நிர்மலா டீச்சர் விவகாரம் குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம்..

ஆளுநரையோ, செயலாளரையோ, அதிகாரிகளையோ நிர்மலா தேவி சந்திக்கவில்லை என ஆளுநர் மாளிகை விளக்கம் தந்துள்ளது..! 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 12, 2018, 01:34 PM IST
நிர்மலா டீச்சர் விவகாரம் குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம்.. title=

ஆளுநரையோ, செயலாளரையோ, அதிகாரிகளையோ நிர்மலா தேவி சந்திக்கவில்லை என ஆளுநர் மாளிகை விளக்கம் தந்துள்ளது..! 

பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் மாளிகையை தொடர்புபடுத்தி செய்தி வெளியிட்ட நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் கோபால் கைது செய்யப்பட்டு பின்னர், அவர் மீதான வழக்கை ரத்து செய்த நீதிமன்றம் அன்றைய தினமே விடுவித்தது. ஆளுநர் மாளிகை சார்பில் அளிக்கப்பட்ட புகாரை தொடர்ந்தே நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டதாக தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம் தந்துள்ளது. அதில், "கடந்த ஓராண்டில்  ஆளுநரையோ, அவரது செயலரோ இதுவரை நிர்மலா தேவியை சந்திக்கவில்லை. பத்திரிகைக்கு கருத்து சுதந்திரம் வேண்டும் தான். ஆனால் விமர்சனங்களுக்கு ஒரு எல்லை உண்டு. உண்மைக்கு மாறான தகவலை நக்கீரன் இதழ் வெளியிட்டுள்ளது. அந்த தகவல் ஒரு சதவீதம் கூட உண்மையில்லை.

எந்த தொடர்பும் இல்லாத ஆளுநரை நிர்மலா தேவி விவகாரத்தில் சேர்த்து பேசுவது கண்டனத்திற்குரியது.  மாநிலத்தின் முதல் குடிமகனை தரம் தாழ்ந்து விமர்சித்ததால், நக்கீரன் கோபால் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ஆளுநர் மாளிகையின் மாண்பைகுறைக்கக்கூடிய எந்த ஒரு விஷயத்தையும் பொறுத்துக்கொள்ள முடியாது" என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

 

Trending News