ஓப்பனிங் கிங் அஜித்தின் ‘விவேகம்’ ஆட்டம் நாளை முதல்....

Last Updated : Aug 23, 2017, 02:04 PM IST
ஓப்பனிங் கிங் அஜித்தின் ‘விவேகம்’ ஆட்டம் நாளை முதல்.... title=

நாளை முதல் அஜித்தின் பிரம்மாண்டம்.

இயக்குனர் சிவா இயக்கத்தில் ‘விவேகம்’  திரைப்படம் நாளை உலக முழுவதும் பிரம்மாண்டமான முறையில் வெளியிடப்படுகிறது. இதில் அஜித், விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன் ஆகியோர் நடித்து உள்ளனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். சத்யஜோதி நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது.

‘தல’ அஜீத்தின் ‘விவேகம்’  திரைப்படத்தின் ஃபஸ்ட் லுக் வெளியான முதல் டிரைலர் வரை பெரும் ஆதாரவு கிடைத்தது. சமூக வலைத்தளங்களிலும் பெரிதாக வரவேற்பு பெற்றது.

இதுவரை அஜித் நடிக்க படங்களில் அதிக பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட படமாகும். நாளை வெளியாகும் ‘விவேகம்’ படம் சுமார் 32௦0 திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக தெரிகிறது. சுமார் 50 கோடிக்கு தமிழ்நாடு உரிமை மட்டும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. பல்வேறு திரையரங்குகளில் அனைத்து டிக்கெட்களும் விற்று தீர்ந்துவருகின்றன.

நாளை முதல் ‘விவேகம்’ ஆட்டம் ஆரம்பம் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

 

 

 

 

Trending News