சதுர்கிரஹி யோகம்... ஏப்ரலில் பட்டையை கிளப்பப் போகும் 5 ராசிகள் இவை தான்!

ஏப்ரல் மாதத்தில், சுக்கிரன், புதன், செவ்வாய் மற்றும் ராகு  ஆகிய நான்கு கிரகங்களும் இணைந்து சதுர்கிரஹி யோகத்தை உருவாக்கப் போகிறார்கள். நான்கு கிரகங்களும் மேஷ ராசியில் ஒன்றாக இணைவதால் குறீப்பிட்ட ஐந்து ராசிகள் அதிகபட்ச பலனை பெறுவார்கள். 

கிரக பெயர்ச்சிகள் மட்டுமல்ல அதனால் ஏற்படும் கிரக சேர்க்கைகளும் ராசிகளின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், ஏப்ரல் மாதத்தில் ஜாக்பாட் பலன்களை பெறும் அதிர்ஷ்ட ராசிகளை அறிந்து கொள்ளலாம்.

1 /7

ஏப்ரல் மாதத்தில், சூரியன், சுக்கிரன், செவ்வாய் ஆகிய கிரகங்கள் தனது ராசிகளை மாற்றிக் கொள்ள உள்ளன. மேலும், கிரக பெயர்ச்சி காரணமாக சுக்கிரன், புதன், செவ்வாய் மற்றும் ராகு ஆகிய கிரகங்கள்  ஏப்ரல் மாதத்தில் இணைகின்றன. இதனால் 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷம் குறைவில்லாமல் இருக்கும் என கணித்துள்ளனர் ஜோதிடர்கள்.

2 /7

ரிஷபம்:  ஏப்ரல் மாதம் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பல புதிய வாய்ப்புகள் வந்து சேரும். நலன்விரும்பிகளின் ஆதரவால் வருமான ஆதாரங்கள் உருவாகி எதிர்பாராத வருமானம் உண்டாகும். தொழில் சம்பந்தமாக பல பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். உங்கள் பயணங்கள் லாபகரமாகவும் இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிந்து நிம்மதி அடைவீர்கள். 

3 /7

ஏப்ரல் மாதம், சிம்ம ராசிக்காரர்களுக்கு  ஐஸ்வர்யம் மற்றும் நற்பலன்களைத் தரப் போகிறது. நெருங்கிய நண்பர்களின் உதவி கிடைக்கும். தொழில், வியாபாரம் போன்றவற்றில் முன்னேற வாய்ப்புகள் அமையும். ஆன்மீகம் மற்றும் சமூக பணிகளில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். நீதிமன்றம் தொடர்பான விஷயங்களில் வெற்றி பெறுவீர்கள். நீங்கள் மேற்கொள்ளும் எந்த வகையான பயணமும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். உங்கள் எதிர்காலத்திற்காக புதிய தொடர்புகள் ஏற்படும். உங்கள் முன்னேற்றத்திற்கு மிகவும் சாதகமாக இருக்கும். 

4 /7

துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் மாதம் மிகவும் இனிமையான மாதமாக இருக்கப் போகிறது. வேலை தேடி நீண்ட நாட்களாக அலைந்து கொண்டிருந்தவர்களுக்கு வெற்றி கிடைக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களிடமிருந்து முழு ஆதரவைப் பெறுவீர்கள். நீதிமன்றம் தொடர்பான விஷயங்களில் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும். மாதத்தின் நடுப்பகுதியில், உங்கள் முக்கிய கவலைகளில் இருந்து விடுவிக்கக்கூடிய ஒருவரைச் சந்திப்பீர்கள்.மேலும், இந்த மாதம் திருமணம் தொடர்பான பெரிய ஆச்சரியத்தைப் பெறலாம். நண்பர்களுடன் சுற்றுலா செல்லலாம்.

5 /7

விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் மாதம் சுபத்தையும் வெற்றியையும் தரும் மாதமாக இருக்கும். சில சவால்களை சந்திக்க நேரிடும். ஆனால், நீங்கள் எல்லாவற்றையும் எளிதாகக் கையாளுவீர்கள். உங்கள் பிள்ளைகளின் தரப்பில் இருந்து சில நல்ல செய்திகளைப் பெறலாம்.  உங்கள் காதல் வாழ்க்கையை பொறுத்தவரை இந்த மாதம் மிகவும் அற்புதமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சிரிப்பும் நிறைந்த சூழல் நிலவும்.

6 /7

தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் மாதம் மிகவும் சிறப்பானதாக இருக்கும். கடினமாக உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கும். உங்கள் தொழில் மற்றும் வியாபாரத்தை முன்னேற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் போது, அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். பணியிடத்தில் அதிகாரிகள் உங்கள் வேலையைப் பாராட்டுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்கள் தொழில் வாழ்க்கையில் சாதனை செய்வீர்கள். மேலும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். கைக்கு வராது என நினைத்த நிலையில், இந்த மாதம் உங்கள் பணத்தை திரும்பப் பெறலாம். இந்த மாதம் உங்கள் நிதி நிலைமையும் சிறப்பாக இருக்கும்.

7 /7

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.