உதகை மலர் கண்காட்சி: மலர் தொட்டிகளை அடுக்கும் பணியை தொடங்கி வைத்தார் மாவட்ட ஆட்சி தலைவர் அருணா

Udhagamandalam: உதகை அரசு தாவரவியல் பூங்காவில் வரும் 10-ஆம் தேதி தொடங்கும் 126 ஆவது மலர்கண்காட்சிக்காக அலங்கார மேடைகளில் 35 ஆயிரம் மலர் தொட்டிகளை அடுக்கும் பணியை நீலகிரி மாவட்ட ஆட்சி தலைவர் அருணா தொடங்கி வைத்தார்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 3, 2024, 02:05 PM IST
  • உதகை அரசு தாவரவியல் பூங்கா 126 ஆவது மலர்கண்காட்சி.
  • 35 ஆயிரம் மலர் தொட்டிகளை அடுக்கும் பணியை நீலகிரி மாவட்ட ஆட்சி தலைவர் அருணா தொடங்கி வைத்தார்.
  • மலர் கண்கட்சி தொடங்கும் அதே நாளில் அரசு ரோஜா பூங்காவில் 19-ஆவது ரோஜா கண்காட்சியும் தொடங்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
உதகை மலர் கண்காட்சி: மலர் தொட்டிகளை அடுக்கும் பணியை தொடங்கி வைத்தார் மாவட்ட ஆட்சி தலைவர் அருணா  title=

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் வரும் 10-ஆம் தேதி தொடங்கும் 126 ஆவது மலர்கண்காட்சிக்காக அலங்கார மேடைகளில் 35 ஆயிரம் மலர் தொட்டிகளை அடுக்கும் பணியை நீலகிரி மாவட்ட ஆட்சி தலைவர் அருணா தொடங்கி வைத்தார்.

மலர் கண்கட்சி தொடங்கும் அதே நாளில் அரசு ரோஜா பூங்காவில் 19-ஆவது ரோஜா கண்காட்சியும்  தொடங்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மலர் கண்கட்சிக்கான நுழைவு கட்டணம் 3 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி பெரியவர்களுக்கு 150 ரூபாயும் சிறியவர்களுக்கு 75 ரூபாயும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் உதகையில் தற்போது கோடை சீசன் களைக்கட்டி உள்ளது. இதனால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் படை எடுத்து வந்த வண்ணமாக உள்ளனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பதற்காக பிரசித்தி பெற்ற அரசு தாவரவியல் பூங்காவில் வரும் மே 10-ந் தேதி 126 வது மலர் கண்காட்சி தொடங்குகிறது. 11 நாட்கள் மலர் கண்காட்சி நடைபெறும் நிலையில் அதற்கான பணிகள் பூங்காவில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில் 126 வது மலர்கண்காட்சியை காண வரும் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக 75 இனங்களில் 388 வகையான 35 ஆயிரம் மலர் தொட்டிகளை அடுக்கும் பணி இன்று தொடங்கியது. அதனை நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் அருணா தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அருணா: இந்த ஆண்டு மலர் கண்காட்சி வழக்கத்தை விட முன்னதாகவே தொடங்க உள்ளதாகவும் அதன்படி மே பத்தாம் தேதி தொடங்கி மே 20 ஆம் தேதி வரை நடைபெறும் என்றார். 

மேலும் மலர் கண்கட்சி தொடங்கும் அதே மே 10 ஆம் தேதி அரசு ரோஜா பூங்காவில் 19 வது ரோஜா கண்காட்சி  மே 19 ஆம் தேதி நிறைவடையும் என்றார். அதனை தொடர்ந்து மே 24 ஆம் தேதி குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 64 வது பழக்காட்சி மே 24-ந்தேதி  தொடங்கி மே 26 ஆம் தேதி நிறைவடையும் என்றார். மேலும் இந்த ஆண்டு மலர் கண்காட்சியின் சிறப்பு அம்சமாக பெரிய மலர் அலங்காரம் முதல் சிறிய மலர் அலங்காரம் வரை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், 6.5 லட்சம் மலர்கள் இடம் பெற இருப்பதாக கூறிய அருணா அறுபதாயிரம் மலர் தொட்டிகள் அலங்கார மேடைகளில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

மேலும் படிக்க | நாமக்கல் : காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாத்தா கொலை - பேரன் கைது! பரபரப்பு பின்னணி

இதனிடையே சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ள இ-பாஸ் நடைமுறை அமல்படுத்துவது குறித்து செய்தியாளர்கள் கேட்ட போது நீதிமன்ற உத்தரவுப்படி மே 7 ம் தேதி முதல் இ-பாஸ் நடைமுறை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதனை எவ்வாறு அமல்படுத்துவது என்பது குறித்து இன்று மாலை அறிவிக்கப்படும் என்றார். மேலும் குடிநீர் தட்டுப்பாடு வழங்க தாவரவியல் பூங்காவில் ஆழ்துளை கிணறுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த ஆண்டு மலர் கண்காட்சியின் சிறப்பு அம்சமாக உதகை அரசு தாவரவியல் பூங்காவில் LASER LIGHT காட்சிகளை நடத்த முதல்முறையாக திட்டமிடப்பட்டுள்ளது. இதனிடையே மலர் கண்கட்சிக்கான நுழைவு கட்டணம் 3 மடங்காக உயர்த்தபட்டு பெரியவர்களுக்கு 150 ரூபாயும் சிறியவர்களுக்கு 75 ரூபாயும் கட்டணமாக பூங்கா நிர்வாகம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே போல ரோஜா கண்காட்சிக்கான நுழைவு கட்டணம் இரண்டு மடங்கு உயர்த்தப்பட்டு பெரியோருக்கு 100 ரூபாயும் சிறியவர்களுக்கு 50 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

 வழக்கமாக கோடை சீசன் தொடக்கமாக காய்கறி கண்காட்சி, வாசனை திரவிய கண்காட்சி போன்றவைகள் நடத்தப்பட்டு வந்த நிலையில் இந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் அவை இரண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | 7 மாத கர்ப்பிணி பெண் ரயிலில் இருந்து விழுந்து பலி! காரணம் என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News