விடாமுயற்சி படத்தில் அஜித்-த்ரிஷாவின் பெயர் என்ன தெரியுமா?

Vidaa Muyarchi Update: அஜித்குமார் ஹீரோவாக நடிக்கும் விடா முயற்சி படத்தில், அவரது பெயர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் படம், விடாமுயற்சி. இந்த படத்தில் அஜித்குமார் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடிப்பதாக கூறப்படுகிறது. அஜர்பைஜானில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைப்பெற்று வந்ததை தொடர்ந்து, இது குறித்த அப்டேட் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. 

1 /7

அஜித் கிட்டத்தட்ட 30 வருடங்களாக தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். இவர், தற்போது நடித்து வரும் படம் விடாமுயற்சி. இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார். விடாமுயற்சி படத்தில் அஜித்திற்கு ஜோடியாக த்ரிஷா நடிப்பதாக கூறப்படுகிறது. 

2 /7

அஜித்தும் த்ரிஷாவும் பல படங்களில் ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். குறிப்பாக இவர்கள் சேர்ந்து நடித்த மங்காத்தா படம் மெகா ஹிட் அடித்தது. 

3 /7

அஜித்-த்ரிஷா கடைசியாக ஜோடி போட்டு நடித்த படம், என்னை அறிந்தால். இந்த படத்தில் த்ரிஷா பரத நாட்டிய கலைஞராக நடித்திருப்பார். 2015ஆம் ஆண்டு வெளியான இந்த படத்திற்கு பிறகு இவர்கள் தற்போது விடாமுயற்சி படத்தில்தான் ஒன்றிணைந்துள்ளனர். 

4 /7

விடாமுயற்சி படத்தின் அறிவிப்பு, பல மாதங்களுக்கு முன்பே வெளியானது. ஆனால், அஜித் தனது பைக் டூரில் பிசியாக இருந்ததால் படப்பிடிப்பு தள்ளிப்போனது. இந்த நிலையில், சில வாரங்களுக்கு முன்புதான் அஜர் பைஜான் நாட்டில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு நடந்தது. 

5 /7

விடாமுயற்சி படத்தில் அஜித் மற்றும் த்ரிஷாவின் கதாப்பாத்திரங்களின் பெயர் விவரம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. 

6 /7

இந்த படத்தில், அஜித் அர்ஜுன் என்ற கதாப்பாத்திரத்திலும், த்ரிஷா கயல் என்ற கதாப்பாத்திரத்திலும் நடிக்கின்றனராம். இவர்கள் குறித்த காட்சிகள் ஏற்கனவே படமாக்கப்பட்டு விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படத்தில் த்ரிஷா இல்லாமல் இன்னொரு முக்கிய பெண் கதாப்பாத்திரமாக ரெஜினா கசாண்ட்ரா நடிக்கிறார். 

7 /7

விடாமுயற்சி படத்தின் இயக்குநர் மகிழ் திருமேனி ஏற்கனவே தமிழில் பல க்ரைம் த்ரில்லர் படங்களை எடுத்துள்ளார். இதையடுத்து அவர் எடுக்கும் விடாமுயற்சி படமும் நல்ல ஆக்‌ஷன் த்ரில்லராக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.