தமிழில் இதுவரை வெளியாகியுள்ள சிறந்த 5 கிரைம் திரில்லர் படங்கள்!

உலகம் முழுவதும் கிரைம் திரில்லர் படங்களுக்கு அதிக வரவேற்பு இருக்கும். தமிழிலும் நிறைய படங்கள் இந்த வரிசையில் வெளியாகி உள்ளன. இதுவரை வெளியான சிறந்த படங்களை பற்றி பார்ப்போம். 

1 /5

வேட்டையாடு விளையாடு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கமல்ஹாசன், ஜோதிகா, கமலினி முகர்ஜி, டேனியல் பாலாஜி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடிப்பில் 2006 ஆம் ஆண்டு வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல பாராட்டைப் பெற்றது. தொடர் கொலையாளியைக் கண்டுபிடிக்க கதாநாயகன் கமல்ஹாசன் எடுக்கும் முயற்சி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.

2 /5

ராட்சசன் ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், எஸ்ஐ அருண்குமார், அமலா பால், விஜி, அம்மு அபிராமி ஆகியோர் நடிப்பில் வெளியான படம் ராட்சசன். தமிழில் வெளியான சிறந்த கிரைம் திரில்லர் படங்களில் இதுவும் ஒன்றும்.

3 /5

தீரன் அதிகாரம் ஒன்று வினோத் இயக்கத்தில் கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங், அபிமன்யு சிங், போஸ் வெங்கட், பிரவீனா, மனோபாலா ஆகியோர் நடிப்பில் 2017 ஆம் ஆண்டு வெளியான படம் தான் தீரன் அதிகாரம் ஒன்று. 1990 களில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது.

4 /5

பாபநாசம் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கமல்ஹாசன், கௌதமி, கலாபவன் மணி, நிவேதா தாமஸ், எம்.எஸ்.பாஸ்கர், எஸ்தர் தாமஸ், கலாபவன் மணி, அனந்த் மகாதேவன் ஆகியோர் நடிப்பில் வெளியான படம் பாபநாசம். மலையாளத்தில் வெளியான படத்தின் தமிழ் ரீமேக் இந்த படம் ஆகும்.

5 /5

விக்ரம் வேதா  2017 ஆம் ஆண்டு புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் தமிழில் வெளியான திரில்லர் படம் விக்ரம் வேதா ஆகும். மாதவன், விஜய் சேதுபதி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், கதிர், வரலக்ஷ்மி சரத்குமார், பிரேம், அச்யுத் குமார், ஹரீஷ் பெராடி மற்றும் விவேக் பிரசன்னா ஆகியோர் இந்த படத்தில் நடித்து இருந்தனர்.