இணையத்தை பற்றவைத்த ஜோடி... மீண்டும் ஒரு ரவுடி பேபி: வீடியோ வைரல்

Viral Video: உலகின் பல மூலைகளில் நடக்கும் சுவாரசியமான, சுவையான, வித்தியாசமான, விசித்திரமான நிகழ்வுகளை நாம் தினமும் சமூக வலைத்தளங்களில் காண்கிறோம். இணையத்தில் நடனங்கள் மற்றும் பாடல்களின் வீடியோக்கள் பட்டையை கிளப்புவதுண்டு.

Viral Dance Video: 2018 ஆம் ஆண்டு வெளியான மாரி 2 படத்தில் இடம் பெற்ற ரவுடி பேபி பாடம் அதன் துடிப்பான நடனத்துக்காக மிக பிரபலமானது. இந்த பாடலில் தனுஷ் மற்றும் சாய் பல்லவி மாஸ் நடனம் ஆடியுள்ளார்கள். அந்த பாடலில் இடம்பெற்றுள்ள சாய் பல்லவி மற்றும் தனுஷின் அசாத்திய நடன அசைவுகளை பலர் ஆடிப்பார்த்துள்ளனர். எனினும், அனைவராலும் அதை அப்படியே ஆட முடியவில்லை. சில நாட்களுக்கு முன்னர், கொல்கத்தாவை சேர்ந்த ஒரு நடன இயக்குனர் ஜோடி இந்த பாடலுக்கு தாங்கள் ஆடிய நடன வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டது. சௌரப் மற்றும் அனோஷாவின் ஜோடி, வீடியோவில், தனுஷ் மற்றும் சாய் பல்லவியைப் போலவே உடை அணிந்து அவர்களைப் போலவே டான்ஸ் ஆடியுள்ளனர். டான்ஸ் ஆடும்போது இவர்களின் துடிதுடிப்பும், எனர்ஜியும், நடன அசைவுகளும் காண்பவர்களை பிரமிக்க வைக்கிறது. 

Trending News