போனஸ் பொதுவாக ஊழியரின் அடிப்படை சம்பளம் (Basic Salary) மற்றும் அகவிலைப்படியின் (Dearness Allowance) அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
ஒரு ஊழியர் ஒரு நிறுவனத்தில் குறைந்தது 12 மாதங்கள் பணிபுரிந்திருந்தால், அவருக்கு அவரது அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியில் குறைந்தபட்சமாக 8.33% மற்றும் அதிகபட்சமாக 20% வரை போனஸ் கிடைக்க வாய்ப்புள்ளது.
நிறுவனத்தில் ஊழியர் பணிபுரிந்திருக்கும் கால அளவு மற்றும் அவரது தகுதி ஆகியவையும் போனஸ் கணக்கீட்டில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
பண்டிகை கால போனஸ் நிறுவனங்கள் மூலம், தீபாவளி, பொங்கல், நவராத்திரி போன்ற விசேஷங்களின் போது வழங்கப்படுகிறது. செயல்திறன் அடிப்படையிலான போனஸ் பணியாளரின் தனிப்பட்ட பணி செயல்திறன் அடிப்படையில் வழங்கப்படுகிறது.
போனஸை நிர்ணயிப்பதில் நிறுவனத்தின் லாபமும் ஒரு முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது. ஒரு நிறுவனம் அந்த நிதியாண்டில் நல்ல லாபம் ஈட்டியிருந்தால், ஊழியர்களுக்கு அதிக போனஸ் கிடைக்கும்.
அரசு ஊழியர்களுக்கு, இந்த விதிகள் சற்று வித்தியாசமாக இருக்கும். ஏனெனில் அவர்களின் போனஸ் அரசாங்கத்தால் தீர்மானிக்கப்படுகின்றது. இவை நிலையான கொள்கைகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன.
போனஸைக் கணக்கிட, சராசரி சம்பளம் 30.4 ஆல் வகுக்கப்படுகிறது. அதன் பின்னர் அது 30 நாட்களால் பெருக்கப்படுகிறது.
ஒரு பணியாளரின் மாதச் சம்பளம் ரூ.7,000 எனில், அவரது போனஸ் தொகையின் தோராயமான கணக்கீடு இப்படி இருக்கும். போனஸ்=சராசரி சம்பளம் {(ரூ.7,000) / 30.4} × 30 = ரூ.6,908