அஜித் ரசிகர்களுக்கு இன்று கொண்டாட்டம்.. விடாமுயற்சி படத்தின் முக்கிய அப்டேட்

Vidaamuyarchi Movie Update : விடாமுயற்சி படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வரலாம் என தகவல் வெளியாகி இருக்கிறது. அதனால் அஜித் ரசிகர்கள் கொண்டாட தயாராகி வருகின்றனர். 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Mar 14, 2024, 10:05 AM IST
  • அஜித் - த்ரிஷா - அர்ஜுன் இணைந்து நடிக்கும் படம்.
  • படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்தது.
  • இன்று வெளியாகும் மிகப்பெரிய அறிவிப்பு.
அஜித் ரசிகர்களுக்கு இன்று கொண்டாட்டம்.. விடாமுயற்சி படத்தின் முக்கிய அப்டேட் title=

Vidaamuyarchi Movie Exclusive Update : விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பற்றிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி விடாமுயற்சி ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாக வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் முழு விவரத்தை இந்த பதிவில் காண்போம்.

அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் :
இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கியுள்ள படம், விடாமுயற்சி. அவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான கலகத்தலைவன் படத்துக்கு நல்ல வரவேற்பே கிடைத்தது. இதன் காரணமாக விடாமுயற்சி (Vidaa Muyarchi) படத்தை சிறந்த படமாக கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் அஜித் (Ajith Kumar) ஹீரோவாக நடித்துள்ளார், மேலும் படத்தில் த்ரிஷா, கதாநாயகியாக நடித்துள்ளார். இன்னொரு முக்கிய கதாப்பாத்திரத்தில் ரெஜினா கசான்ட்ரா நடித்துள்ளார். இவர்களுடன் இந்த திரைப்படத்தில் அர்ஜூன், ஆரவ், அர்ஜூன் தாஸ் ஆகியோரும் நடித்துள்ளனர். மேலும் லைகா நிறுவனம் படத்தை தயாரிக்க அனிருத் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

அஜர்பைஜானில் ஷூட்டிங்:
இதனிடையே இந்த படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட மூன்று மாதங்கள்வரை அஜர்பைஜானில் தொடங்கி நடந்துவந்தது. மங்காத்தா படத்துக்கு பிறகு அஜித் - த்ரிஷா - அர்ஜுன் இணைந்து நடிக்கும் படம் இதுவாகும். படத்தின் ஷூட்டிங்கின்போது மிலனின் உயிரிழப்பு உள்ளிட்ட சோக சம்பவங்கள் நடந்தாலும் படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்தது.

மேலும் படிக்க | Manjummel Boys Box Office: மஞ்சுமெல் பாய்ஸின் அடுத்த சாதனை... தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸ் வசூல் இத்தனை கோடியா?

முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு:
தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வந்த விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் ஏறத்தாழ முக்கியமான காட்சிகள் அனைத்தையும் அஜர்பைஜானிலேயே மகிழ் திருமேனி ஷூட் செய்து முடித்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்த ஷெட்யூல் முடிந்துவிட்டதாகவும் அடுத்த லொக்கேஷன் தேடும் பணியில் படக்குழு ஈடுபட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. தற்போது படக்குழு சென்னையில் கூட விரைவில் அடுத்தக்கட்ட ஷூட்டிங்கை தொடங்கயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன் அஜித்திற்கு காதுக்கு செல்லும் நரம்பில் வீக்கம் இருப்பது தெரிய வந்து அறுவை சிகிச்சை நடந்தது. தற்போது அவர் முழு உடல்நலத்துடன் நன்றாக இருக்கிறார். இதனால் அடுத்தக்கட்ட ஷூட்டிங்கில் அவர் கலந்துகொள்ள சில நாட்கள் ஆகலாம் என்று தெரிகிறது.

இன்று வெளியாகும் மிகப்பெரிய அறிவிப்பு:
இந்நிலையில் தற்போது இன்று அஜித் ரசிகர்களுக்கு ஒரு பெரிய சர்ப்ரைஸ் வர போகிறதாம். அதன்படி படத்தின் இயக்குனர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு இன்று அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளதாக பதிவிட்டுள்ளார். இதனால் இன்று விடாமுயற்சி படத்தின் பர்ஸ்ட் லுக் வரலாம் என கூறப்படுகிறது. அதனால் அஜித் ரசிகர்கள் கொண்டாட தயாராகி வருகின்றனர்.

 

 விடாமுயற்சி படத்தின் ஆக்ஷன் காட்சி லீக் :
முன்னதாக விடாமுயற்சி திரைப்படத்தின் ஆக்ஷன் காட்சிகள் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அனைத்தும் சமூக வலைத்தளங்களில் லீக் ஆகி இணையத்தில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.. 

மேலும் படிக்க | Director Premkumar: பிரபல பத்திரிக்கையாளரை கிழித்து தொங்கவிட்ட 96 பட இயக்குனர் பிரேம்குமார்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News