பணியாளர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், பணி ஓய்வுக்குப் பிறகு எவ்வளவு ஓய்வூதியம் (Pension) கிடைக்கும்?
நிறுவனங்கள் இபிஎஃப் உறுப்பினரின் (EPF MEmbers) சம்பளத்தில் 3.67 சதவீதத்தை EPF கணக்கிலும், 8.33 சதவீதத்தை EPS கணக்கிலும் டெபாசிட் செய்கின்றன.
EPS -இல் பணியாளர்களுக்கான ஓய்வூதியம் இந்த சூத்திரத்தின் படி கணக்கிடப்படுகின்றது: இபிஎஸ் = சராசரி சம்பளம் x ஓய்வூதிய சேவை/70 (EPS = Average Salary x Pensionable Service/70)
சராசரி சம்பளம் என்பது அடிப்படை சம்பளம் (Basic Salary) + அகவிலைப்படி (Dearness Allowance) ஆகும்.
இது கடந்த 12 மாதங்களின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான அதிகபட்ச ஓய்வூதிய சேவை ஆண்டுகள் 35 ஆகும்.
ஓய்வூதியம் பெறக்கூடிய அதிகபட்ச சம்பளம் 15,000 ரூபாய். இதன் படி, ஓய்வூதியத்தின் அதிகபட்ச மாதாந்திர தொகை = ரூ.15,000×8.33= ரூ.1250.
அதிகபட்ச பங்களிப்பு மற்றும் சேவை ஆண்டுகளின் அடிப்படையில் EPS ஓய்வூதியக் கணக்கீடு: EPS = 15000 x35/70 = மாதத்திற்கு ரூ 7,500.
அதாவது பணியாளர்களுக்கு இபிஎஸ் மூலம் கிடைக்கும் ஓவூதியம் அதிகபட்சமாக ரூ.7,500 வரையிலும், குறைந்தபட்சமாக ரூ.1,000 வரையிலும் இருக்கும்.