முதுமை காலத்தில் ஓய்வூதியம் யாரையும் சாராமல் சுதந்திரமாக வாழ்க்கை நடத்த உதவும்.
இளமையாக இருக்கும் போதே, சேமிக்க தொடங்கினால் முதுமை காலத்தில் யாரையும் சாராமல் இருக்கலாம்.
மத்திய அரசின் அடல் பென்ஷன் திட்டம், அரசு வேலையில் இல்லாதவர்களுக்கு ஓய்வூதியம் பெற உதவும் திட்டம்.
மத்திய அரசின் இந்தத் திட்டம், உத்திரவாத வருமானம் அளிக்க கூடியது.
அடல் பென்ஷன் திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் முதலீடு செய்து வந்தால் 1000 முதல் 5000 ரூபாய் வரை ஓய்வூதியம் பெறலாம்.
வருமான வரி செலுத்தாத, 18 வயது முதல் 40 வயது வரை உள்ள அனைவரும் இந்தத் திட்டத்தில் செய்த தகுதியானவர்கள். 20 ஆண்டுகள் முதலீடு செய்ய வேண்டும்.
தகுதியானவர்கள், மாதம் 210 முதலீடு செய்வதன் மூலம் வாயில் ஓய்வூதியமாக பெறலாம்.
அடல் பென்ஷன் திட்டத்திற்கான முதலீட்டிற்கு வருமான வரி விலக்கும் உண்டு.