உடல் எடையை குறைக்க இந்த ஜூஸ் ட்ரை பண்ணி பாருங்க!

இயற்கையாக கிடைக்கும் பழ வகைகளில் தயாரிக்கப்படும் பழச்சாறுகளில் சிலவற்றை தினசரி டயட்டில் சேர்த்துக்கொள்வதன் மூலம் உங்கள் உடல் எடையை குறைக்க முடியும்.

 

1 /5

ஆரஞ்சு ஜூஸ் : ஆரஞ்சு ஜூஸ் வைட்டமின்-சி சத்து அதிகம் நிறைந்தது, இது உடலின் வளர்சிதை மாற்றத்தை தூண்டுகிறது.  இதன் காரணமாக உங்கள் உடலின் கொழுப்புகள் எரிக்கப்படுகிறது மற்றும் இது குறைந்த கலோரியை கொண்டுள்ளது.  

2 /5

தர்பூசணி ஜூஸ் : தர்பூசணியில் நிறைந்துள்ள அமினோ அமிலம் உடல் எடை குறைப்பிற்கு உதவுகிறது.  இதில் உள்ள வைட்டமின் ஏ, பி, சி வளர்ச்சிதை மாற்றத்தை தூண்டுகிறது, தினமும் தர்பூசணி ஜூஸ் குடிப்பது உடல் எடையை குறைக்க உதவும்.  

3 /5

மாதுளம்பழம் ஜூஸ் : மாதுளையில் வைட்டமின் ஏ. சி, சி வைட்டமின்கள் உள்ளன, இந்த ஜூஸை தினமும் குடிப்பதால் உடலில் கொழுப்புகள் குறைவதோடு பல்வேறு விதமான ஊட்டச்சத்துக்களையும் தருகிறது.  

4 /5

பீட்ரூட் ஜூஸ் : பீட்ரூட்டில் எண்ணற்ற வைட்டமின்களும், தாதுக்களும் நிறைந்துள்ளது.  பீட்ரூட் ஜூஸ் குடிப்பது உங்கள் வயிறு நிரம்பியது போன்ற உணர்வை தருகிறது, மேலும் இது உடல் எடை குறைப்பில் சிறந்த பலனை தருகிறது.  

5 /5

சுரைக்காய் ஜூஸ் : சுரைக்காயில் உள்ள வைட்டமின் பி, நார்சத்து போன்றவை உங்கள் செரிமான மண்டலத்தையும், வளர்சிதை மாற்றத்தையும் தூண்டுகிறது.  இதனை உங்கள் டயட்டில் தினமும் சேர்த்துக்கொள்வதன் மூலம் உடல் எடையை குறைக்கலாம்.