சென்னையில் அதிசயம்! சர்வதேச விண்வெளி நிலையத்தை இன்று வெறும் கண்ணில் பார்க்கலாம் - எப்படி?

International Space Station: சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையம் சென்னையில் இருந்து வெறும் கண்களால் இன்றிரவு பார்க்கலாம் என நாசா (NASA) அறிவித்துள்ளது. அதுகுறித்து இங்கு காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : May 10, 2024, 04:21 PM IST
  • இன்றிரவு 7.09 மணி முதல் 7 நிமிடங்கள் வரை அதை பார்க்கலாம்.
  • இதனை வெறு்ம கண்களாலும் பார்க்கலாம்.
  • பூமியில் இருந்து 500 கி.மீ., தொலைவில் உள்ளது.
சென்னையில் அதிசயம்! சர்வதேச விண்வெளி நிலையத்தை இன்று வெறும் கண்ணில் பார்க்கலாம் - எப்படி? title=

International Space Station Visible In Chennai: சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையம் பூமியில் இருந்து 500 கி.மீ., உயரத்தில் விண்வெளியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. அது தொடர்ந்து பூமியை சுற்றி வரும். அதாவது நாள் ஒன்றுக்கு 12 முறை பூமியை இந்த சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையம் சுற்றி வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இங்கு தொடர்ந்து விண்வெளியில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில், சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையம் சரியாக இன்று இரவு 7.09 மணிக்கு சென்னையை கடக்கும் என நாசா கணித்துள்ளதாக கூறப்புடுகிறது. எனவே, இரவு 7.09 மணியில் இருந்து சுமார் 7 நிமிடங்களுக்கு சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை சென்னையில் இருந்து வெறும் கண்களால் பார்க்கலாம் என நாசா தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

மேலும் படிக்க | நெக்ஸான் சிஎன்ஜி vs மாருதி பிரெஸ்ஸா : விலை, மைலேஜ் என எந்த கார் பெஸ்ட் தெரியுமா?

பிரகாசமாக தெரியும்

அதுவும் சென்னையின் நிலப்பரப்பை கடக்கும்போது மிகவும் பிரகாசமாக வானில் தெனப்படும் எனவும் கூறப்படுகிறது. அதாவது பிரகாசமான நட்சத்திரம் போல் அதனை பார்க்கலாம் எனக் கூறப்படுகிறது. மணிக்கு 28 ஆயிரம் கி.மீ வேகத்தில் இந்த ஆய்வு மையம் செல்லும் என்பதால் வெறும் 7 நிமிடங்களில் சென்னை நிலப்பரப்பை கடந்துவிடும் என கூறப்படுகிறது. மேலும், இது பல ஆண்டுகளுக்கு ஒருமுறையே நிகழும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

சர்வதேச விண்வெளி நிலையம் ஐந்து நாடுகளின் விண்வெளி ஆய்வு மையங்களால் நிர்வகிக்கப்படுகிறது. அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், கனடா ஆகிய நாடுகள் இதனை நிர்வகிக்கின்றன. இந்த சர்வதேச விண்வெளி நிலையம் 1998ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த சர்வதேச விண்வெளி நிலையம் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு பிரிவு ரஷ்யாவுடையது, மற்றொரு பிரிவு அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பா, கனடா ஆகியவைக்கு உரியது.

வெறும் கண்ணிலேயே பார்க்கலாம்

பூமியில் விண்கற்களால் ஏதும் பாதிப்பு ஏற்படுகிறதா, சூரிய கதிர்களால் ஏதும் பிரச்னை வருகிறதா என்பவற்றை இந்த சர்வதேச விண்வெளி நிலையம் ஆய்வு செய்யும். மேலும், பூமியில் இருந்து விண்வெளிக்கு அனுப்பப்படும் செயற்கைகோள்கள் மற்றும் விண்கலன்களை ஒருங்கிணைக்கும் பணியையும் இந்த விண்வெளி மையம் மேற்கொள்கிறது. விண்வெளியில் மனிதர்களால் செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு நிலையமாக இது அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையத்தில் விஞ்ஞானிகள் தங்கி அங்கு ஆய்வு மேற்கொள்வார்கள்.

இன்று காலையில் மேகக்கூட்டங்கள் இருந்தாலும், இரவில் மேகங்கள் பெரிதாக இருக்காது என்றே கூறப்படுகிறது. மேகங்கள் இல்லாதபட்சத்தில் வீட்டு மொட்டை மாடியில் இன்று பார்த்தால் வெறும் கண்ணிலேயே பார்க்கலாம் என கூறப்படுகிறது. மேலும், இந்த நிலையம் பெங்களூரு திசையில் இருந்து வங்கக்கடல், அந்தமான் தீவுகள் திசை நோக்கி நகரும் எனவும் கூறப்படுகிறது. குறிப்பாக, சென்னை பெரியார் அறிவியல் மையத்தில் இதனை காண சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | உடனடியாக ஆதார் கார்டு தேவைப்பட்டால் ஆன்லைனில் பெறுவது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News