இரத்தக் கொதிப்பு நோயா? BP அதிகமாகாமா இருக்க இந்த 10 விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க!

Healthy Habits To Maintain Blood Pressure: நமது வாழ்க்கைக்கு அடிப்படை ஆரோக்கியமே என்பதைப் புரிந்துக் கொண்டால் வளமான வாழ்வை வாழலாம், அது இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதில் தொடங்கட்டுமே!

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 16, 2024, 06:10 PM IST
  • இரத்தக் கொதிப்பு நோய்
  • உயர் இரத்த அழுத்தம்
  • தினசரி பழக்கவழக்கங்கள்
இரத்தக் கொதிப்பு நோயா? BP அதிகமாகாமா இருக்க இந்த 10 விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க! title=

உயர் இரத்த அழுத்தம் என்பது இன்று பலரையும் பாதிக்கும் ஒரு பொதுவான நோயாக மாறிவிட்டது. இரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால், அது பல உடல்நல பிரச்சனைகளுக்கு அடிப்படை காரணமாகிவிடுகிறது. உடலின் இரத்த ஓட்டம் அதிகமாவது இரத்த அழுத்தமா என்றால், அதற்கு சரியான பதில், தமனிகளின் சுவர்களுக்கு எதிரான இரத்தத்தின் சக்தி தொடர்ந்து அதிகமாக இருக்கும் போது ஏற்படும் ஒரு நாள்பட்ட நிலை என்பதாக இருக்கும்.

இந்த நிலை நீண்டகாலம் நீடிக்கும்போது, இரத்த அழுத்தத்திற்கான சிகிச்சை மாத்திரை-மருந்து என வாழ்நாள் முழுவதும் போராட வேண்டியிருக்கும். இரத்த அழுத்தம் சீராக இருக்கும்போதே சில பழக்கவழக்கங்களை கடைபிடித்தால், இந்த நாள்பட்ட நோய் நம்மை அண்டாது. ஆனால், இரத்தக் கொதிப்பு எனப்படும் நிலையே வந்துவிட்டாலும், சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கும்போதே சில பழக்கங்களை வழக்கமாக்கிக் கொண்டால் இரத்த அழுத்தம் என்ற அழுத்தம் குறைந்து ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் இரத்த அழுத்த அளவு சீராகிவிடும்.

இரத்த அழுத்தம் தொடர்ந்து அதிகமாக இருந்தால், இதயம் தொடர்பான பிரச்சனைகள் அதிகரிக்கும், மாரடைப்பு போன்ற சிக்கல்களால் மரணத்திற்கு காரணமாகிறது இரத்த அழுத்தம் என்பதால், இதை கவனமாக கையாள்வது நல்லது. இதயப் பிரச்சனைகளைத் தவிர, இதயம், கண்கள், சிறுநீரகம் மற்றும் மூளை என உடலின் பல்வேறு பாகங்களையும் இரத்தக் கொதிப்பு நோய் பாதிக்கிறது.

மேலும் படிக்க | சரும பராமரிப்புக்கு மட்டுமல்ல, நோய் தடுப்பு மருந்தாகவும் பயன்படும் வாழைப்பழத்தோல் மகிமை!

இரத்த ஓட்டத்தின் வேகம் மிக அதிகமாக இருக்கும்போது, இதயம் பம்ப் செய்யும் இரத்தத்தின் அளவும், தமனிகளில் உள்ள இரத்த ஓட்டத்தின் விசையின் எதிரொலியான விசை அளவும் இரத்த அழுத்தத்தை நிர்ணயிக்கிறது. இரத்த அழுத்தம் என்பது mmHg என்ற அளவீட்டில் அளவிடப்படுகிறது. இரத்த அழுத்தம், அதிகபட்சம் மற்றும் குறைந்தபட்சம் என குறிக்கப்படுகிறது.

பொதுவாக இரத்த அழுத்தம் என்பது குறைந்தபட்ச அளவில் 80 mmHg என்றும் அதிகபட்ச அளவாக 120 mmHg என்றும் இருப்பது சாதாரணமானதாக கருதப்படுகிறது.  .

மருந்து இல்லாமல் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த மருத்துவர்கள் பல பழக்கவழக்கங்களை பரிந்துரைக்கின்றனர். அவற்றில் முக்கியமானது உடல் எடை பராமரிப்பு ஆகும். உடல் எடையை பராமரிப்பதற்காக மட்டுமல்ல, உடல் சீராக இயங்கவும் உடற்பயிற்சியை தினசரி வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். 

மேலும் படிக்க | Sun Tan Removal: சுட்டெரிக்கும் வெயில் சருமத்தை பதம் பார்த்துவிட்டதா? பளபளப்பாக சுலப வழி!

ஆரோக்கியமான உணவு என்பது அனைவருக்கும் அடிப்படையான ஒன்று. உடல் சீராக இயங்கத் தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சமச்சீர் உணவை உட்கொள்வது நல்லது. உணவில் சோடியம் அளவு அதிகமாகாமல் பார்த்துக் கொள்ளவும். அதற்கு உப்பை குறைவாக பயன்படுத்தவும். 

உடலில் உப்பு அதிகமாகும்போது இரத்த அழுத்தமும் உயர்கிறது. அதனால் தான், ஒருவர் சமைத்த உணவை அதிகமாக உண்ணும்போது, உடலில் சேரும் உப்பின் அளவும் அதிகரிக்கும் என்பதால், உணவை அளவுடன் உண்பதற்கு பரிந்துரைக்கப்படுகிறது. 

மது அருந்துவது புகைபிடிப்பது போன்ற பழக்கங்கள் உடலை சீர்கெடுத்துவிடும். அவற்றை கைவிடுவது நல்லது. இரவில் போதுமான உறக்கம் இருந்தால் இரத்த அழுத்தம் மட்டுமல்ல, மன அழுத்தமும் வராது.  

வீட்டிலேயே உங்கள் இரத்த அழுத்தத்தைக் கண்காணிப்பது, வழக்கமான பரிசோதனைகளை செய்வது என ஆரோக்கியத்தின் மீது அக்கறை செலுத்துங்கள். நமது ஆரோக்கியமேநமது வாழ்க்கைக்கு அடிப்படை என்பதைப் புரிந்துக் கொண்டால் வளமான வாழ்வை வாழலாம்.  

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | உங்களுக்கு புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகள் இருக்கிறதா? இரத்த புரதம் சொல்லும் ரகசியம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News