Ajith Kumar Accident: “லைசன்ஸ் இருக்கா உங்க கிட்ட?” விபத்து ஏற்படுத்திய அஜித்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்!

Ajithkumar Vidaa Muyarchi Shooting Spot Accident : மகிழ் திருமேனி இயக்கியுள்ள ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது. இதன் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்த நிலையில், அவரை பலர் ட்ரோல் மெட்டீரியலாக்கியுள்ளனர். 

Ajithkumar Vidaa Muyarchi Shooting Spot Accident : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருக்கும் அஜித்குமார், விடாமுயற்சி பட வேலைகளில் பிசியாக இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு அஜர்பைஜானில் நடைப்பெற்றது. அப்போது, ஒரு கார் ஸ்டண்ட் காட்சியை படம் பிடிக்கும் போது, அஜித்தும் நடிகர் ஆரவ்வும் பயணித்த கார் விபத்துக்குள்ளானது. காரை ஓட்டிக்கொண்டிருந்தவர் அஜித் என்பதால் இவரை நெட்டிசன்ஸ் ட்ரோல் செய்து வருகின்றனர். இது குறித்த மீம்ஸ்களை இங்கு பார்ப்போம். 

1 /8

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்திருக்கும் படம், விடாமுயற்சி. இந்த படத்தின் படப்பிடிப்பு, அஜர்பைஜான் நாட்டில் சில மாதங்களுக்கு முன்பு நடைப்பெற்றது. அப்போது, ஆரவ் உடன் நடிகர் அஜித்குமார் பயணம் செய்வது போல ஒரு காட்சி படமாக்கப்பட்டது. அப்போது, நடிகர் அஜித்குமாரின் கண்ட்ரோலை மீறி கார் குப்புற கவிழ்ந்து விழுந்துவிட்டது. இந்த வீடியோவை, அஜித்குமாரின் செய்தி தொடர்பாளர் சுரேஷ் சந்திரா வெளியிட்ட நிலையில், அஜித்தை பலர் ட்ரோல் மெட்டீரியலாக்கி மீம்ஸ் போட்டு வருகின்றனர். 

2 /8

அஜித்குமார், ஒரு பைக் பிரியர். இவருக்கு பைக்கில் செல்லும் போதும் விபத்து நேர்ந்துள்ளது. அப்படி ஒரு முறை அவர் கீழே விழுந்த போட்டோவை பலர் வைரலாக்கி வருகின்றனர். 

3 /8

“இனிமே இவர் கூட போனா இந்த சம்பவம்தானே நினைவுக்கு வரும்!”

4 /8

ஆரவ், விபத்து நடக்கும் தருவாயில் கொடுத்த ரியாக்‌ஷன் தற்போது ட்ரெண்டாகி வருகிறது. 

5 /8

அஜித்தால் விபத்தில் சிக்கியது ஆரவ் என்பதால், அவர் லைசன்ஸ் கேட்பது போல இந்த மீமை உருவாக்கியிருக்கின்றனர்.

6 /8

இந்த விபத்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைப்பெற்றது என்று கூட தெரியாமல், பலர் அஜித்தை திட்டி வருகின்றனர். 

7 /8

அஜித், பெரும்பாலான பைக்-கார் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கு ஸ்டண்ட் வைத்துகொள்ள மாட்டார் என அனைவருக்கும் தெரியும். அதை நினைவு படுத்தும் வகையில் உள்ளது, இந்த மீம்.

8 /8

“ஒரு வேளை, இதுதான் ஆரவ்வின் மைண்ட் வாய்ஸாக இருந்திருக்குமோ?