சனி, சுக்கிரன் அருளால் நவம்பர் மாதம் இந்த ராசிகளுக்கு பொற்காலம்: முழு ராசிபலன் இதோ

Monthly Horoscope, November 2023: நாளை நவம்பர் மாதம் பிறக்கவுள்ளது. இந்த மாதம் பல முக்கிய கிரகங்கள் தங்கள் நிலையிலிருந்து மாறவுள்ளன. 

கிரகங்களில் மிக முக்கிய கிரகமான சனி பகவான் ஜனவரி 17, 2023 அன்று மாலை 5:47 மணிக்கு கும்ப ராசிக்குள் நுழைந்தார். அதன் பிறகு சனி, ஜூன் 17 அன்று இரவு 10:56 மணிக்கு கும்பத்தில் வக்ர பெயர்ச்சி பெற்றார். சனி நீண்ட காலமாக வக்ர நிலையில் இருந்த பின்னர், இப்போது 4 நவம்பர் 2023 அன்று கும்பத்தில் வக்ர நிவர்த்தி அடைவார். செல்வம், ஆடம்பரம், அன்பு, உலக இன்பம் ஆகியவற்றின் கிரகமான சுக்கிரன் நவம்பர் 3ஆம் தேதி பெயர்ச்சி ஆகவுள்ளார். சனி வக்ர நிவர்த்தி மற்றும் சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் நவம்பர் மாதத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். நவம்பர் மாதத்தில் அனைத்து ராசிகளுக்குமான ராசிபலனை இங்கே காணலாம். 

 

1 /13

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு உயர் பதவி கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். மனம் ஆக்கப்பூரமான சிந்தனைகளால் நிரம்பி இருக்கும். சோம்பல் அதிகமாக இருக்கும். பணி மாற்றம் ஏற்படலாம். நிதி நிலை நன்றாக இருக்கும்.

2 /13

ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு பணியிடத்தில் மேல் அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். பணி இடத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். கோப மிகுதியை கட்டுப்படுத்துங்கள். ஆன்மீக பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது.

3 /13

மிதுனம்: உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் வரலாம். உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி விழிப்புடன் இருங்கள். பொறுமையாய் இருப்பதும் பேச்சில் மென்மை இருப்பதும் அவசியம் ஆகும். பணியிடத்தில் அதிக உழைப்பு இருக்கும். அதிகப்படியான கோபத்தையும் ஆர்வத்தையும் தவிர்க்கவும். 

4 /13

கடகம்: வருமானம் குறைவாகவும் செலவுகள் அதிகமாகவும் இருக்கும். விரக்தி உணர்வுகள் மனதில் எழும். எனினும் உங்கள் நம்பிக்கையால் அதை சரி செய்யலாம். நண்பரின் உதவி வருமானமாக அமையும். வாகனப் பராமரிப்புச் செலவுகள் கூடும். குழந்தைகளின் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

5 /13

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்கள் அரசு மற்றும் அதிகாரத்தின் ஆதரவைப் பெறுவீர்கள். மன அமைதி இருக்கும். தாயின் உதவியால் பணம் சம்பாதிக்கலாம். பண வரவு அதிகரிக்கும். வேலை வாய்ப்புக்கான பாதைகள் அமையலாம். தந்தையின் உடல்நிலையில் அக்கறை காட்டுங்கள். அதிக உழைப்பு இருக்கும். முழு நம்பிக்கை இருக்கும். உத்தியோகத்தில் உயர் பதவி பெறலாம்.

6 /13

கன்னி: மனதில் அமைதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். பேச்சில் கடுமையின் தாக்கம் இருக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் கூடும். தாயின் ஆதரவு கிடைக்கும். முழு நம்பிக்கை இருக்கும். கோபத்தை கட்டுப்படுத்துவது உங்களுக்கு நல்லதாக அமையும். கல்விப் பணிகளில் இடையூறுகள் ஏற்படலாம்.

7 /13

துலாம்: வியாபாரத்தில் நண்பர்களின் ஆதரவைப் பெறலாம். வருமானம் அதிகரிக்கும். பேச்சின் செல்வாக்கு அதிகரிக்கும். உங்கள் தாயிடமிருந்து நிதி உதவி பெறலாம். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். காதலில் தன்னம்பிக்கை நிலைத்திருக்கும். நிதி நிலை நன்றாக இருக்கும். வாகன வசதி கூடும்.

8 /13

விருச்சிகம்: சகோதரர்களின் ஒத்துழைப்பால் லாப வாய்ப்புகள் அமையும். பொறுமையைக் கடைப்பிடிக்க முயற்சி செய்யுங்கள். உங்களின் விருப்பத்திற்கு மாறாக பணியிட மாற்றம் ஏற்படலாம். குடும்ப வாழ்க்கையில் சிறு பிரச்சனைகள் வரக்கூடும். தந்தையின் ஆதரவு கிடைக்கும். வியாபாரம் மேம்படும். 

9 /13

தனுசு: குடும்பத்துடன் சில மத ஸ்தலங்களுக்கு பயணம் மேற்கொள்ளலாம். மன அழுத்தத்தைத் தவிர்க்கவும். படிப்பில் ஆர்வம் உண்டாகும். கல்விப் பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். பணியிடத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மன உளைச்சல் இருக்கலாம். தாயாரின் ஆதரவு கிடைக்கும். 

10 /13

மகரம்: பணி இடத்தில் சாதகமான நிலை இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் பரிபூரண ஆதரவு கிடைக்கும். மனதில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும். சகோதர சகோதரிகளின் ஆதரவு கிடைக்கும். குடும்ப வாழ்க்கை அமைதியாக இருக்கும். பழைய நண்பர்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும்.

11 /13

கும்பம்: உங்கள் பேச்சில் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது மிக அவசியமாகும். எதிர்பார்த்து காத்திருந்த நல்ல செய்தி கிடைக்கும். மன கலக்கத்திற்கு நிவாரணம் கிடைக்கும். உங்கள் மனதில் எதிர்மறை எண்ணங்களைத் தவிர்க்கவும். வியாபாரம் மேம்படும். குடும்பத்தில் சமய காரியங்கள் நடைபெறலாம். லாப வாய்ப்புகள் அமையும். சுய கட்டுப்பாட்டுடன் இருங்கள். அதிகப்படியான கோபத்தைத் தவிர்க்கவும்.

12 /13

மீனம்: செலவுகள் அதிகமாகும். வாழ்வதில் அசௌகரியமாக இருக்கலாம். நம்பிக்கை குறைவு ஏற்படும். அதிகப்படியான கோபத்தையும் ஆர்வத்தையும் தவிர்க்கவும். நண்பர்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்கலாம். செலவுகள் கூடும். குழந்தைகள் உடல்நலக் கோளாறுகளால் பாதிக்கப்படலாம். நம்பிக்கையும் விரக்தியும் கலந்த உணர்வுகள் மனதில் நிலைத்திருக்கும். எனினும் தெய்வ வழிபாட்டால் இவை சரியாகும்.

13 /13

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.