 24: நான்காவது சனிக்கிழமை

பிப்ரவரி 25: ஞாயிறு

பிப்ரவரி 26: திங்கள், நியோகம் (இட்டாநகரில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்)

வங்கிகள் ஆன்லைன் சேவையைப் பெறும்

வங்கிக் கிளைகள் மூடப்பட்டிருக்கும் போது, ​​வாடிக்கையாளர்கள் ஆன்லைன் வங்கிச் சேவைகளைப் பயன்படுத்தலாம். வங்கி விடுமுறை நாட்களிலும் இணையம் மற்றும் மொபைல் பேங்கிங், பணப் பரிமாற்றங்களுக்கான யூபிஐ, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளின் பயன்பாடு போன்ற இதர வசதிகளும் உங்களுக்கு கிடைக்கும் என்பதால் நீங்கள் இதனை பற்றி கவலைப்பட தேவையில்லை. எனினுல், சில பணிகளுக்காக பிப்ரவரியில் நீங்களும் வங்கிக்குச் செல்ல வேண்டும் என்றால், முதலில் வங்கி விடுமுறைகளின் பட்டியலைத் தெரிந்து கொள்ளவது நல்லது.

நம்மில் பலர் இணைய வங்கிச் சேவை வசதிகளை பயன்படுத்தி வந்தாலும் சிலர் விஷயங்களுக்காக வங்கிகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எடுத்துக்காட்டாக, பணம் திரும்பப் பெறுதல் மற்றும் டிமாண்ட் டிராஃப்ட் போன்ற வேலைகளுக்கு மக்கள் வங்கிகளுக்கு தான் செல்ல வேண்டியிருக்கும். அப்படி இருக்கையில் நீங்கள் வங்கிக்கு செல்லும் அன்றைய தினம் வங்கி மூடப்பட்டு இருந்தால், உங்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படும். அதனால் நீங்கள் ஒவ்வொரு மாதத்திலும் வங்கிகள் எந்தெந்த நாட்களில் மூடப்பட்டு இருக்கும் என்பதை முன்கூட்டியே தெரிந்து வைத்திருப்பது உங்களுக்கு நல்லது. 

Trending News