ஜிவி-பிரகாஷ் சைந்தவி விவாகரத்துக்கு உண்மை காரணம் என்ன? அவர்களே கொடுத்த விளக்கம்!

GV Prakash Kumar Saindhavi Divorce Real Reason : சில நாட்களுக்கு முன்னர், பாடகரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் குமாரும் சைந்தவியும் தாங்கள் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளதாக அறிவித்தனர். இதையடுத்து, இது குறித்து அவர்களே ஒரு ட்விட்டர் பதிவை வெளியிட்டு இருக்கின்றனர். 

Written by - Yuvashree | Last Updated : May 16, 2024, 05:25 PM IST
  • ஜிவி பிரகாஷ் சைந்தவி விவாகரத்து
  • உண்மையான காரணம் என்ன?
  • அவர்களே போட்ட பதிவு!
ஜிவி-பிரகாஷ் சைந்தவி விவாகரத்துக்கு உண்மை காரணம் என்ன? அவர்களே கொடுத்த விளக்கம்! title=

GV Prakash Kumar Saindhavi Divorce Real Reason : பாடகரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் குமாரும் பாடகி சைந்தவியும் 11 ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்கு பிறகு பிரிந்து வாழ முடிவு செய்துள்ளதாக அறிவித்து இருக்கின்றனர். இதற்கான காரணத்தை அவர்களே பதிவிட்டு இருக்கின்றனர். 

சைந்தவி ட்வீட்:

உண்மையான காரணம் குறித்து பதிவிட்டிருக்கும் சைந்தவி, பல ஊடகங்கள் தங்களின் விவாகரத்து குறித்து தவறான தகவல்களை பதிவிடுவதாகவும், இதனால் தங்களுக்கு மனக்கசப்பு ஏற்பட்டதாகவும் கூறியிருக்கிறார்.

மேலும், இந்த விவாகரத்துக்கு காரணம் எந்த வித தொடர்பும் இல்லை என்றும், இதற்காக ஒருவரின் பெயரை கெடுக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார். 

மேலும் படிக்க | ரீல் வாழ்க்கையில் டூயட் பாடி ரியல் வாழ்க்கையில் ஜோடி சேர்ந்த ஜீவி-சைந்தவி !

22 வருட காதல்!

ஜிவி பிரகாஷ், சைந்தவி 2013ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இருவருமே இசை பிண்ணனியை சேர்ந்தவர்கள் என்பதால் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பும் இவர்களுக்கு கிடைத்தது. சிறு வயதில் இருந்தே நண்பர்களாக பழகிய இவர்கள், பள்ளி பருவத்திலேயே காதலர்களாக மாறியதாக கூறப்படுகிறது. பள்ளி படிப்பை முடித்து கல்லூரி பருவத்திலும் ரிலேஷன்ஷிப்பில் இருந்த இவர்கள் தங்கள் காதல் வாழ்க்கை குறித்து வெளியில் எங்கும் தெரிவிக்காமல் இருந்தனர். பல வருட காதலுக்கு பிறகு திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு அன்வி என்ற பெண் குழந்தை 2020ஆம் ஆண்டு பிறந்தது. 

சில நாட்களுக்கு முன்னர் தாங்கள் பிரிந்து வாழ முடிவெடுத்துள்ளதாக தெரிவித்த இவர்கள், தங்களின் ப்ரைவசியை அனைவரும் மதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். இதையடுத்து, இவர்களின் 22 வருட காதல் இது போல விவாகரத்தில் முடிந்ததை நினைத்து பலர் வருத்தம் கொண்டனர். 

ஜிவி பிரகாஷ் குமார் மீது குவிந்த குற்றச்சாட்டுகள்:

திரைப்பட இசையமைப்பாளராக இருக்கும் ஜிவி பிரகாஷ் குமார், கடந்த 10 ஆண்டுகளாக திரையுலகில் நடிகராகவும் இருந்து வருகிறார். இவர் நடிக்கும் படங்கள் ஏற்கனவே ரசிகர்கள் மற்றும் சினிமா விமர்சகர்கள் இடையே அதிகளவில் அடி வாங்கி வந்தது. இதையடுத்து, ஜிவி பிரகாஷ் இசையமைப்பாளராக இருந்த வரை அவர் நன்றாக இருந்ததாகவும், நடிக்க சென்றவுடன் மாறிவிட்டதாகவும் சிலர் கூறி வருகின்றனர். மேலும், இந்த விவாகரத்திற்கு காரணம் ஜிவி பிரகாஷிற்கு யாருடனோ தொடர்பு இருக்கிறது என்றும், இதனால்தான் இருவரும் பிரிய முடிவு செய்துள்ளதாகவும் பல ஊடகத்துறையினர் பேசி வந்தனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில்தான் சைந்தவி இந்த பதிவினை வெளியிட்டிருக்கிறார். இது, விவாகரத்தை சுற்றி சுழலும் சர்ச்சைக்கு முடிவு கட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க | சைந்தவிக்கு ஜிவி பிரகாஷ் கொடுத்த க்யூட் கிஃப்ட்! என்ன தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News