விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற அடிச்சு தூக்கு பாடல் 100 மில்லியனை கடந்து சாதனை!

Ajith Movie Update: விசுவாசம் படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுமே படம் வெளிவருவதற்கு முன்பே ரசிகர்களிடையே ஒரு நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 13, 2021, 05:49 PM IST
விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற அடிச்சு தூக்கு பாடல் 100 மில்லியனை கடந்து சாதனை! title=

Ajith Movie Update: "சிறுத்தை சிவா இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் நடிகர் அஜித் நடித்து 2019 ஆம் ஆண்டு பொங்கல் அன்று வெளியானது விசுவாசம் திரைப்படம். இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நயன்தாரா மற்றும் விவேக், தம்பி ராமையா, யோகி பாபு, ரோபோ சங்கர் என பல இப்படத்தில் நடித்திருந்தனர்.

வீரம், வேதாளம், விவேகம் போன்ற வெற்றிப் படங்களைத் தொடர்ந்து மீண்டும் நான்காவது முறையாக இப்படத்தில் நடிகர் அஜித்தும் சிறுத்தை சிவாவும் (Siva And Ajith Combo ) இணைந்ததால் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு உண்டானது.

இப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுமே (Viswasam Song) படம் வெளிவருவதற்கு முன்பே ரசிகர்களிடையே ஒரு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. படத்திற்கு டி இமான் இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற "அடிச்சு தூக்கு" பாடலுக்கு ஒவ்வொரு கிராமத்திலும் திருவிழாக்காலங்களில் மைக் செட் போட்டு இந்த பாடலுக்கு குத்தாட்டம் போடுவார்கள்.

ALSO READ | விஸ்வாசம் படத்தை பாராட்டிய காவல்துறை துணை ஆணையர்

"இப்பொழுது இந்த பாடல் யூடியூப்பில் 100 மில்லியன் (Million) பார்வையாளர்களை கடந்து சென்றுகொண்டிருக்கிறது. இதனை அஜித் ரசிகர்கள் தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் கொண்டாடி வருகின்றனர்.

இந்த படத்தில் இடம்பெற்ற கண்ணான கண்ணே பாடலுக்கு இசையமைத்ததற்காக இசையமைப்பாளர் டி.இமானுக்கு தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | விஸ்வாசம் படத்தின் அடிச்சுத் தூக்கு பாடல் வீடியோ -பார்க்க

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News