எட்டாவது ஊதியக் குழுவை அமல்படுத்த வேண்டும் என்று மத்திய பணியாளர்கள் அமைப்பினர் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அடுத்த ஊதியக்குழுவை அமைப்பது குறித்து மோடி அரசு இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை.
எட்டாவது ஊதியக் குழுவைத் திட்டமிடுவது தொடர்பான பார்முலாவைத் தயாரிக்கும் பணியில் மத்திய அரசு மும்முரமாக ஈடுபட்டு வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
8வது சம்பள கமிஷன் அமல்படுத்தப்பட்டாலோ அல்லது ஃபிட்மென்ட் ஃபாக்டரின் சதவீதத்தை அரசு உயர்த்தினாலோ மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு உயரும்.
மத்திய பணியாளர்களுக்கு 2.57 சதவீத ஃபிட்மென்ட் பேக்டர் உள்ளது. இதன்படி மத்திய ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.18,000 ஆகும்.
ஃபிட்மென்ட் ஃபாக்டர் 3.68 சதவீதமாக உயர்ந்தால், குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் 44 சதவீதத்திற்கு மேல் அதாவது நேரடியாக ரூ.18,000 -இலிருந்து ரூ.26,000 ஆக உயரும்.
புதிய ஊதியக் குழுவின் பரிந்துரைகள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை அமல்படுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 2013ல், 7வது சம்பள கமிஷன் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு 2016-ம் ஆண்டு அது அமல்படுத்தப்பட்டது.