சூரியன், ஆகஸ்ட் 16ம் தேதியன்று கடக ராசியில் இருந்து சிம்மத்திற்கு மாறியதும் ஆவணி மாதம் தொடங்கியது.
ஆவணி மாதம் தொடங்கியது முதலே தொடர்ந்து பண்டிகைகள் வந்துக் கொண்டே இருக்கும். நாளை ஆவணி மாத பெளர்ணமி நாள்
ஆவணி மாதம் வரும் பெளர்ணமி நாளன்று அவிட்ட நட்சத்திரம் கூடி வருவது வழக்கம். இந்த ஆணு ஆவணி அவிட்டம் ஆகஸ்ட் 19ம் நாளன்று வருகிறது
ஆவணி அவிட்டம் நாளன்று, பூணூல் போடுகிறவர்கள், அதனை மாற்றுவது வழக்கம். காயத்ரி மந்திரத்திற்கு உரிய நாள் ஆவணி அவிட்டம்
ஆவணி மாதம் வரும் சதுர்த்தி மிகவும் விசேஷமானது. கணபதியைத் தொழுவதற்கும், சதுர்த்தி விரதம் தொடங்குவதற்கும் பிள்ளையார் சதுர்த்தி உகந்தது
ஆவணி மாத பெளர்ணமி நாளன்று செய்யும் பூஜைகள் மனதில் பலத்தை கூட்டும், சிந்தனைத் தெளிவைக் கொடுக்கு
பெளர்ணமி நாளன்று சிவன் மற்றும் பார்வதியை வணங்குவதும், விரதம் இருப்பதும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
ஆவணி மாதம் தான் கிருஷ்ணர் அவதரித்தார். தின்பண்டங்களை விரும்பு உண்ணும் கண்ணனுக்கு உரிய கிருஷ்ண ஜெயந்தியன்று, பலகாரங்கள் செய்து படைப்பது வழக்கம்
பாரம்பரிய நம்பிக்கைகள், தொன்றுதொட்டு தொடரும் நம்பிக்கைகள், பழக்கவழக்கங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையின் உள்ளடகத்திற்கு ஜீ மீடியா பொறுப்பேற்காது