Monkeypox: குழந்தைகளில் காணப்படும் அறிகுறிகள் என்ன? முன்னெச்சரிக்கையாக இருப்பது எப்படி?

Monkeypox Symptoms in Children: குழந்தைகளில் தென்படக்கூடும் குரங்கு அம்மை அறிகுறிகள் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியது மிக அவசியமாகும். இந்த அறிகுறிகளை பற்றி இங்கே காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 26, 2022, 12:59 PM IST
  • குழந்தைகளில் குரங்கு அம்மையின் அறிகுறிகள்.
  • குரங்கு காய்ச்சலில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பது எப்படி?
  • ஒருவருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டால், குழந்தையை அவருடன் தொடர்பு கொள்ளாமல் பாதுகாக்கவும்.
Monkeypox: குழந்தைகளில் காணப்படும் அறிகுறிகள் என்ன? முன்னெச்சரிக்கையாக இருப்பது எப்படி? title=

குரங்கு அம்மை நோயின் அறிகுறிகள்: குரங்கு அம்மை என்பது ஒரு தொற்று நோயாகும். இது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கும் பின்னர் மனிதரிடமிருந்து மனிதனுக்கும் பரவுகிறது. மங்கி பாக்ஸின் வைரஸ் தொற்று பெரியம்மை போன்றது. சமீபத்தில் அதிகரித்து வரும் மங்கி பாக்ஸ் தொற்றை கருத்தில் கொண்டு, சில நாடுகளில் குரங்கு காய்ச்சலால் உள்ளூர் சுகாதார அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முதலில் கேரளாவில் குரங்கு அம்மை தொற்றால் பாதிக்கப்பட்ட ஒரு நபர் பற்றி அறியப்பட்டது. இதுவரை கேரளாவில் மூவருக்கும் டெல்லியில் ஒருவருக்கும் இந்த தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

குரங்கு அம்மையின் அறிகுறிகள் அவ்வளவு தீவிரமாக இல்லை என்றாலும், குழந்தைகளின் விஷயத்தில், சில தீவிரமான அறிகுறிகளும் தோன்றியுள்ளன. கோவிட்-19 வைரஸுடன் ஒப்பிடும்போது குரங்கு அம்மை வைரஸின் பரவும் தன்மை மிகவும் குறைவாக இருப்பதால் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இருப்பினும், மங்கி பாக்ஸ் குழந்தைகளுக்கு ஆபத்தானது என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். ஆகையால், குழந்தைகளில் தென்படக்கூடும் குரங்கு அம்மை அறிகுறிகள் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியது மிக அவசியமாகும். இந்த அறிகுறிகளை பற்றி இங்கே காணலாம். இவற்றை புறக்கணிக்கக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது. 

குழந்தைகளில் குரங்கு அம்மையின் அறிகுறிகள்

குழந்தைகளில் குரங்கு அம்மை மற்றும் பெரியம்மை அறிகுறிகள் ஒரே மாதிரியாக இருக்கும். பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் குழந்தைகள் பொதுவாக அமைதியின்மை, காய்ச்சல், தடிப்புகள், வீங்கிய நிணநீர் கணுக்கள் மற்றும் உடலில் குளிர்ச்சி போன்ற அறிகுறிகளைக் காட்டுகின்றனர்.

மேலும் படிக்க | குரங்கு அம்மை: அறிகுறிகள் என்ன? சிகிச்சை உள்ளதா? எப்படி பாதுகாப்பாக இருப்பது? 

சொறி:

குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இரண்டாவது அல்லது மூன்றாவது நாளில் சொறி தோன்றும். முதலில் முகத்தில் தடிப்புகள் தோன்றும். இதற்குப் பிறகு அவை கைகள், உள்ளங்கைகள் மற்றும் கால்களுக்கு பரவுகின்றன. சொறியில் தண்ணீர் போன்ற ஒன்று உருவாகத் தொடங்கும்.

காய்ச்சல்:

குழந்தைகளுக்கு குரங்கு அம்மையால் காய்ச்சல் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. ஆகையால் குழந்தைக்கு காய்ச்சல் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகவும்.

குரங்கு காய்ச்சலில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பது எப்படி?

- குரங்குகள், எலிகள் மற்றும் அணில் போன்ற விலங்குகளுடன் குழந்தைகள் தொடர்பு கொள்வதைத் தடுக்கவும்.

- இறந்த விலங்குகள் இருக்கும் இடத்திற்கு குழந்தைகளை அழைத்துச் செல்லாதீர்கள்.

- குழந்தைகள் அசைவம் சாப்பிட்டால், முழுமையாக சமைத்த அசைவத்தை மட்டுமே கொடுங்கள். 

- ஒருவருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டால், குழந்தையை அவருடன் தொடர்பு கொள்ளாமல் பாதுகாக்கவும்.

- குழந்தைகளுக்கு சோப்பு மற்றும் வெந்நீர் கொண்டு கைகளை கழுவ கற்றுக்கொடுங்கள்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | எடையை குறைத்து, முக சுருக்கங்களை நீக்கும் 'White Tea' என்னும் மேஜிக் டீ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News