Business Idea: பண்டிகை காலத்தில் கைகொடுக்கும் ‘5’ சூப்பர் பிஸினஸ்!

Vidya Gopalakrishnan
Oct 09,2023
';

வியாபாரம்

தீபாவளி, நவராத்திரி என எதுவாக இருந்தாலும், ஒவ்வொரு பண்டிகையிலும் பூஜை மற்றும் பண்டிகை தொடர்பான பொருட்களின் தேவை மிகவும் அதிகரிக்கிறது. இதனை பயன்படுத்திக் கொண்டு சில தொழிலைத் தொடரலாம். குறைந்த முதலீட்டில் நீங்கள் பண்டிகைக் காலத்தில் பெரும் வருமானம் ஈட்டலாம்

';

பண்டிகை

இந்தியா திருவிழாக்கள் நிறைந்த நாடு. தற்போது, நவராத்திரி, தீபாவளி, கார்த்திகை போன்ற பண்டிகைகள் வருகின்றன. இந்த காலகட்டத்தில், குறிப்பிட்ட சில வணிகம் இரண்டு மாதங்களில் உங்களுக்கு பம்பர் லாபத்தைக் கொண்டுவரும்.

';

பூஜை பொருட்கள்

நவராத்திரியின் போது மட்டுமின்றி பூஜை பொருட்களுக்கான தேவை எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். குங்குமம், விபூதி, தூபம், தீபம், ஊதுபத்தி, கற்பூரம் மற்றும் பிற பொருட்களை விற்பனை செய்யும் பிஸினஸை தொடங்க, நீங்கள் ரூ. 5000- ரூ.7000 முதலீடு செய்ய வேண்டும்.

';

கொலு பொம்மை

நவராத்திரியில், கொலு பொம்மைகள் வியாபாரமும் முழு வீச்சில் இயங்கும். மண் அல்லது காகித கூழ்கள் மற்றும் பிற பொருட்களால் செய்யப்பட்ட கொலு பொம்மைகள் விற்று சம்பாதிக்கலாம்.

';

மண் விளக்கு

தீபத் திருநாளில் அகல் விளக்குகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. விளக்குகளை குயவர்கள் மூலம் நேரிடையாக கொள்முதல் செய்து, வித்தியாசமான முறையில் வடிவமைக்கலாம். இப்போதெல்லாம், டிசைனர் விளக்குகளுக்கும் அதிக தேவை உள்ளது.

';

மின்விளக்கு

தீபாவளி பண்டிகையையொட்டி, வீடு, கடை அல்லது அரசு கட்டிடம் என அனைத்தும் வண்ணமயமான மின்விளக்குகளால் அலங்கரிக்கப்படும். அலங்கார விளக்குகளின் வியாபாரத்தை சிறிய அளவில் தொடங்கலாம். மொத்த சந்தையில் வாங்கி உங்கள் அருகிலுள்ள சந்தையில் சில்லறை விற்பனையில் விற்கலாம்.

';

அலங்கார பொருட்கள்

தீபாவளி வரை இந்த அலங்காரப் பொருட்களுக்கு நல்ல கிராக்கி உள்ளது. இந்த அலங்காரப் பொருட்களை உங்களது படைப்பாற்றல் மூலம் நீங்களே தயார் செய்யலாம் அல்லது மொத்த சந்தையில் இருந்து வாங்கி சில்லறை விற்பனை செய்து நல்ல லாபம் சம்பாதிக்கலாம்.

';

VIEW ALL

Read Next Story