7 சதவிகிதத்தை விட அதிக வட்டி அளிக்கும் அசத்தலான தபால் நிலைய சேமிப்பு திட்டங்கள் பற்றி இங்கே காணலாம்.
Post Office Time Deposit Scheme: போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட் திட்டமான POMIS -இல் 3 வருடங்கள் டெபாசிட் செய்தால் 7.1 சதவிகிதம் வட்டியும், 5 வருடங்கள் டெபாசிட் செய்தால் 7.5 சதவிகிதம் வட்டியும் கிடைக்கும்.
Post Office Monthly Income Scheme: அஞ்சல் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் என்பது ஒவ்வொரு மாதமும் வருமானத்தை வழங்கும் திட்டமாகும். இதில் உங்களுக்கு 7.4 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
Public Provident Fund: நீண்ட காலத்திற்கு முதலீடு செய்பவர்களுக்கு PPF ஒரு சிறந்த திட்டமாகும். EEE வகையின் இந்தத் திட்டத்தில், வரிச் சலுகைகளையும் பெறலாம். தற்போது இதில் 7.1 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.
National Saving Certificate: NSC எனப்படும் இந்தத் திட்டம் 5 ஆண்டு கால வைப்புத் திட்டமாகும். இதில் 7.7 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. மொத்த தொகையை டெபாசிட் செய்தால், 5 ஆண்டுகளில் நல்ல பணம் சம்பாதிக்கலாம்.
Mahila Samman Savings Certificate: அஞ்சலகத்தின் MSSC திட்டம் பெண்களுக்காக மட்டுமே செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில் 2 ஆண்டுகளுக்கு பணம் டெபாசிட் செய்யப்படுகிறது. தற்போது இத்திட்டத்திற்கு 7.5 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
இந்த செய்தி உங்கள் தகவலுக்காக மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. முதலீடு செய்யும் முன், உங்கள் நிதி ஆலோசகரை கலந்தாலோசிக்க அறிவுறுத்தப்படுகிறது.