ஐஸ் கட்டி இந்தியாவுக்குள் நுழைந்த வரலாறு தெரியுமா?

';


இன்று வீட்டுக்கு வீடு குளிர்சாதனப் பெட்டி யில் ஐஸ் தயாரித்துக்கொள்கிறோம். வீதிக்கு வீதி ஐஸ்கிரீம் கடைகள் இருக்கின்றன. ஐஸ் கட்டிகளின் பின்னேயும்கூட கரையாத வரலாறு ஒன்று இருக்கிறது தெரியுமா?

';


175 வருடங்களுக்கு முன், ஒரு சாதாரண மனிதன் ஐஸ் கட்டி வாங்க வேண்டும் என்றால், அவன் டாக்டர் சர்ட்டிஃபிகேட் வாங்கிக்கொண்டு போக வேண்டும். காரணம், ஐஸ் கட்டி அவ்வளவு எளிதாகக் கிடைக்காது. மருத்துவர்களுக்கும் பிரபுக்களுக்கும் மட்டுமே ஐஸ் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

';


அதுவும், அமெரிக்காவில் இருந்து இறக்குமதியான ஐஸ்.இந்தியாவுக்கு ஐஸ் அறிமுகமானதன் பின்னால் மிகப் பெரிய கதை இருக்கிறது. சென்னையில் வசிக்கும் பலருக்கும் கடற்கரை சாலையில் உள்ள விவேகானந்தர் இல்லம் தெரிந்து இருக்கும்.

';


அந்த இடத்தை இன்றும் 'ஐஸ் ஹவுஸ்’ என்றுதான் அழைக்கிறார்கள். அங்கு வைத்து தான் ஆங்கிலேயர்கள் ஐஸ் வணிகம் செய்தனர். இந்தியாவிற்கு முதன்முதலாக கல்கத்தாவுக்கு செப்டம்பர் 14-ம் தேதி, 1833-ல் வந்திறங்கியது.

';


அதாவது, இந்தியாவில் முதன்முதலாக ஐஸ்கட்டிகள் நுழைந்த தினம். அமெரிக்காவின் போஸ்டன் நகரில் இயற்கையாக உருவான பனிக் கட்டிகளை வெட்டி எடுத்து இந்தியாவுக்கு அனுப்பி, வருடத்துக்கு இரண்டு லட்சம் டாலர்கள் பணம் சம்பாதித்த ஃபிரெட்ரிக் டூடர்.

';


ஜனவரி மாதத்தில் அமெரிக்காவில் உள்ள குளங்கள், ஏரிகள் உறைந்துபோய் பனிப் பாளங்கள் ஆகிவிடும். வீணாகக்கிடக்கும் அந்தப் பனிக் கட்டிகளை வெட்டி எடுத்து கப்பலில் வேறு நாடுகளுக்கு அனுப்பி, ஒரு புதிய வணிகத்தை மேற்கொள்ளலாமே என்ற எண்ணம், டூடருக்கு உருவானது.

';


மேற்கிந்தியத் தீவுகளுக்கு ஐஸ் அனுப்பும் வணிகத்தைத் தொடங் கினார். ஆனால், அவர் நினைத்தது போல ஐஸ் கட்டிகளை, உருகாமல் கப்பலில் கொண்டுபோக முடியவில்லை. 100 டன் ஐஸ் கட்டிகளை கப்பலில் அனுப்பினால் போய்ச் சேரும்போது, அதில் 80 டன் கரைந்துபோயிருக்கும்.

';


ஆகவே, உருகாமல் பனிக் கட்டிகளை அனுப்புவதற்காக அவர் வைக்கோல் சுற்றிய பெட்டிகளில் அனுப்பத் தொடங்கினார். அப்படியும் பாதி ஐஸ்கட்டிகள் உருகின.1830-ம் ஆண்டு ஐஸ் கட்டிகள் விற்பனையில் இருந்து மாறி, காபி வணிகத்தில் ஈடுபட்ட டூடர் பெருத்த நஷ்டத்தைச் சந்தித்தார்.

';


இரண்டு லட்சம் டாலருக்கும் மேலாகக் கடன் அவருக்கு ஏற்பட்டது. அந்தக் கடனைத் திருப்பிக் கொடுக்க முடியத அவர் மீது, கடன்காரர்கள் வழக்கு தொடுத்தார்கள். சிறையில் அடைக்கப்பட்டார்.

';


அதில் இருந்து, தற்காலிகமாக மீண்டு வந்த டூடரிடம் அவரது நண்பரான சாமுவெல் ஆஸ்டின், தான் இந்தியாவில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதற்காக ஒரு கப்பல் வைத்திருப்பதாகவும், அது அமெரிக்காவில் இருந்து இந்தியா போகும்போது காலியாகத்தான் போகிறது என்பதால், அதை டூடர் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் உதவ முன்வந்தார்.

';


அதன்படி, 1833-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கல்கத்தாவை வந்து அடைந்தது டூடரின் கப்பல். அப்போது நுழைந்த ஐஸ்கட்டி இப்போது பரிணாம வளர்ச்சி அடைந்து செயற்கையாக உருவாக்கும் அளவுக்கு விஞ்ஞானமும் உலகமும் வளர்ந்திருக்கிறது.

';

VIEW ALL

Read Next Story