இன்சுலினை சுரக்க செய்து... நீரிழிவுக்கு எதிரியாக இருக்கும் ‘சூப்பர்’ உணவுகள்!

நீரிழிவு நோயாளிகள் சரியான உணவைப் பின்பற்றுவது மிகவும் முக்கியம். சர்க்கரை நோயாளிகள்,  நீரிழிவை கட்டுப்படுத்தும் உணவுகளை தேர்ந்தெடுத்து உட்கொள்வது அவர்களை ஆரோக்கியமாக வைத்திருய்க்கும்.

  • Nov 26, 2023, 19:55 PM IST

தவறான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்களால், அனைத்து வயதினரும் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுகின்றனர். இதனை முழுமையாக குணப்படுத்த முடியாது என்றாலும், அதனை கட்டுப்படுத்த சில இயற்கையான வழிகள் உள்ளன. 

1 /7

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், தனது உணவை தேர்வு செய்வதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவர்கள் இன்சுலினை இயற்கையாக சுரக்க வைக்கும் உணவுகளை உட்கொள்வது மிகவும் பலன் தரும். நீரிழிவுக்கு எதிரியாக இருக்கும் சில உணவுகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.

2 /7

பாகற்காய் கணையத்தைத் தூண்டி இன்சுலினை சுரக்க வைக்கும். பாகற்காய், இன்சுலின் சுரப்பை மேம்படுத்தி, உடலின் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. தினசரி காலையில் வெறும் வயிற்றில் பாகற்காய் சாறு அருந்திவர,  நீரிழிவு நோய் கட்டுப்படும்.   

3 /7

தனியா அல்லது கொத்தமல்லி விதைகள், கணைய செல்களில் இருந்து இன்சுலின் உற்பத்தியை தூண்டுவதன் மூலம், நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும். தனியா அல்லது கொத்தமல்லி விதை நீர்  தயாரிக்க, 1 டீஸ்பூன் கொத்தமல்லி விதைகளை 100 மில்லி தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைக்கவும். இதனை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர இன்சுலின் உற்பத்தி அதிகரித்து, ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.

4 /7

நீரிழிவு நோயைக் கட்டுப்பட்டுத்த, அதிக நார்ச்சத்து மற்றும் ஃபைட்டோகெமிக்கல்ஸ் அடங்கிய ராகி மிகவும் சிறந்தது. ராகி இரத்த சர்க்கரை அளவு மற்றும் ஹைப்பர் க்ளைசீமிக் மற்றும் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துகிறது. நீரிழிவு நோயுள்ளவர்களுக்கு காயம் ஆறும் வேகத்தை அதிகரிக்கும் பண்பையும் ராகி கொண்டுள்ளது என்பது சிறப்பு. அரிசியுடன் ஒப்பிடுகையில் ராகியில் 40 மடங்கு அதிக பாலிஃபினால்கள் உள்ளது. 

5 /7

கொய்யா இலைகள் உடலில் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. கொய்யா இலைகள் இரத்தத்தில் உள்ள இன்சுலின் அளவை சீராக்கும். இரத்தத்தில் உள்ள நல்ல கொழுப்புக்களின் அளவை அதிகரிக்கும். கெட்ட கொழுப்புகளைக் கரைக்கும். கொய்யா இலைகளை கஷாயம் போல செய்து அருந்தலாம். அல்லது கொய்யா இலை பொடி சிறிதளவை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கலாம்.

6 /7

மஞ்சள் நேரடியாக கணைய பீட்டா செல்களில் செயல்பட்டு இன்சுலினை அதிகரிக்க உதவுகிறது. மஞ்சளில் உள்ள குர்குமின் இன்சுலின் உற்பத்தி செய்யும் செல்கள் சேதமடைவதை தடுத்து, இன்சுலின் சுரப்பை மேம்படுத்துவதால்,  சர்க்கரைநோய் கட்டுப்படுத்தப்படுகிறது. 

7 /7

பொறுப்புத் துறப்பு: எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.