EPFO வழங்கும் கூடுதல் போனஸ் 'லாயல்டி கம் லைஃப் பெனிஃபிட்' என்பதன் கீழ் வருகிறது. இதற்கு சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.
இந்த போனஸ் குறைந்தபட்சம் 20 வருடங்களாக இபிஎஃப் கணக்கில் (EPF Account) பங்களிக்கும் ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது.
இந்த போனஸ் ஊழியரின் அடிப்படை சம்பளத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
அதிகபட்ச போனஸ் தொகை ரூ.50,000 வரை இருக்கக்கூடும். இது பல வித காரணிகளை பொறுத்து மாறுபடும்.
போனஸைப் பெற குறைந்தபட்சம் 20 வருட சேவை தேவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சேவைக்காலத்தை முடிக்காத பணியாளர்களுக்கு இந்த போனஸ் பெற தகுதி இருக்காது.
இபிஎஃப்ஒ போனஸ் ஓய்வு பெறும்போது கிடைக்கும். இபிஎஃப்ஓ ஊழியர்களுக்கு ஓய்வுக்குப் பிறகு கூடுதல் நிதிப் பாதுகாப்பை வழங்கும் நோக்கில் இந்த கூடுதல் போனஸ் வசதியைத் தொடங்கியுள்ளது.
20 வருட சேவையை முடித்திருக்கும் இபிஎஃப் உறுப்பினர்கள், அவர்களது அடிப்படை சம்பளத்திற்கு ஏற்ப கூடுதல் போனஸுக்கு விண்ணப்பிக்கலாம்.
இந்த செயல்முறையை ஆன்லைனிலும் செய்யலாம். ஆன்லைனில் இதை எளிதாக கிளெய்ம் செய்ய முடியும்.