தண்ணீர் பாட்டிலில் 2,40,000 பிளாஸ்டிக் துகள்கள்... ரத்தத்தில் கலக்கும் அபாயம்... அதிர வைக்கும் ஆய்வு!

பிளாஸ்டிக் பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்ல உடல் நலத்துக்கும் கேடு விளைவிக்கக் கூடியவை. பிளாஸ்டிக் பாட்டில்களில் சேமிக்கப்படும் திரவங்களை உட்கொள்வதால் ஏற்படும் அபாயங்கள் மற்றும் அதன் தாக்கங்கள் குறித்து தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றன.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 10, 2024, 04:44 PM IST
  • ஒரு பிளாஸ்டிக் பாட்டிலில் 2 லட்சத்துக்கும் அதிகமான துகள்கள் இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
  • வயிற்றில் வளரும் குழந்தைகளின் உடலிலும் பிளாஸ்டிக் துகள்கள் சென்றடையும் அபாயம்.
  • மனித இரத்தத்தில் கூட நுழையும் ஆற்றல் கொண்ட பிளாஸ்டிக் துகள்கள்.
தண்ணீர் பாட்டிலில் 2,40,000 பிளாஸ்டிக் துகள்கள்... ரத்தத்தில் கலக்கும் அபாயம்... அதிர வைக்கும் ஆய்வு! title=

தண்ணீர் பாட்டிலில் பிளாஸ்டிக் துண்டுகள்: பிளாஸ்டிக் பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்ல உடல் நலத்துக்கும் கேடு விளைவிக்கக்கூடியவை. பிளாஸ்டிக் பாட்டில்களில் சேமிக்கப்படும் திரவங்களை உட்கொள்வதால் ஏற்படும் அபாயங்கள் மற்றும் அதன் தாக்கங்கள் குறித்து தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றன. பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீரை குடிப்பதால் நமது ஆரோக்கியத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் கேடு விளைவிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.எங்கு சென்றாலும், சுத்தமான நீரை பருக வேண்டும் என்ற எண்ணத்தில் பாட்டில் தண்ணீரைக் குடிக்கும் பழக்கம் உலகம் முழுவதும் வேகமாக அதிகரித்து வருகிறது. பயணம் செய்யும் போது அல்லது சந்தையில் சுற்றித் திரியும் போது, ​​நம்மில் பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீரைக் குடிக்காதவர்கள் இருக்கவே முடியாது. வீடுகளில் கூட தண்ணீரை சேமித்து வைக்க ஏராளமானோர் பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்துகின்றனர். இருப்பினும், அவ்வாறு செய்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானது. 1 லிட்டர் தண்ணீர் பாட்டிலில் சுமார் 240,000 நானோ பிளாஸ்டிக் துண்டுகள் இருப்பதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதை நாம் கண்களால் பார்க்க முடியாது. இந்த துகள்கள் மிகவும் சிறியவை, அவை மனித இரத்தத்தில் கூட நுழையும்.

இந்த ஆய்வு தேசிய அறிவியல் அகாடமியின் (PNAS) இதழில் வெளியிடப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களில் காணப்படும் துகள்கள் மிகவும் சிறியவை என்றும் அவை நமது உடல் செல்கள் மற்றும் இரத்த ஓட்டத்தில் நுழைந்து நமது உடல் உறுப்புகளை அழிக்கும் என்றும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதுமட்டுமின்றி வயிற்றில் வளரும் குழந்தைகளின் உடலிலும் இந்த பிளாஸ்டிக் துகள்கள் சென்றடையும். கருவுற்றிருக்கும் தாயின் தொப்பூள் கொடி மூலம் இவை கருவை சென்றடையும். இதனால் வயிற்றில் இருக்கும் குழந்தைகளின் உயிருக்கும் ஆபத்து  (Health Tips) ஏற்படலாம். 

பிளாஸ்டிக் பாட்டில்களில் மைக்ரோபிளாஸ்டிக்ஸ் என்பது 5 மில்லிமீட்டர் அல்லது அதற்கும் குறைவான சிறிய பிளாஸ்டிக் நுண்துகளாகும். இந்த பிளாஸ்டிக் துகள்கள் நமது தலைமுடியின் அகலத்தில் 17-ல் ஒரு பங்கை விட சிறியது. இதனை வெறும் கண்களால் பார்க்க முடியாது. ஒரு பிளாஸ்டிக் பாட்டிலில் 2 லட்சத்துக்கும் அதிகமான துகள்கள் இருந்தாலும், அவை யாராலும் பார்க்கப்படாமல் இருப்பதற்கு இதுவே காரணம். பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களில் இந்த மைக்ரோபிளாஸ்டிக்ஸ் துகள்கள் பிளாஸ்டிக் பாட்டில்களில் சேமிக்கப்படும் நீரில் கலந்து விடுகிறது. மைக்ரோபிளாஸ்டிக்ஸ் காலப்போக்கில் நம் உடலில் சேர்ந்து, வீக்கம், ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் உறுப்பு சேதம் போன்ற உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்று ஆராய்ச்சிகள் கூறுகிறது.

மேலும் படிக்க | தலைவலி சட்டுனு மறைய... இந்த ஆரோக்கிய உணவுகளை சாப்பிடுங்கள்!

இந்த ஆய்வை கொலம்பியா பல்கலைக்கழகம் மற்றும் ரட்ஜர்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் செய்துள்ளனர். இதற்கு முன்பும் தண்ணீர் பாட்டில்களில் நானோ பிளாஸ்டிக் இருப்பது பல ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. ஆனால், ஒரு பாட்டிலில் இவ்வளவு பெரிய அளவில் நானோ பிளாஸ்டிக் இருப்பதாக  ஆய்வில் தெரியவந்துள்ளது முதல் முறையாகும். பூமியில் எல்லா இடங்களிலும் பிளாஸ்டிக் மாசுபாடு உள்ளது, ஆனால் பாட்டில் தண்ணீரில் எந்த அளவிற்கு உள்ள என்பதை அறிய விஞ்ஞானிகள் ஆர்வமாக இருந்ததால், இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பிளாஸ்டிக் துகள்கள் மனித உடலில் நுழையும் திறன் அதிகமாக இருந்தது இதற்குக் காரணம்.

முன்னதாக, 2022 இல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், குழாய் தண்ணீரை விட பாட்டில் தண்ணீரில் மைக்ரோபிளாஸ்டிக்ஸின் செறிவு அதிகமாக இருப்பதாகக் கண்டறியப்பட்டது. 2021 ஆம் ஆண்டின் அறிக்கையானது, பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் மூடிகளைத் திறந்து மூடுவதால், சிறிய பிளாஸ்டிக் துண்டுகள் தண்ணீருக்குள் சென்று, கடுமையான உடல்நலக் கேடு விளைவிக்கும் என்று எச்சரித்துள்ளது.  இது மட்டுமல்லாது, பெரும்பாலான பிளாஸ்டிக் பாட்டில்கள் பாலிதீன் டெரெப்தாலேட் (PET) என்ற பொருளில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. இந்த பொருள் பீபெனைல் ஏ (பிபிஏ) போன்ற தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களை வெளியிடுவதால், அவற்றில் சேமிக்கப்படும் திரவங்களில் கலந்து விடுகிறது. இதன் காரணமாக ஹார்மோன் சீர்குலைவு, இனப்பெருக்க பிரச்சனைகள் மற்றும் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படுகிறது. 

மேலும் படிக்க | Arteries: இதய நோய்கள் ஏற்பட காரணங்கள்! தமனிகளில் ரத்த அடைப்பை ஏற்படுத்தும் உணவுகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News