இபிஎஃப் உறுப்பினர்களுக்கான (EPF Members) குறைந்தபட்ச மாத ஓய்வூதியத்தை ரூ.9,000 ஆக உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து EPFO வாரிய கூட்டத்தில் விரைவில் முடிவெடுக்கப்படும் என கூறப்படுகின்றது,
இது தவிர, EPS கணக்கிடுவதற்கான சம்பள வரம்பை ரூ.15,000 லிருந்து ரூ.21,000 ஆக உயர்த்துவது குறித்து பரிசீலிக்க தொழிலாளர் அமைச்சகம் சமீபத்தில் நிதி அமைச்சகத்திடம் முன்மொழிந்துள்ளது.
இதற்கு அனுமதி அளிக்கப்பட்டால், லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்கள் அதிகரிக்கப்பட்ட குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியத்தின் பலனைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
EPS ஓய்வூதிய நிதியின் பலன்களைப் பெற, ஊழியர் EPF இல் உறுப்பினராக இருக்க வேண்டும். இபிஎஃப் சந்தாதாரர்களின் (EPF Subscrobers) பணிக்காலம் குறைந்தது 10 ஆண்டுகள் இருக்க வேண்டும்.
பணியாளருக்கு குறைந்தபட்சம் 58 வயதான பின்னர்தான் ஓய்வூதியம் கிடைக்கும். ஓய்வூதியம் பெறுவதற்கான விருப்பத்தை 50 வயது முடிந்த பிறகும் 58 வயதுக்கு முன்பும் தேர்வு செய்யலாம்.
பணியாளர்கள் விரும்பினால், அவர்கள் 58 ஆண்டுகள் முடிந்த பிறகும் EPS ஓய்வூதிய நிதியில் பங்களிக்கலாம். 58 வயது அல்லது 60 வயது முதல் ஓய்வூதியத்தைப் பெறத் தொடங்கலாம்.
ஊழியர் இறந்தால், அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் பெற உரிமை உண்டு.