உச்சநீதிமன்றத்தில் உதயநிதிக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும் - ஹெச்.ராஜா

சனாதானம் குறித்து பேசியவர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு நிச்சயம் தண்டனை பெறுவார்கள் என பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 6, 2023, 04:55 PM IST
  • சனாதனம் குறித்து சர்ச்சைப் பேச்சு
  • உச்சநீதிமன்றம் தண்டிக்கும்
  • சிவகங்கையில் ஹெச்.ராஜா ஆவேசம்
உச்சநீதிமன்றத்தில் உதயநிதிக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும் - ஹெச்.ராஜா title=

சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு பா.ஜ.க சார்பில் மாவட்ட தலைவர் சத்தியநாதன் தலைமையில் எஸ்.சி மக்களுக்கு மத்திய அரசு வழங்கிய நிதியினை முறையாக பயன்படுத்தாத திமுக அரசை கண்டித்து பிச்சை எடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் பொது மக்கள் மத்தியில் பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்திய அரசு கடந்த 9 ஆண்டுகளில் எஸ்.சி மக்களுக்கு 1 லட்சத்தி 12 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளது. அதிலும் குறிப்பாக தமிழக அரசிற்கு 16 ஆயிரத்தி 442 கோடி ஒதுக்கியுள்ளது. இதில் வெறுமென 5976 கோடி ரூபாய் மட்டும் செலவு செய்திருக்கிறது.

திமுக அரசு எஸ்.சி மக்களுக்கு மத்திய அரசு வழங்கிய தொகையில் 10 ஆயிரத்தி 466 கோடியை வேறு திட்டங்களுக்கு செலவு செய்திருக்கலாம் அல்லது செலவு செய்யாமலிருக்கலாம். இதற்கு கண்டனம் தெரிவித்தே இந்த பிச்சை எடுக்கும் போராட்டம். சனாதானம் குறித்து பேசியதற்கு காங்கிரஸ் கூட்டணியில் உள்ளவர்களே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சனாதானம் குறித்து பேசியவர்கள் உச்சநீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள். கவிஞர் வைரமுத்து திருக்குறள் குறித்து முழுமையாக அறியாமல் பேசியுள்ளார். கவிஞர் வைரமுத்து அதிகமாக பேசாமலிருந்தால் மானமாவது மிச்சமிருக்கும். 

மேலும் படிக்க | உதயநிதி அடித்த கிண்டலில் கடுப்பான சர்ச்சை சாமியாரின் ரியாக்ஷன்

அதிகம் பேசினால் மானம் போய்விடும். முட்டாள்களின் டுவிட்டருக்கு நான் பதில் சொல்ல தேவையில்லை. சாமியாரின் சர்ச்சை பேச்சு குறித்த கேள்விக்கு அமைச்சர் உதயநிதியின் படம் உ.பி சாமியாருக்கு எப்படி கிடைத்தது?. இந்த குற்றச்சாட்டை உருவாக்குவதற்காகவே பொய்யாக இந்த சர்ச்சையை கிளப்பியிருக்கிறார்கள். டி.ஆர்.பாலுவின் கருத்து குறித்த கேள்விக்கு பாரதம் என்பதே இந்தியாவின் பெயர். இந்தியா என்கிற பெயர் வெள்ளையர்கள் வைத்ததே. பாரதம் என பெயர் மாற்றுவதி எந்த சிக்கல்களும் இல்லை. டி.ஆர்.பாலுவிற்கு கருப்பு பணத்தை மாற்றுவதில்தான் சிக்கல் உள்ளது. 

உ.பி.யில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு பதிவு குறித்த கேள்விக்கு அமைச்சர் உதயநிதி மீது தமிழகம் முழுவதுமுள்ள காவல் நிலையங்களில் பா.ஜ.க சார்பில் புகார் அளிக்கவுள்ளோம். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நானே சென்று புகார் அளிக்கவுள்ளேன் என்றும் ஹெச்.ராஜா பேசினார்.

மேலும் படிக்க | ஆளுநரின் கையெழுத்துக்காக காத்திருக்கும் 49 சிறைவாசிகளின் விடுதலை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News