பெண்களுக்கான திட்டம்

அரசாங்கம் பெண்களுக்கான பிரத்யேகமான மகிளா சம்மான் சேமிப்பி பத்திர திட்டத்தை (MSSC) தொடங்கியுள்ளது.

Sripriya Sambathkumar
Sep 06,2023
';

MSSC

ஏப்ரல் 2023 முதல் மார்ச் 2025 வரை பெண்கள் இதில் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம்.

';

வட்டி விகிதம்

இதில் ஒவ்வொரு மாதமும் பெண்கள் ரூ. 1,000 முதல் 2 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். இந்த திட்டத்தில் 7.5% வட்டி கிடைக்கும்.

';

கணக்கை தொடங்க

இந்த கணக்கை தொடங்க அருகில் உள்ள தபால் அலுவலகம் சென்று படிவம்-1 -ஐ நிரப்ப வேண்டும். இதனுடன் ஆதார் அட்டை, பேன் அட்டை உள்ளிட்ட கேஒய்சி ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

';

6 மாதங்கள்

இந்த கணக்கை 6 மாதங்களுக்கு பிறகு மூடலாம். அப்போது 2% வட்டி கழிக்கப்பட்டு 5.5% வட்டி கிடைக்கும்.

';

2 ஆண்டுகள்

இதன் முதிர்வு காலம் 2 ஆண்டுகள் ஆகும்.

';

வங்கிகள்

நிதி அமைச்சகத்தின் அறிவிப்பின் படி சில பட்டியலிடப்பட்ட பொது மற்றும் தனியார் வங்கிகளில் இந்த கணக்கை திறக்கலாம்.

';

இங்கெல்லாம் திறக்கலாம்

இ-கெசட் அறிவிப்பின்படி, பாங்க் ஆஃப் பரோடா, கனரா வங்கி, பாங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி லிமிடெட் மற்றும் ஐடிபிஐ வங்கியில் எம்எஸ்எஸ்சி கணக்கைத் திறக்கலாம்.

';

VIEW ALL

Read Next Story